Friday, July 29, 2016

முன்.......

குடை விரிக்கும் முன்
சட்டெனப் பெய்து
மனம் நனைக்கும்
கோடை மழையாய்

விழி பார்க்கும்முன்
மேகமெனத் திரண்டு
மனம் நிரம்பும்
மணமலராய்

கைவிரிக்கும் முன்
சட்டெனத் தாவித்
தோளேறும்
மழலைச் செல்வமாய்

பசி யறியும் முன்
கிண்ணத்தில்அமுதுடன்
எதிர்வரும்
அன்புத் தாயாய்

எழுத முனையும் முன்
எண்ணமாய் எழுத்தாய்
எதிர்விரியும்
அமுதத் தமிழே

கடலதன் முன்
கை நனைத்த்த சிறுவன்
கடலையறிந்ததாய்
களிகொள்ளும் கதையாய்

பேரண்டமே உம்முன்
சிறுபுழு நான்
பிதற்றித் திரிகிறேன்
கவியென்றே நாளும்

விழிமூடும் முன்
ஒருசிறு கவியேனும்
கவியென நிலைபெற
நவின்றிட அருள்புரி

6 comments:

KILLERGEE Devakottai said...

அருமையான வரிகள் நன்று கவிஞரே.

சிகரம் பாரதி said...

அருமை. அழகிய வரிகள்

G.M Balasubramaniam said...

இப்போது எழுதுவதில் எல்லாம் திருப்தி இல்லையா

வெங்கட் நாகராஜ் said...

நன்று.

சிவகுமாரன் said...

இன்னும் என்ன அருள் வேண்டும் தங்க்ளுக்கு. அதுதான் இடைவிடாது எழுதித் தள்ளுகிறீர்களே பொறாமை கொள்ளும்படியாய் :)

சிவகுமாரன் said...

இன்னும் என்ன அருள் வேண்டும் தங்க்ளுக்கு. அதுதான் இடைவிடாது எழுதித் தள்ளுகிறீர்களே பொறாமை கொள்ளும்படியாய் :)

Post a Comment