தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களில்
தொடர்ந்து நீங்காது இடம்பெற்றிருக்கிற
தலைவர்களில்"இவரும் " முக்கியமானவர்
என்றாலும்.....
முன்பு சினிமாத் துறையினரால் எம். ஆர். டி. கெ
எனச் சுருக்கமாக அழைக்கப் பட்ட மதுரை/
இராமனாதபுரம்/திருநெல்வேலி/ கன்னியாகுமரி
மாவட்டங்களில் அவருக்கிருந்த செல்வாக்கு
இன்னும் அதிகமானது
அதிலும் மிகக் குறிப்பாக மதுரை எனச் சொல்லலாம்
அரசியல் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்
வீரவாள் வழங்கியது/ கணக்குக் கேட்டது/
புரட்சித்தலைவிக்கு கொள்கைப்பரப்புச் செயலாளர்
பதவி வழங்கியது/ உலகத் தமிழர் மா நாடு நடத்தியது
என அவரின் பல முக்கிய நிகழ்வுகள்
இப்படி மதுரையை அனுசரித்தே இருக்கும்
அப்படித்தான் அன்றைய முக்கிய நடிகர்களின்
புதுப்பட வெளியீடு பொதுப்பண்டிகையான
தீபாவளி மற்றும் பொங்கலின் போதுதான்இருக்கும்
என்றாலும் ...
"இவரின் " சொந்தப் படம் ஒன்று
மதுரையின்முக்கியத் திரு நாளான சித்திரைத்
திரு நாளின் போது வெளியிடப்பட்டது.
அப்போதெல்லாம் இப்போதைப்போல டீஸர்கள்
கிடையாது என்றாலும் போஸ்டர்களும் அன்றாடம்
அது குறித்து வெளியிடப்படும் பத்திரிக்கை
விளம்பரங்களும்படத்திற்கான சிறப்புப்புத்தகங்களும்
இப்போதையடீஸர்களை விட அதிக தாக்கத்தை
ஏற்படுத்திப் போகும்
இந்தப் படத்தைப் பொருத்தவரை , "இவர் " மற்றும்
"அவர் " இரண்டுவேடம் என்றதும்,இருவரும் அந்த ராஜா
ராணி உடையில் ஜெய்பூர் அரண்மனைப் பின்புலத்தில்
நடந்துவரும் படமும்,"அவரின்" மார்ப்புப் பிளவுகள்
தெரியும்படியான வித்தியாசமான உடையில்
சிங்கத்தின்வாய்ப் பிளப்பதுமான படங்களைப்
பார்த்து நாங்கள் மெய் சிலிர்த்துக் கிடந்தோம்
எப்படியும் இப்படத்தை வந்த முதல் நாளே பார்த்து
விடுவது எனத் தீர்மானித்தோம்
அது மதுரையில் அவ்வளவு எளிதில்லை என்றுத்
தெளிவாகத் தெரிந்த போதும். நிற்க
(நிற்க . என்பதைப் பார்த்து யாரும் எழுந்து
நின்று விட வேண்டாம்
என்போன்ற அந்த காலத்து நபர்களுக்கு
நிற்க என்பதன் பொருள் நன்றாகத் தெரியும்.
இப்போதைய இளைஞர்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.
முன்பெல்லாம் நேரடியாகப் பேசுவதை விட
விரிவாகவும் உணர்வு பூர்வமாகவும்
கடிதம் எழுதுவார்கள்.
அப்படி எழுதிக் கொண்டுவருகையிலேயே
அதன்தொடர்புடைய வேறு விஷயத்தைச்சொல்ல
வருகையில்இந்த நிற்க. என்கிற வார்த்தையைப்
போடுவார்கள்.
அதைப்போலத்தான் இந்த நிற்க.)
தொடரும்

4 comments:
நிற்கவுக்கு அர்த்தம் என்க்கும் தெரியுமே ஐயா! நானும் பயன் படுத்தும் வாக்கியம் இது.
நிகழ்வுகளை நேரில் பார்த்தது போல்வர்ணிக்கும் விதம் அருமை.
அருமையாக செல்கிறது இந்த மலரும் நினைவுகள்.
தொடர்கிறேன்!
த ம 2
அருமை
காத்திருக்கிறேன் ஐயா
தம +1
நிற்க ..... விளக்கம் உண்மையிலேயே வெகு அருமை. ‘நிற்க’ எனப்போட்டு அந்தக்காலத்தில் எவ்வளவு அஞ்சல் கடிதங்கள் எழுதியிருப்போம், வாசித்திருப்போம்.
சுவாரஸ்யமான சினிமாப் பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.
Post a Comment