Thursday, July 21, 2016

அனுபவத்தை அனுபவிப்பவனே

ஆழ்ந்து இரசித்து
அனுபவித்ததை
அனுபவித்தபடி
அனுபவிக்கும்படி
கொடுப்பது
படிப்பதற்காக அல்ல
அது அனுபவிப்பதற்காகவே

எழுத்தினைக் கடந்து
சொல்லுக்கு வருபவன்
பாமரன் எனில்

சொல்லைக் கடந்து
பொருளுக்கு வருபவன்
படித்தவன் எனில்

பொருளை கடந்து
அனுபவத்தை அனுபவிப்பவனே
நிச்சயம் வாசகன்

நிகழ்வுகளில்
நம் பிணைப்பும்
அது தரும் அனுபவமும் தான்
நம் வாழ்க்கையாகுமேயன்றி
நிகழ்வுகள்
வாழ்க்கையில்லை என்பது
நாம் அறிந்ததுதானே !

6 comments:

ஸ்ரீராம். said...

தான் ரசித்ததைப் பகிர்வதும் அதை அந்த வகையில் மீண்டும் ரசிக்கும் ஒரு கலையே..!

//நிகழ்வுகளில் நம் பிணைப்பும்// - ஆம். நம் அனுபவத்தோடு அது இணையும்போது இன்னும் ஒட்டிக் கொள்கிறது!

KILLERGEE Devakottai said...

தனது அனுபவத்தை பிறரும் அதே முறையில் அனுபவிக்க கொடுக்கதே தனி கலைதான்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
மிக அருமையான கருத்தாடல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

balu said...

Aamaam

balu said...

Aamaam

G.M Balasubramaniam said...

படித்தவற்றை அறிந்து கொள்ளலாம் அனுபவிக்க முடியுமா

Post a Comment