Saturday, February 20, 2016

சிம்மாசனம் அமர்ந்த பிச்சைக்காரன்

 நாட்டு நிலையறிய
ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்திகள்  கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
எதற்கோ ஏங்கித தவிக்கிறது  ?

இருப்பதையெல்லாம்
முற்றாக மறந்துவிட்டு
பறப்பதைப்   பிடிக்கத் துடிக்கிறது  ?

காரணம் அறிந்தவன்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கிறான்

காரண்ம் அறியாதவனே
 சிம்மாசனதிலமர்ந்தும்
 பிச்சைக்காரனாய்  தினம்புலம்பித் தவிக்கிறான் 

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகள். பகிர்வுக்கு நன்றிகள்.

S.P.SENTHIL KUMAR said...

அருமையான கவிதை வரிகள்!
த ம 2

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமை எல்லாம் இருந்தும் இல்லாத ஒன்றையே தேடும் மனம் துன்பத்திற்கு காரணமாகிவிடுகிறது

திண்டுக்கல் தனபாலன் said...

திருப்தி இல்லா மனம் என்றும் தவிக்கும்...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
எதற்கோ ஏங்கித தவிக்கிறது ?
முடியிருந்தும் மொட்டைகளாய்
மூச்சிருந்தும் கட்டைகளாய் என்று இவர்களைத்தான் பகோக சொன்னார்?
அழகுக் கவிதைஅய்யா. உண்மை உறுத்துகிறது

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அப்படியே த.ம.வா.5

G.M Balasubramaniam said...

எல்லாமிருந்தும் ஏன் இந்த பிச்சைக்கார எண்ணம் போதுமென்ற மனமே இல்லையோ

Unknown said...

சிந்திக்க தக்க சிறப்பான வரிகள்

Unknown said...

சிந்திக்க தக்க சிறப்பான வரிகள்

Thulasidharan V Thillaiakathu said...

போதுமென்ற எண்ணம் வாராமையால் பிச்சைக்கார எண்ணம் இருக்கலாம் இல்லையா...அருமையான வரிகள்...

Post a Comment