Tuesday, September 15, 2015

புதுகைப் பதிவர் திருவிழா ( 3 )

எம் படைப்புகள் எல்லாம்...

ஆற்று நீரை எதிர்த்துப்போகும் எனும்
அதீத  எண்ணம் ஏதும் எங்களில்
நிச்சயம் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
எரியாது சிரிக்கும் என்கிற
நினைப்பும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச செய்யவோ

அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ

 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லை

சராசரித்  தேவைகளை அடையவே
அன்றாடம்  திணறும் கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
நாங்கள் படும் அவதிகளை

எமக்குத் தெரிந்த பாமர மொழியில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை

மனம் கீறிப்போகும்
சிறுச்  சிறு அல்லல்களை

அதிக மசாலா கலக்காது
பகிர்ந்துண்டு மனப் பசியாறுகிறோம்

எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
விஞ்ஞானம்  ஈன்றெடுத்த
புதிய  இனிய இனமே

எங்கள் கைகளில்தான் இருக்குது
புதியதோர் உலகு செய்யும்
அதீத அசுர  பலமே

9 comments:

Nagendra Bharathi said...

வாழ்த்துக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புதுக்கோட்டையை எதிர்நோக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள். சந்திப்போம்.

கரந்தை ஜெயக்குமார் said...

புதுகையில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன் ஐயா
தம +1

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமை ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

//உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
"யாது ஊரே யாவரும் கேளீர் "என
பண்புடன் வாழ முயலும்
பதிவர்கள் நாங்களெல்லாம்
விஞ்ஞானம் ஈன்றெடுத்த
புதிய இனிய இனமே//

அருமை.

இம்முறை சந்திப்பில் கலந்து கொள்ள இயலாது என்பதில் வருத்தம் தான்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
நிகழ்வுசிறப்பாகஅமைய எனது வாழ்த்துக்கள். த.ம8
எனது நூல்வெளியீடு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை.. இனி தொடலாம்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ said...

உங்களது எச்சரிக்கை மணி நன்றாகவே ஒலிக்கின்றது. விழாக்குழுவினரும் மற்ற ஆர்வலர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

/உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
"யாது ஊரே யாவரும் கேளீர் "என
பண்புடன் வாழ முயலும்
பதிவர்கள் நாங்களெல்லாம்
விஞ்ஞானம் ஈன்றெடுத்த
புதிய இனிய இனமே// ஆஹா அற்புதமாகச் சொல்லிவிட்டீர்கள் ...

Post a Comment