Monday, July 18, 2016

பிரசவ அவஸ்தையின் கடைசி நொடி உந்துதலாய்....

பாலத்தின் உச்சத்தில்
அதிக சுமையேற்றப்பட்ட
அந்த வண்டி மாடுகள்
நிலை குலைந்து போகின்றன

நிலையுணர்ந்துக்
கீழிறங்கித்
தானும் தள்ளுதல் போல்
குரலால், உடல் மொழியால்
அதீத பாவனை செய்கிறான்
அந்த்க் கிராமத்து வண்டியோட்டி

பிரசவ அவஸ்தையின்
கடைசி நொடி உந்துதலாய்
உடல் சக்தியணைத்தையும்
ஒருங்கிணைத்து மாடுகள்  உந்த
உச்சம் கடக்கிறது வண்டி

உடல் மொழியும்
ஓங்கி ஒலித்தக் குரலும்
பொய்தான் ஆயினும் கூட
உச்ச நொடிக் கடக்க
அந்தப் பாவனைக் கூட
அவசியமானதாகத்தான் படுகிறது

நம்பிக்கைக் குலையாதிருக்க
நிலையிலிருந்து சரியாதிருக்க
பகுத்தறிவுக்கு ஒப்பவில்லையாயினும்
சில சடங்கு சம்பிரதாயங்கள்
மிக அவசியமாவதைப் போலவும்...

4 comments:

ஸ்ரீராம். said...

மனதுக்கு தெம்பூட்ட!

Thulasidharan V Thillaiakathu said...

aam ithuvum thevaithan...namakku uthvegaththai tharuvatharku thevaiyagaththan irukkirathu.

mannikkavum sir thamizh font dideerentru elai seiyavillai...athnal ippadi...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா வணக்கம். நாலுலட்சத்தைத் தாண்டிய தங்களின் வலைப்பக்கப் பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்னும் பலலட்சமாகப் பெருக வாழ்த்துகள். (முந்திடலாம்னு பாத்தேன், முடியலையே! என்ன இருந்தாலும் சீனியர் சீனியர்தான்!) இனிய வாழ்த்துகளும் பணிவான வணக்கங்களும் அய்யா!

KILLERGEE Devakottai said...

பகிர்வு நன்று கவிஞரே.

Post a Comment