Tuesday, December 8, 2015

விதைப்பதைப் போலத்தான்.

அலுவலங்களில் உயர் அதிகாரிகள் அடுத்து
அடுத்து இருப்பது  கீழ் நிலை அதிகாரிகளின்
தவறுகளைகுற்ற நோக்கில் கண்டுபிடிப்பதற்காக
அல்ல

தவறு தவறி நேர்வது இயல்பு.அதைச் செய்பவரை விட
அதைக் கவனித்துக் கொண்டிருப்பவர் கண்டுபிடிப்பது
மிக எளிது என்பதால்தான்.

அதனால்தான் கோடலிக் காரனுக்கு நாலு ரூபாய்
என்றால்கோளாறு சொல்பவனுக்கு பத்து ருபாய்
என கிராமங்களில்சொல்வார்கள்

அதைப் போலவே செய்வது சிறிய உதவிதான் எனினும்
அதை மறைத்துச் செய்யாமல் பிறர் தெரிகிறபடிச்
செய்வதும் பிரச்சார நோக்கில் இல்லை

இதைப் பார்க்கிறவர்கள் நாமும் நம்மால் முடிந்த அளவு
செய்யலாமே என்கிற எண்ணம் நிச்சயம் உருவாகும்
என்கிற நோக்கில்தான்

அதுவும் வரி வடிவங்களில் உதவி செய்வதைச்
சொல்வதை விட புகைப்படங்களாய்,காணொளியாய்
இருப்பது கூடுதல் சிறப்பு.

சமீபத்தில் எங்கள் பகுதியில் மழையோடு மழையாய்
தெருக்களில் நின்று  நிவாரண நிதி
வசூலித்துக் கொண்டிருக்கையில்
பள்ளி வாசல் ஒன்றில் கையேந்தி  கைக் குழந்தையுடன்
பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் தனது
அருகில் நின்றிருந்த  தனது மூத்த பெண்ணிடம்
இருபது ரூபாயக் கொடுத்து நாங்கள்
கொண்டுவந்திருந்தஉண்டியலில் போடச் சொன்னது
இன்றும்நினைத்துப் பார்க்கையில்கண் கலங்கச்
செய்துதான் போகிறது.

மழை நேரம் என்பதாலும் சட்டென
இது நடந்து விட்டதாலும் இதைப் புகைப்படம்
எடுக்க முடியவில்லை.

இப்படி எழுத்க் கொண்டிருப்பதை விட அது
புகைப்படமாக எடுக்கப்பட்டுப் பதிவிடப் பட்டிருந்தால்
அந்த இருபது ரூபாய் எத்தனை ஆயிரமாய்
சேரக் காரணமாய் இருந்திருக்கும். ?

எனவே தங்களால் இயன்ற அளவு உதவி
செய்பவர்கள் அனைவரும் கூடுமானவரையில்
முடிந்த அளவு அதை பிறர் அறியப் பதிவு செய்யுங்கள்

இதுவும் ஒருவகையில் விதைப்பதைப் போலத்தான்.

வாழ்த்துக்களுடன்....

12 comments:

ஸ்ரீராம். said...

சொல்லிருக்கும் சம்பவம் கண்கலங்க வைக்கிறது. அனுபவங்கள்தான் நமக்கு பாடம் நடத்துகின்றன. நீங்கள் சொல்லும் விஷயம் சரி என்று உணர வைக்கிறது.

தம +1

RAMJI said...

மந்த நேயம் என்றும் இடுக்கண் வருங்கால் மலரும் மனம் பரப்பும் வளர்க உங்கள சேவை அரிமா வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

சமீபத்தில் எங்கள் பகுதியில் மழையோடு மழையாய்
தெருக்களில் நின்று நிவாரண நிதி
வசூலித்துக் கொண்டிருக்கையில்
பள்ளி வாசல் ஒன்றில் கையேந்தி கைக் குழந்தையுடன்
பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் தனது
அருகில் நின்றிருந்த தனது மூத்த பெண்ணிடம்
இருபது ரூபாயக் கொடுத்து நாங்கள்
கொண்டுவந்திருந்தஉண்டியலில் போடச் சொன்னது
இன்றும்நினைத்துப் பார்க்கையில்கண் கலங்கச்
செய்துதான் போகிறது.//

என்ன சொல்ல என்று தெரியவில்லை!! புல்லரித்தது. யாசிப்பவரே கொடுக்கும் போது மற்றவர்களும் உதவலாமே.

உங்கள் நல்லெண்ணங்களுக்கு வாழ்த்துகள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பள்ளி வாசல் ஒன்றில் கையேந்தி கைக் குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் தனது அருகில் நின்றிருந்த தனது மூத்த பெண்ணிடம் இருபது ரூபாயக் கொடுத்து நாங்கள் கொண்டுவந்திருந்த உண்டியலில் போடச் சொன்னது.....//

செய்யும் தொழிலில் பிச்சைக்காரியாகினும், பிறருக்கு உதவிடும் எண்ணத்திலும் செயலிலும் கோடீஸ்வரியாக உயர்ந்து நிற்கிறாள். மகத்தான மனித நேயம் வாழ்க !

கோமதி அரசு said...

யாசித்த பெண் நிதி உதவியது மனதை நெகிழ செய்து விட்டது.

எங்கள் குடும்பத்தினர் அனைவரிடமும் பண உதவி பெற்று சென்னை உறவினர் சென்னை மக்களுக்கு கொடுத்துவிட்டார். சிறு உதவிதான். இன்னும் உதவிகள் தேவை. சிறுதுளி பெருவெள்ளம் அல்லவா? பண உதவி மட்டும் வெள்ளமாய் வரட்டும், மழை வெள்ளம் வேண்டாம்.

வெங்கட் நாகராஜ் said...

பிறரிடம் கையேந்தும் நிலையில் இருந்தாலும், மற்றவர்களுக்கு உதவும் மனம் இருக்கும் அப்பெண்மணிக்கு எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்......

மனிதம் வளர்ப்போம்...

இராஜராஜேஸ்வரி said...

உதவும் மனம் கடவுள் வாழும் இல்லம்...

G.M Balasubramaniam said...

யாசித்தவள் பிச்சைக்காரி அல்ல. பெருமனசுக்காரி

சீராளன்.வீ said...
This comment has been removed by the author.
சீராளன்.வீ said...

வணக்கம் ஐயா !

வலிகளை உணரும் திறன் எல்லோருக்கும் பொதுவாய் இருப்பினும் ஏழைகளிடத்தில்தான்
இரக்க குணம் முதலில் வெளிப்படும் பகட்டுக்காய் வாழும் பணக்காரனைவிட
என்றும் ஏழைகளே சிறந்தவர்கள் ....ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள் அது உண்மைதான் ..அன்றாடம் அடுத்தவர்களிடம் கையேந்தி உதவி பெற்று வாழ்பவர்களை பிச்சைக் காரர்கள் என்று வாயினால் உச்சரிக்க முடியவில்லை இவ்வாறான மனித நேயப் பண்புகளை அவர்கள் வெளிக்காட்டுவதால் ...! மனிதன் எங்கும் வாழ்கிறான் .

அந்த ஏழ்மையை இறைவன் காக்கட்டும்
மிக நல்ல பதிவு ஐயா வாழ்க வளமுடன்
தம +1

மீரா செல்வக்குமார் said...

வித்தியாசமான யோசனை...என் கருத்தையும் மாற்றியிருக்கிறது...நன்றி

அருணா செல்வம் said...

கஷ்டப் படுபவர்களுக்குத் தான் மற்றவர்களின்
கஷ்டங்கள் தெரியும்.

Post a Comment