Friday, December 18, 2015

உன்னழகுப் போதையிலே........

சேலைகட்டி அந்திவேளை
நீநடந்து போகையில
பாலையான சாலைகூட
சோலையாகிப் போகுதடி

விட்டுவிட்டு பார்த்தபடி
எட்டுவைச்சுப் போகையிலே
பட்டமரம் துளிர்க்குதடி
பாதையெல்லாம் மணக்குதடி

குடமெடுத்து நீரெடுத்து
இடுப்பசைய நடக்கையிலே
சொரணயத்த வீதிகூட
சொர்க்கலோகம் ஆகுதடி

அன்னமென நீ நடந்து
சொர்ணமென்னைக்  கடக்கையிலே
ஒன்னுமத்த கரிநாளும்
திரு நாளாய் மாறுதடி

நீநடந்த பாதையிலே
நான்நடந்து போகையிலே
வானகத்தில் நடப்பதுபோல்
மனம்மகிழ்வு கொள்ளுதடி

உன்னழகு போதையிலே
மதிமயங்கி  நான்உளறும்
ஒன்னுமத்த வார்த்தைகூட
கவிதையாக  மாறுதடி 

17 comments:

ஸ்ரீராம். said...

தெம்மாங்கு! அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
தம +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சொரணயத்த வீதி....மாறிய விதத்தைக் கூறியுள்ள விதம் அருமை.

Nagendra Bharathi said...

கவிதைப் போதை மயக்குது

KILLERGEE Devakottai said...

அருமை கவிஞரே மிகவும் ரசித்தேன்
தமிழ் மணம் 5

Avargal Unmaigal said...

//சேலைகட்டி அந்திவேளை
நீநடந்து போகையில
பாலையான சாலைகூட
சோலையாகிப் போகுதடி//
இப்படி சோலையை பார்த்த நீங்க வரும் வருடத்தில் பாலைவனத்தை பார்க்க போறீங்க அதை பார்த்துவிட்டு எப்படி எழுதப் போறீங்க என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்

Avargal Unmaigal said...

என்னடா தென்றல் சசி உங்க தளத்தை ஹேக் பண்ணி எழுதிட்டாங்களா என்று யோசித்தேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒவ்வொருவரியையும் படிக்கப்படிக்க பயங்கரமாக எனக்குக் ‘கிக்’ ஏறுது. :)

பாராட்டுகள். வாழ்த்துகள்.

காலை வேளையிலேயே இப்படிக் ‘கிக்’ ஏற்படுத்தி மகிழ்வித்ததற்கு ஸ்பெஷல் நன்றிகள்.

Anonymous said...

உன்னழகு போதையிலே
மதிமயங்கி நான்உளறும்
ஒன்னுமத்த வார்த்தைகூட
கவிதையாக மாறுதடி ....
அப்படியே...அப்படியே...
வேதாவின் வலை

அம்பாளடியாள் said...

வணக்கம் !
ஒவ்வொரு வரிகளும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்கிறது ஐயா ! அருமை ! அருமை ! உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ஐயா .

Yarlpavanan said...

"உன்னழகு போதையிலே
மதிமயங்கி நான்உளறும்
ஒன்னுமத்த வார்த்தைகூட
கவிதையாக மாறுதடி" என
அழகான பாவரிகளாக

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
http://www.ypvnpubs.com/

ananthako said...

உன்மத்த என்றால் பைத்தியம் ஹிந்தியில்.
ஒன்னுமத்த என்ற தமிழ் எதுவும் இல்லாத தரித்திரமான பொருளற்ற

பெண்ணழகு பொருளற்றதையும் பொருளுள்ளதாக மாற்றுகிறது அருமையான கற்பனை

ananthako said...

உன்மத்த என்றால் பைத்தியம் ஹிந்தியில்.
ஒன்னுமத்த என்ற தமிழ் எதுவும் இல்லாத தரித்திரமான பொருளற்ற

பெண்ணழகு பொருளற்றதையும் பொருளுள்ளதாக மாற்றுகிறது அருமையான கற்பனை

Thulasidharan V Thillaiakathu said...

"உன்னழகு போதையிலே
மதிமயங்கி நான்உளறும்
ஒன்னுமத்த வார்த்தைகூட
கவிதையாக மாறுதடி"

அருமை. மிகவும் ரசித்தோம்

”தளிர் சுரேஷ்” said...

அருமையான நாட்டுப்புற கவிதை! பாராட்டுக்கள்!

அப்பாதுரை said...

எளிமையில் என்றுமே இனிமை உண்டு.
அவர்கள் உண்மைகள் போலவே நானும் முதலில் நினைத்தேன்.. "பதிவு மாறி வந்துட்டமோ?" :-).

Anonymous said...

இந்த லைன் உங்களுக்கு சரியாக வருகிறது!கவிதையில் இளமைத்துள்ளல் தெரிகிறது.சப்ஜெக்ட் அப்படி!
வாழ்த்துக்கள்.

Post a Comment