Thursday, September 17, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 4 )

 தொடர்ந்து மூன்று பதிவர் சந்திப்பிலும்
கலந்து கொண்டவன் என்கிற  முறையிலும்
சமூக இயக்கங்களில் தொடர்ந்து  பொறுப்பு
வகித்து  வருபவன் என்கிற முறையிலும்
மனம் திறந்து  வெளிப்படையாக  சில விஷயங்களைப்
பகிர்தல் நம் பதிவர் சந்திப்பு   மிகச் சிறப்பாக  நடைபெற
உதவும் என நினைத்து இதை  எழுதுகிறேன்

உண்ணாவிரதப் போராட்டம் என்றாலும்  கூட
மேடை அமைப்பு, விளம்பரம் , ஒலிபெருக்கி அமைப்பு
என செலவுக்கு அதிகப் பணம் வேண்டும் என்கிற
இன்றையச் சூழலில் ஒரு பதிவர் சந்திப்புக்கு
நிச்சயம் அதிகம் செலவாகும் என்பது
நாம் அனைவரும் அறிந்ததே

என்னுடைய அனுமானத்தில் சென்னை மதுரையை விட
புதுகை ,மாநிலத்தின் மையப் பகுதியாக இருப்பதாலும்
ஆரம்பம் முதலே  மிக முறையாகவும் தெளிவாகவும்
அனைவரின் கருத்துக்கும்  மதிப்பளித்தும்  ஐயா
முத்து நிலவன் அவர்கள்  தலைமையில்  புதுவைப்
பதிவர்கள் சந்திப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதால்
இந்தப் பதிவர் சந்திப்புக்கு   அதிக எண்ணிக்கையில்
பதிவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்
என நினைக்கிறேன்

அந்த வகையில்  குறைந்த பட்சம் 200 பதிவர்களாவது
கலந்து கொள்வார்கள் என மதிப்பிடுகிறேன்

அந்த பதிவர்களுக்கு நல்ல  முறையில்  காலைச் சிற்றுண்டி
மதிய உணவு இடையில்  இரு ஹை டீ என மட்டும் ஏற்பாடு
செய்தாலே 70 ஆயிரம் வரை உத்தேசமாக ஆகிவிடும்
(100+ 25+ 25 +200 =350 )

இது நீங்கlலாக மேடை  , அடையாள அட்டை
பதிவர்கள்  கைடுஎன இன்ன பிற விஷயங்களுக்கு
குறைந்த பட்சம் 75 ஆயிரம் ஆகிவிடும் .

என்வே குறைந்த பட்சம் 2 இலட்சம்
இலக்காக வைத்து   நிதி திரட்டினால்  ஒழிய
பதிவர் சந்திப்பை சிறப்பாக நடத்தி முடிக்கச்
சாத்தியமில்லை  என்பது  எண்ணம்

இந்த வகையில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாயை
புரவலர்களிடம் இருந்தும்
நன்கொடையாளர்களிடம் இருந்தும்
பதிவுக் கட்டணமாகவும் பிரித்துப் பெற்றால் தான்
போதிய நிதி இலக்கைத் தொட முடியும் என்பது
 என் கருத்து

பதிவர்களில் புரவலர்களெனத் தரத்தக்கவர்களிடம்
இருந்து  5000/

நன் கொடைத் தர மனமுள்ளவர்களிடம் இருந்து
2000 /1000 எனவும்

மற்றவர்களிடம் இருந்து
கட்டணமாக 500 உம் பெற முயற்சிக்கலாம் என்பது
என் எண்ணம்

500 கட்டணம் கட்டாயமில்லை கொடுத்தால்
ஏற்றுக் கொள்ளப்படும்  என அறிவிக்கலாம்
  
( நாம்  நிச்சயம்  கலந்து கொள்ளும் அனைவருக்கும்
ரூபாய் 500 அளவில் செலவழிக்க வேண்டியிருக்கும் )

இது எனது அபிப்பிராயம்  அவ்வளவே

இது சரியாயிருக்கும் என பெருவாரியோர்
முடிவெடுக்கும் பட்சத்தில் நானும் என்னை
ஒரு புரவலாக    இணைந்து கொள்ளச் சம்மதிக்கிறேன்
என இதன் முலம் தெரிவித்துக் கொள்கிறேன்

அனைவரின் கருத்தை   எதிர்பார்த்து ---

14 comments:

G.M Balasubramaniam said...

இதையெல்லாம் சிந்தித்தே வலைப் பதிவர் சந்திப்பை போட்டிகள் நடத்தும் தமிழ் இயக்கம் ஹைஜாக் செய்து கொண்டு போகும் சாத்தியம் இருக்கிறது என்று எச்சரிக்கை செய்திருக்கிறேன்

Muthu Nilavan said...

அருமையான யோசனைகள் தந்திருக்கும் ரமணி அய்யாவுக்கு நன்றிகலந்த வணக்கம். இங்கு எமது விழாக்குழுவினரோடு பேசி முடிவெடுத்து வாய்ப்புள்ளவாறு செயல்படுத்துவோம் நிற்க.
அய்யா ஜிஎம்பி அவர்களுக்கு, வாழ்க்கையில் அச்சமிருக்க வேண்டும்தான். வாழ்க்கையே அச்சமாகிவிடக் கூடாது இல்லையா? நம் முப்பாட்டனின், “தேரான் தெளிவும் தெளிந்தான்கண் அய்யுரவும் தீரா இடும்பை தரும்“ எனும் வழிகாட்டுதல் உண்டெனில் அச்சமேன்? குளத்தில் இறங்காமல் நீச்சல் பழகுவதெப்படி? ஆனால் எச்சரிக்கையாக நீச்சல் பழகுவோமய்யா!

Ramani S said...

தி.தமிழ் இளங்கோ said...
உங்களது எச்சரிக்கை மணி நன்றாகவே ஒலிக்கின்றது. விழாக்குழுவினரும் மற்ற ஆர்வலர்களும் நினைவில் கொள்ள வேண்டும்

Muthu Nilavan said...

“அய்யுறவும்“ எனத் திருத்திக் கொள்ளவும்.(குறள்-510) எனது எழுத்துப் பிழைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

Muthu Nilavan said...

அய்யா இப்போதுதான் கவனித்தேன்-
தலைப்பு “புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு“ என்று இருக்கவேண்டும் அய்யா. புதுவை என்பது புதுச்சேரியைத்தான் குறிக்கும். புதுக்கோட்டையை சுருக்கமாக புதுகை என்று சொன்னாலும் கூட அது இதுபோலும் குழப்பத்தைத் தருவதால் நாங்கள் புதுக்கோட்டை என்றே சொல்லிவருகிறோம்.நிற்க. விழாவலைப்பக்கம் பாருங்கள்- http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_62.html
தாங்கள் சொன்ன “புரவலர்“ அறிமுகத்தைத் தொடங்கி விட்டோம்..நிறைய நண்பர்களைப் புரவலராக்கிட உதவுங்கள்..நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல கருத்து ஐயா
தம +1

ரூபன் said...

வணக்கம்
ஐயா

தாங்கள் சொல்லும் கருத்துஉண்மைதான்... கருத்தை பதிவாக வெளியீடு செய்தமைக்கு நன்றி ஐயா த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படி சொல்வது என்று நினைத்து கொண்டிருந்தோம்... நீங்கள் ஆரம்பித்து அருமையாக சொல்லி விட்டீர்கள்... நன்றி ஐயா...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பாக விழா நடத்த பணமும் அவசியம் என்பதை அழகாய்ச் சொல்லி விட்டீர்கள் ரமணி ஜி!

Mythily kasthuri rengan said...

அய்யா! மிகமுக்கியமான பதிவு இது! உங்க அனுபவம் உங்களை இப்படி சிந்திக்கவைத்திருக்கிறது!! மற்றவர்கள் புரிந்துகொண்டால் விழா இன்னும் சிறப்பாக நடைபெறும். விழாக்குழுவின் சார்பாக எங்கள் நன்றிகள் அய்யா!

கீத மஞ்சரி said...

மிக அருமையான அலசல். அற்புதமான யோசனைகள். விரைவில் என்னுடைய பங்களிப்பை வழங்குகிறேன்.

சீராளன் said...

வணக்கம் ரமணி ஐயா !

இதுக்குத்தான் அனுபவம் தேவை என்கிறது ஒரு செயல் தொடங்குவதற்கான அடித்தளம் அதன் முடிவு வரை சிந்தித்து எழுதி இருக்கீங்க ஏற்றுக் கொண்டால் நன்றே நிகழ்வுகள் நடைபெறும்
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் !

mageswari balachandran said...

தங்கள் கருத்து சரியே,,,,,

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான யோசனைகள். நிதி இல்லை எனில் விதியும் சிரிக்கும் என்றாகிவிட்டதே உலகம்...

Post a Comment