Monday, July 11, 2016

முக நூலும் வலைத்தளமும்

.உண்ணுதல் என்கிற
பொது வரையரையில்
விருந்தும் கொறித்தலும்
வேண்டுமானால் ஒன்றாக வரலாம்

ஆனால் உண்மையில்
அவையிரண்டும்
முற்றிலும் வேறுதளத்தவையே

ஆற அமர்ந்து
முன் இலைவிரித்து
வகைவகையாய் வரிசையாய்
பறிமாறியபின்
மெல்ல இரசித்துப் புசிப்பதற்கும்

ஓடத்துவங்கும் பேருந்தில்
ஏற எத்தனிக்கும் பயணியாய்
காலும் மனமும் எங்கோ பரபரக்கக்
கையும் வாயும் சரசமாடுவதற்கும்

நிச்சயம்
வித்தியாசம் உண்டுதானே

ஆம்
இரசித்து உண்போருக்கு
முன்னது

ஆம்
அவசரத்திலும் உண்போருக்கு
பின்னது

11 comments:

ஸ்ரீராம். said...

பசிக்காக சாப்பிடுகிறோமா, ருசிக்காக சாப்பிடுகிறோமா என்பதைப் பொறுத்தது!

:)))

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். said...//
பசிக்காக சாப்பிடுகிறோமா, ருசிக்காக சாப்பிடுகிறோமா என்பதைப் பொறுத்தது!//

ஆம் என்பதை__யும் பொறுத்து

koilpillai said...

ஐயா,

வேலைக்கு / பள்ளி - கல்லூரிகளுக்கு செல்பவர்கள் காலை உணவையும், மத்திய உணவையும் முன் இலைபோட்டு ஆற அமர உண்பதற்கு ஏது அவகாசம். இரவு ஒருவேளை மட்டுமே உட்கார்ந்து நிதானமாக சாப்பிட முடிகிறது அதுவும் தினமும் வாழை இலையில் அல்ல.

காலை உணவு அவசர கதியிலும் மத்திய உணவு நேரம் தவறிய அதி வேக கதியிலுமல்லவா கொறிக்க வேண்டியுள்ளது.

நல்ல விளக்கம்தான்.

கோ

KILLERGEE Devakottai said...

விளக்கம் நன்று
த.ம.3

balu said...

PASI RUSI ARIYATHU NITHIRAI SUGAMARIYATHU

balu said...

PASI RUSI ARIYATHU NITHIRAI SUGAMARIYATHU

Avargal Unmaigal said...

ஒப்பிட்டு விளக்கியவிதம் அருமை

G.M Balasubramaniam said...

படித்து ரசிப்பதற்கும் ரசித்துப் படிப்பதற்கும் உள்ள வித்தியாசம்....?

”தளிர் சுரேஷ்” said...

ஒப்பீடு அருமை!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் ஒப்பீடு.

த.ம. +1

சென்னை பித்தன் said...

பசி ருசியறியாது!

Post a Comment