Wednesday, September 4, 2013

அர்த்த உயிரும் வார்த்தைப் பிணமும்

மனப்பேய்க்கு வாக்கப்பட்ட பகுத்தறிவு
கைபிசைந்தபடி தலைகுனிந்தபடி
நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்ற
வாசகங்களைப் படித்தபடி
பேயின் விரல்பிடித்தபடி
"பாருக்குள் "தயங்கித் தயங்கி நுழையும்

உடலுக்கு வாக்கப்பட்ட மனஉணர்வுகள்
தெம்பிருந்தும் ஆசையிருந்தும்
பெட்டிக்குள் அடங்கிய நாகமாய்
இற்றுப்போன உடலுக்கடங்கியபடி
தன்னைத்தானே கழுவிலேற்றியபடி
உடலுக்குத் தக்கபடி
கூனிக் குறுகித் தள்ளாடி நடக்கும்

வார்த்தைக்கு வாக்குப்பட்ட அர்த்தங்கள்
வார்த்தையை மீறிய வலுவிருந்தும்
வார்த்தைகளின் பலவீனமறிந்தும்
ஜாடியில் அடைபட்ட பூதமாய்
ஊமையன் கண்ட பெருங்கனவாய்
தன்னைத் தானே சுருக்கியபடி
கவிதைக்குள் தன்னை ஒடுக்கியபடி
அடுக்கிய பிணத்துள்  அடங்கித் தவிக்கும்

36 comments:

Anonymous said...

மூன்று சம நிகழ்வுகளில் என்னை
மிகவும் கவர்ந்தது உடலுக்கு வாக்கப்பட்ட மனசே !
கடினக் கட்டாயங்கள் !


கவியாழி said...

தெம்பிருந்தும் ஆசையிருந்தும்
பெட்டிக்குள் அடங்கிய நாகமாய் ?
சிலநேரங்களில் உண்மைதான்

கே. பி. ஜனா... said...

மிக அருமை!

இளமதி said...

மூன்றும் மூன்றுவிதமான அர்த்தங்கள் நிரம்பிய கவிதை ஐயா!
அருமையான கற்பனை! கற்பனையல்ல நிஜங்களே!

//வார்த்தைக்கு வாக்குப்பட்ட அர்த்தங்கள்
வார்த்தையை மீறிய வலுவிருந்தும்
வார்த்தைகளின் பலவீனமறிந்தும்
ஜாடியில் அடைபட்ட பூதமாய்........//

என்னை நிறுத்திவைத்தது மூன்றாம் பகுதிக்
கவிதை வரிகள்...

மிக மிகச் சிறப்பு ஐயா!
வாழ்த்துக்கள்!

த ம.4

கோமதி அரசு said...

மன உண்ர்வுகளின் ஆதங்கவெளிப்பாடு அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

இப்படி எழுத தங்களால் மட்டுமே முடியும் ஐயா. நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

மனப்பேய், உடல், வார்த்தை....

மிகவும் அருமை குரு....

Unknown said...

மனப்பேய்க்கு வாக்கப்பட்ட பகுத்தறிவு
கைபிசைந்தபடி தலைகுனிந்தபடி
நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்ற
வாசகங்களைப் படித்தபடி
பேயின் விரல்பிடித்தபடி
"பாருக்குள் "தயங்கித் தயங்கி நுழையும்

அழகாகாச் சொன்னீர்கள் இரமணி! மனம் பேய்தான் அதில் ஐயமில்லை அருமை!
பதிவர் சந்திப்பின் காரணமாக தங்களோடு கழித்த மூன்று தினங்களும் மறக்க முடியாத நாட்கள்! நன்றி!

உஷா அன்பரசு said...

மூன்று விதமான கோணங்கள்.. அருமை!

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமை....

சக்தி கல்வி மையம் said...

தன்னைத் தானே சுருக்கியபடி
கவிதைக்குள் தன்னை ஒடுக்கியபடி
அடுக்கிய பிணத்துள் அடங்கித் தவிக்கும்// அருமை..

சசிகலா said...

மாறுபட்ட கோணத்தில் தங்கள் சிந்தை மிகவும் சிறப்பு ஐயா.

”தளிர் சுரேஷ்” said...

மனதிற்கும் செயலுக்கும் உள்ள வேறுபாடுகளை மூன்றுவிதத்தில் முத்தாய்ப்பாய் உணர்த்திய கவிதை! அருமை! நன்றி ஐயா!

நிலாமகள் said...

தலைப்பே கொல்லுதே...

துரைடேனியல் said...

மனப்பேய் தின்ற எச்சங்களைத்தான் வாழ்க்கைத்துளிகளாய் களித்து மகிழ்கிறோம். பேய்க்கும் நோய்க்குமாய் வாழும் நாம் நமக்காய் ஒருபோதும் வாழ்வதே இல்லை. அருமையான சிந்தனை. நறுக் வரிகள்!

மாதேவி said...

மூன்று கோணத்தில் வெளிப்பாடு அருமை.

Anonymous said...

வணக்கம்
ஐயா

கவிதை அருமை சொல்லவார்தைகள் இல்லை வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...


வார்த்தைக்கு வாக்கப் பட்ட அர்த்தங்கள், கவிதைக்குள் தன்னை ஒடுக்கியபடி அடுக்கிய பிணத்துள் (?_)அடங்கித் தவிக்கும் . நன்றாகப் புரிந்து கொள்ள நோட்ஸ் தேவைப் படுகிறது( எனக்கு)

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி said...//
மூன்று சம நிகழ்வுகளில் என்னை
மிகவும் கவர்ந்தது உடலுக்கு வாக்கப்பட்ட மனசே

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி




Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் said...//
தெம்பிருந்தும் ஆசையிருந்தும்
பெட்டிக்குள் அடங்கிய நாகமாய் ?
சிலநேரங்களில் உண்மைதான்

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... said...//
மிக அருமை

!தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இளமதி said...//
மூன்றும் மூன்றுவிதமான அர்த்தங்கள் நிரம்பிய கவிதை ஐயா!
அருமையான கற்பனை! கற்பனையல்ல நிஜங்களே!

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


!

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு said...//
மன உண்ர்வுகளின் ஆதங்கவெளிப்பாடு அருமை

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////


.

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் said...//
இப்படி எழுத தங்களால் மட்டுமே முடியும் ஐயா. நன்றி

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ said...
மனப்பேய், உடல், வார்த்தை....
மிகவும் அருமை குரு...

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...


புலவர் இராமாநுசம் said...//
அழகாகாச் சொன்னீர்கள் இரமணி! மனம் பேய்தான் அதில் ஐயமில்லை அருமை!
பதிவர் சந்திப்பின் காரணமாக தங்களோடு கழித்த மூன்று தினங்களும் மறக்க முடியாத நாட்கள்! நன்றி!/

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு said...
மூன்று விதமான கோணங்கள்.. அருமை!//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///


Yaathoramani.blogspot.com said...


திண்டுக்கல் தனபாலன் said...//
மிகவும் அருமை..

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

வேடந்தாங்கல் - கருண் said...//
தன்னைத் தானே சுருக்கியபடி
கவிதைக்குள் தன்னை ஒடுக்கியபடி
அடுக்கிய பிணத்துள் அடங்கித் தவிக்கும்// அருமை..

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///



Yaathoramani.blogspot.com said...

Sasi Kala said...
மாறுபட்ட கோணத்தில் தங்கள் சிந்தை மிகவும் சிறப்பு ஐயா//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

s suresh said...//
மனதிற்கும் செயலுக்கும் உள்ள வேறுபாடுகளை மூன்றுவிதத்தில் முத்தாய்ப்பாய் உணர்த்திய கவிதை! அருமை! நன்றி ஐயா!//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

நிலாமகள் said...
தலைப்பே கொல்லுதே...//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் said...
மனப்பேய் தின்ற எச்சங்களைத்தான் வாழ்க்கைத்துளிகளாய் களித்து மகிழ்கிறோம். பேய்க்கும் நோய்க்குமாய் வாழும் நாம் நமக்காய் ஒருபோதும் வாழ்வதே இல்லை. அருமையான சிந்தனை. நறுக் வரிகள்!//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

மாதேவி said...//
மூன்று கோணத்தில் வெளிப்பாடு அருமை.

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///


Yaathoramani.blogspot.com said...

2008rupan said...
வணக்கம்
ஐயா
கவிதை அருமை சொல்லவார்தைகள் இல்லை வாழ்த்துக்கள் ஐயா//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///


Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam said...
வார்த்தைக்கு வாக்கப் பட்ட அர்த்தங்கள், கவிதைக்குள் தன்னை ஒடுக்கியபடி அடுக்கிய பிணத்துள் (?_)அடங்கித் தவிக்கும் . நன்றாகப் புரிந்து கொள்ள நோட்ஸ் தேவைப் படுகிறது( எனக்கு)//

தங்கள் வெளிப்படையான விமர்சனம்
எனக்கு மிகுந்த மகிழ்வளித்தது
சில விஷயங்களைச் சொல்வதற்கு
எளிமையும் சில விஷயங்களுக்கு
இறுக்கமான சொற்களும்
அவசியத் தேவையாகிறது
அந்த வகையில் இதற்கு இப்படித்தான்
சரி யென்பது என் கருத்து

Post a Comment