தமிழகத்தின் தலை
எங்கள் தலை நகர் சென்னை
இதயம் கடலூர்
இரண்டும்பாதித்துக் கிடக்க
எங்கள் மனம்
வேறில் கவனம் கொள்ள
நிச்சயம் சாத்தியமில்லை
ஜாதித் தலைவலி
மதச் சளி
கட்சி வயிறுப் போக்கு என்பதெல்லாம்
இப்போது எங்களுக்கு
ஒரு பொருட்டே இல்லை
கட்டைவிரல் நுனி
கன்னியாகுமரி முதல்
கன்னியாகுமரி முதல்
நுனிமுடி இமயம் வரை
பரவிக் கிடக்கும்
இரத்த நாளங்களில் எல்லாம்
இப்போது நிரம்பிக் கிடப்பது...
சிறுமையை சீரழிக்கும்
பெருந்தன்மை வெள்ளையணுக்களும்
செயலாற்றத் துடிக்கும்
செம்மை மிகு சிவப்பணுக்களுமே
நம் பலவீனம் கண்டு
வீழ்த்திட முனைந்த
இந்தப் பேரழிவுப்
பெருமழை நோயினை
நம் பலம் காட்டி
கடல் நோக்கியே
விரட்டி விடுவோம் வாரீர்
நம் சேவையைக் கண்டு
உலகே வியக்க
தொடர்ந்து முயல்வோம் வாரீர்
நம் சேவையைக் கண்டு
உலகே வியக்க
தொடர்ந்து முயல்வோம் வாரீர்
11 comments:
இன்றைய நிலை கவிதையில்
தமிழ் மணம் 1
எப்படி?
களப் பனி செய்ய முடியாது என்பதால் பண உதவியை செய்து விட்டேன் !
முன்பதிவில் சொன்னதைப்போல ஒருங்ணைந்த செயல்பாடுகள் மூலம்
நம் பலம் காட்டி
கடல் நோக்கியே
விரட்டி விடுவோம் வாரீர்!
இறையருளும் கிடைக்கட்டும்.
https://kovaikkavi.wordpress.com/
ஒருங்கிணைந்து செயல்படுவோம்.... விரைவில் மீண்டு வருவோம்....
உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
சில வேண்டுதல்கள்...
இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
மணிதம் இன்னும் மரிக்கவில்லை
என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
நிறையவே நாம் ஜாக்கிரதையாக
செயல்பட வேண்டிய தருணம் இது...
அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
வேண்டுதல்கள்..
1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.
2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..
3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட USB மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.
4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.
5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும்.
மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..
நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.
உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.
வணக்கம்
ஐயா
நமது மக்களுக்காக சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வெள்ளத்தால்
மதம் மறைந்தது
சாதி காணாமல் போனது
எங்கும் எங்கும்
காணுமிடமெல்லாம்
மனித நேயம்
மனித நேயம்
நன்றி ஐயா
தம +1
இந்த வெள்ளம் உணர்த்தியது மத சாதி நல்லிணக்கத்தை. எல்லா இடங்களிலிருந்தும் உதவிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. ஒருங்கிணைந்து செயல்படுவதுதான் மிக மிக முக்கியம்...சானலைஸ்ட் சேவைகள் ஒரு குழு என்றால் ஒரு தலைமையுடன்...
கடலூருக்கான உதவிகளில் தொலைநோக்குப்பார்வை வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து...களப்பணியில் கண்டேன்...அங்கே அறிவைத்தான் அளிக்க வேண்டியிருக்கிறது...
Post a Comment