Sunday, September 20, 2015

இளைஞர் படை

எந்த ஒரு இயக்கமாயினும் 
அது மிகச் சிறந்த ஆற்றல் மிக்க தொடர்ந்து 
செயல்படுகிற இயக்கமாக
மாறவேண்டும் எனில் அதில் அனுபவமிக்க பெரியோர்களின்
வழிகாட்டுதலும் துடிப்புமிக்க இளைஞர்களின் பங்களிப்பும்
நிச்சயம் தேவை

அந்த வகையில் நான் சார்ந்திருக்கிற 
அரிமா இயக்கத்திலும்
இளைஞர்களை பங்கேற்கச் செய்யும் விதமாக
ஒரு துணை அமைப்பாக லியோ என்கிற அமைப்பை
வைத்திருக்கிறார்கள்

மதுரையில் மிகவும் மோசமான பகுதியாக 
இருந்த எங்கள்
பகுதியை சரிசெய்யும் விதமாக ஓராண்டுக்கு முன்பாக
குடியிருப்போர் நலச் சங்கம் ஒன்றை உருவாக்கி 
பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக  அறுபது
கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி அதனை
காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் 
பராமரித்து வருகிறோம்

கொலை கொள்ளை திருட்டுக்குப் பேர் போன 
எங்கள் பகுதி
தற்சமயம் அவைகளில் இருந்து முற்றிலும் 
பாதுகாக்கப் பட்டப்
பகுதியாக மாறி இருக்கிறது

தொடர்ந்து குடியிருப்பதற்கு உகந்த பகுதியாக 
மாற்றும் விதமாக
தொடந்து சேவை செய்யும் ஒரு அமைப்பும் 
தேவை என்கிற
நோக்கில் இப்பகுதியில் ஒரு அரிமா
 சங்கத்தைத் துவக்கி
கருவேல முட்செடிகளை அகற்றுதல்,
மரக்கன்று நட்டுப் பராமரித்தல்
முதலான வேலைகளைச் செய்தும் வருகிறோம்

அதன் தொடர்ச்சியாக சுற்றுச் சூழலைப்
 பாதுகாக்கும்படியாக
பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற பகுதியாக 
மாற்றும் விதமாக
அது குறித்தே சிந்தித்துச் செயல்படும் 
ஒரு அமைப்பு இருந்தால்
நல்லது அதுவும் இளைஞர் அமைப்பாக 
இருந்தால் நல்லது
என்கிற நோக்கில் புதிய லியோ சங்கம் 
ஒன்றை கல்லூரி
 மாணவர்களைக் கொண்டு 
வினாயகர் சதுர்த்தி அன்று
வட்டாரத் தலைவர் என்கிற 
முறையில் ஆரம்பித்து
அவர்களுக்கு ஒரு அறிமுக வகுப்பை 
நடத்தி முடித்தேன்

மிக்க மகிழ்வாய் இருக்கிறது.
அந்த நிகழ்வின் சில 
புகைப்படங்களை 
இத்துடன் பகிர்ந்து கொள்வதில்மிக்க மகிழ்ச்சி 
 

7 comments:

Yarlpavanan said...

இவ்வாறான இளைஞர் படை
தங்கள் ஊரைப் பாதுகாப்பான ஊராக
மாற்றமுடியுமென்றால்
அவ்வாறான இளைஞர் படையை
தமிழ் நாடெங்கும் நிறுவி
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம்!
இம்முன்மாதிரியை
உலகெங்கும் பின்பற்றத் தூண்டுவோம்!

முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

Seeni said...

வாழ்த்துக்கள் அய்யா

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்.

எம்.ஞானசேகரன் said...

அந்த இளையர் படைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் ஐயா!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
பொது நோக்கு சிந்தனையுடன் செயற்படும் தங்களும் தங்கள் படையணிக்கும் எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் பணி... வாழ்த்துக்கள் ஐயா.த.ம3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்த்துகள்!

Post a Comment