Thursday, December 10, 2015

"இன்று புதிதாய் பிறந்தவனை" ப் போல்.....

"நல்லதோர் வீணையாய் "
 அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து
புது விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "
அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி
 நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை "
என்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை
 விடுவித்துக் கவிதையை
அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே "
 கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு
அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"
 சோராதிருந்தான்
அதனால்தானே காலத்தை வென்றவனாய்
காவிய மானவனாய்
"இன்று புதிதாய் பிறந்தவனை" ப் போல்
என்றென்றும்  எப்போதும்
பரிமளிக்கவும் முடிகிறது


13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எக்காலத்திலும் பரிமளிக்க முடியும் ஐயா...

ராஜி said...

"இன்று புதிதாய் பிறந்தவனை"
\>>> வாழ்த்துகள்ப்பா

கவிஞர்.த.ரூபன் said...
This comment has been removed by the author.
கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

இரசிக்கும் படி சிறப்பாக உள்ளது பா வரிகள் வாழ்த்துக்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

காலத்தை வென்றவனாய்,
காவிய மானவனாய்,
"இன்று புதிதாய் பிறந்தவனை" ப் போல்
பரிமளிக்கும் அந்த நபருக்கு என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

RAMJI said...

பெருமைக்குரிய பிறப்பு பாராட்டுதலுக்கு உரிய படைப்பு நன்கு தொடர வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...

பாட்டுத்தலைவன் பாரதிக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

கவிதை மிக அருமை ஐயா வாழ்த்துக்கள்
தம +1

கோமதி அரசு said...
This comment has been removed by the author.
கோமதி அரசு said...

தேசியகவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

கவிதை அருமை.

Unknown said...

நலமா நண்பரே!தொடர்பே இல்லையே!

Anonymous said...

Mika nanru....
Vetha.Langathilakam

மீரா செல்வக்குமார் said...

வாழும் பா ரதியே...வணக்கம்...தொடரட்டும் உங்கள் பா ரதம்

Post a Comment