Thursday, July 21, 2016

நித்தமும் புதிதாய்ப பிறக்கிறேன்

நித்தம்
முத்துக் குளிக்கிறேன்

அடி ஆழம் போய்
நித்தம் குளித்து வந்தாலும்

முத்துக்களை விட
சிப்பிகள் கிடைக்கவே
அதிகச் சாத்தியம்
என்பது புரிந்தாலும்

முத்துக்கள் எடுக்க
முத்துக்கள் கிடைக்க
இதுவொன்றே
ஆன வழி என்பதாலும்

என்றாவது
எதனுள்ளாவது
முத்துக்கள் கிடைக்கச்
சாத்தியம் என்பதாலும்

நித்தமும்
முத்துக் குளிக்கிறேன்

இதனால்
ஒருவகையில்
நித்தமும்
புதிதாயும்   பிறக்கிறேன்

5 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமை.பொருள் பொதிந்த கவிதை நமது இடைவிடாத .தேடல் எப்படியும் இலக்கை அடைய உதவும். இலக்கை அடைய இயலாமல் போனால் கூட தேடலின் வழி பிறருக்கு உதவக் கூடும்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமை.பொருள் பொதிந்த கவிதை நமது இடைவிடாத .தேடல் எப்படியும் இலக்கை அடைய உதவும். இலக்கை அடைய இயலாமல் போனால் கூட தேடலின் வழி பிறருக்கு உதவக் கூடும்

KILLERGEE Devakottai said...

அருமை கவிஞரே தினம் புது கவிதை படைத்திடுவீர் வாழ்க நலம்

G.M Balasubramaniam said...

தினமும் புதிதாய்ப் பிறந்தாலும் என்றும்போல்தானின்றும் கழிகிறது

வெங்கட் நாகராஜ் said...

அருமை..... தினம் தினம் முத்துக்குளியல்.

Post a Comment