Saturday, December 5, 2015

சிறு துளி பெரும் மழையாய் .......

சமூக நலனில் அக்கறை கொண்ட எம் பகுதி வாழ்
மக்களைக் கொண்டுஎங்கள் பகுதியின் நலனுக்காக
குடியிருப்போர் நலச் சங்கம்  என்னும் ஒரு அமைப்பை
 உருவாக்கினோம் .

அதன் மூலம்

எங்கள் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும்
விதமாகபத்து  இலட்சம் செலவில்  ஏறக்குறைய
ஏழு கிலோ மீட்டர்சுற்றளவை கண்காணிக்கும்படியாக
 கண்காணிப்புக்கேமராக்களைப் பொருத்தி
காவல் துறையிடம் ஒப்படை த்து
அவர்கள் மூலம் கண்காணித்து வருகிறோம்

இந்தக் குடியிருப்போர் சங்கத்திலிருந்து இன்னும்
 விசாலமானமனம் கொண்டவர்களைத்
தேர்ந்தெடுத்து எங்கள் பகுதிக்கென
ஒரு அரிமா சங்கத்தை ஏற்படுத்தி  அதன் மூலம்
இன்று வரைமொத்தம் பதினைந்து இலட்சம் மதிப்பிலான  சேவைகளைச்செய்துள்ளோம்

இன்னும் இப்பகுதியில்  சமூக நலன் குறித்த
ஆர்வம் உள்ளஇளைஞர்களை ஒன்றுபடுத்தும் விதமாக
அரிமா  லியோ சங்கம்ஒன்றை உருவாக்கினோம்

அவர்கள் மட்டும் தனியாக பொது மக்களிடம் இருந்தும்
முக நூல் மற்றும்   வாட்ஸ் அப்  மற்றும் பள்ளி கல்லூரி
மாணவர்கள் மூலம் மொத்தம் எட்டு இலட்சம்
 மதிப்பிலானவெள்ள நிவாரணப் பொருட்களைச்
சேகரித்து  ஹிந்துதமிழ் நாளிதழ்   மூலமாகவும்
மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவும் இன்று
அனுப்பி வைத்துள்ளார்கள் என்பதை
மகிழ்வுடன்  பகிர்வு செய்வதில்
பெருமை கொள்கிறோம்





அதைப் போலவே   மூல அமைப்பான குடியி ருப்போர்
நலச் சங்கம் மற்றும் அரிமா  சங்கத்தின் சார்பாக
தனியாக எட்டு இலட்சம் மதிப்பிலான
நிவாரணப் பொருட்களைபகுதிவாழ்
பொது மக்களிடம்இருந்து   சேகரித்து இன்று
பத்து  உறுப்பினர்களுடன் சென்னைக்கே
அனுப்பி வைத்துள்ளோம் .

அரிமா மாவட்ட ஆளு நர்
லயன் இராமசுப்பு   எம் ஜே எப் பல்வேறு
பணிக்கிடையில்வந்திருந்து அவர்களை வாழ்த்தி
வழி அனுப்பிவைத்துள்ளார்கள்

நாங்கள் தெரு த் தெருவாகச் சென்று மக்களிடம்
உதவி கேட்டு நின்ற போது அவர்கள் காட்டிய
ஆர்வத்தையு ம்கொடுத்த ஆதரவையும்
நி னைக்க   நினைக்க இந்தப் பதிவை
பதிவு செய்து கொண்டிருக்கும் போது கூட 
கண்களில்  ஆனந்தக் கண்ணீர
பெருகிக் கொண்டுதான் உள்ளது

உதவிய  ,உடன் ஒத்துழைத்த அனைவருக்கும்
மனமார்ந்தநன்றியும் நல்வாழ்த்துக்களும்

இதுவரை   எங்கள் பகுதியில் இருந்து
அனுப்பிவைக்கபட்டநிவாரணப் பொருட்களின்
மதிப்பு மட்டும்  ரூபாய் பதினை ந்து இலட்சம்

இன்னும் இது தொடரும்...

















12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் பாராட்டுக்கள்... நன்றிகள்...

Avargal Unmaigal said...

மக்களுக்கு நல்ல இதயமும் அதில் ஈரமும் இருக்கிறது. அதனால்தான் இந்த அளவிற்கு மனம் உவந்து உதவி செய்துவருகிறார்கள். ஒரு நல்ல தலைவர் மட்டும் இருந்துவிட்டால் உலகத்தின் தலை சிறந்த நாடுகளில் ஒன்றாக ஆகிவிடும்... நம் மக்களை கெடுத்து அவர்கள மனதை நாசமாக்கி வருபவர்கள் இந்த தலைவர்களே. அதற்கு ஒரு மாற்று கூடிய விரைவில் ஏற்பட வேண்டும் என்பதே எனது ஆசை

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் சேவையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைவருக்கும் நன்றி.

கோமதி அரசு said...

அனைவருக்கும் பாராட்டுக்கள்.சேவை தொடர வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai said...

பாராட்டுகுறிய செயல் கவிஞரே
தமிழ் மணம் 5

Seeni said...

அனைவருக்கும் பாராட்டுக்கள்... நன்றிகள்...

Yarlpavanan said...

தொண்டர்களை
கடவுளின் பிள்ளைகளாக
வணங்குகின்றேன்

வானிலிருந்து - கடவுள்
தன் திருவிளையாடலைக் காட்ட
தரையிலிருந்து - மக்கள்
துயருறும் நிலை தொடராமலிருக்க
கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

போதும் போதும் கடவுளே! - உன்
திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

கடவுளே! கண் திறந்து பாராயோ!
http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

Geetha said...

மிகுந்த மகிழ்ச்சி...நிலைமை சீரடையட்டும்

அன்பே சிவம் said...

செல்லும் வழியிலெல்லாம்..
வழிப்பறி கும்பல்கள் உலவுவதாக
செய்தி அய்யா..
தங்கள் பகுதிக்கு அமைத்த
கண்காணிப்பு கேமராவைப்போல்
செல்லும் வாகனங்களிலும் பொருத்தி
விட்டால்
வேறு எந்த ஆயுதமில்லாவிட்டாலும்
கொள்ளையே தம் கொள்கையாக கொண்டவர்கள்.
இதைக்கண்டு அஞ்சுவார்கள்..

S.P.SENTHIL KUMAR said...

பாராட்டுகள் அய்யா!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

தொடரட்டும் சேவை... தொண்டுப்பணியில் இருக்கும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்த்துகள், பாராட்டுகள் நண்பரே! எத்தனை மக்கள் உதவ ஏழையிலிருந்து வசதி உள்ளவர்கள் வரை என்று பார்க்கும் போது மனம் மகிழ்கின்றது. களப்பணியில் இறங்குவது வரை.

இத்தனையும் சானலைஸ்டாடச் சென்றடைய அவர்களுக்குள் பகுதிகள் பிரித்துக் கொண்டு ஒரேபகுதிக்குச் சென்றுவிடாமல் எல்லா பகுதிகளுக்கும் அந்தப் ப்குதிக்குத் தேவையான உதவிகள் கிடைக்குமாறு ஒருதலைமையுடன் சானலைஸ்டாகச் செய்தாலே போதும் இப்போது குவிந்திருக்கும் குவிந்துகொண்டிருக்கும் உதவிகளினால்.

அருமை தங்களது பணி. தொடர்க தங்கள் சேவை.

தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைமை கிடைத்தால் நம் மக்கள் இன்னும் பல சாதனைகள், உதவிகள் செய்வார்கள். தமிழகமே சொர்க லோகமாக மாறிவிடும். தலை நிமிர்ந்து நின்றுவிடும்...ஒருநல்ல தலைமை கிடைக்க வேண்டும் ஆதங்கம்...

Post a Comment