Wednesday, September 16, 2015

கணபதி திருவடி


கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது தொலைந்திடும் -இனி
இன்பமே எனஅறி

கஜமுகன் திருமுகம்
கண்டுகளி தினமினி
நிஜமென மருவிடும்-தினம் 
தொடர்ந்திடும் கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
பெருகிடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையினி ஒழிந்திடும் -இனி
நிறைவுதான் எனத்தெளி

7 comments:

KILLERGEE Devakottai said...

அருமை விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் கவிஞரே
தமிழ் மணம் 1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
நாள் உணர்ந்து கவிதை பிறந்த விதம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா த.ம 3
எனது நூல்வெளியீடு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை.. இனி தொடலாம்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இளமதி said...

கணபதி திருவடி பணிகின்றோம் ஐயா!
அருமையான கவி மாலை!
விநாயகர் சதுர்த்தின வாழ்த்துக்கள்!

yathavan64@gmail.com said...

அன்பின் இனிய
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
நலமும் வளமும் சூழ வாழ்க வளமுடன்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

எல்லோரும் எல்லா நலமும் பெற்றிட விநாயகப் பெருமான் அருள் புரியட்டும்....

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான வரிகள்...

Post a Comment