Tuesday, July 19, 2016

மாற்றி யோசித்தலும்..

மாற்றி யோசித்தலே
கேள்விகளுக்குத் தாயாகி
மறுத்தலை
முரண்படுதலை
மாறுதலை
எதிர்ப்பைப்
பிரசவித்துப்
புளங்காகிதம் கொள்கிறது

சமூக மாறுதலுக்கும்
அஸ்திவாரமாகிறது

ஆயினும்
மறுத்தலில்
தன்முனைப்பும்
முரண்படுதலில்
விதண்டாவாதமும்
மாறுதலில்
வேரை அழித்தலும்
எதிர்ப்பில்
வன்முறையும்
மாற்றி யோசித்தலை
மடை மாற்றிவிடுவதால்

மாற்றி யோசித்ததன் பலன்
திசை மாறிப் போகிறது

மீண்டும் மீண்டும் பழமையே
நிலை என்றாகிப் போகிறது

புது வகையாய்
ருசி ருசியாய் சமைத்தல் போலவே

இரசிக்கும்படியாய்
புதுப் புதுவிதமாய் படைத்தலும்

புதுமையாய்
மாற்றி யோசித்தலைப் போலவே

இதமாய்
மாற்றிப் படைக்கக் பயில்தலும்

நாணயத்தின் இருபக்கமே
என்பதில் கவனமாய் இருப்போம்

மாற்றி யோசித்ததைச்
சிதறாமல் கொடுக்க முயல்வோம்

4 comments:

ஸ்ரீராம். said...

ம்ம்ம்ம்.....

koilpillai said...

ஐயாவிற்கு வணக்கம்.

மாற்றி யோசிப்பதால் நல்ல மாற்றம் ஏற்படும் என்பதை உங்கள் கவிதை கதைக்கின்றது.

கோ

KILLERGEE Devakottai said...

மாற்று யோசித்தல் புதிய கோணத்தை தரும் உண்மையே..

G.M Balasubramaniam said...

/ஆயினும்
மறுத்தலில்
தன்முனைப்பும்
முரண்படுதலில்
விதண்டாவாதமும்
மாறுதலில்
வேரை அழித்தலும்
எதிர்ப்பில்
வன்முறையும்
மாற்றி யோசித்தலை
மடை மாற்றிவிடுவதால்/
இவற்றில் ஏதாவது நடைபெற்றால் மாற்றி யோசிப்பதன் பொருள் தெரிகிறது என்று கொள்ளலாம் ஆனால் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் கடந்து போகிறவர்களே அதிகம்


Post a Comment