Friday, July 8, 2016

உற்ற உறுதுணையாய் ....

நித்திரைக் கன்னியுடன்
நான்ஆனந்த போகத்தில் இருக்க
எனக்குள் ஜனிப்பதுதான் ஆயினும்..

கனவுகள் இதுவரை
எனக்குக்
கட்டுப்பட்டதே இல்லை

இறந்தவருடன்
அவர் இருந்தவரை
பிறக்காதவரை இணைத்து

நடந்ததுடன்
இனி எப்போதும்
நடக்க இயலாததை  இணைத்து

எனது
இறுதி யாத்திரையில்
நான் உடன் செல்வதைக் காட்டி

குழப்பி
ப்ய்முறுத்தி
திடுக்கிடச் செய்யும்
திக்குமுக்காடச் செய்யும்...

கனவுகள் எப்போதும்
எனக்குக்கட்டுப்பட்டதே இல்லை

நினைவு எல்லை
மெல்லக் கடக்க
எனக்குள் வளர்வதுதான் ஆயினும்

கறபனையும் இதுவரை
எனக்குக் கட்டுப்பட்டதே இல்லை

எதிர்ப்படும் நிகழ்வுடன்
என்றோ நடந்ததை
மிக நேர்த்தியாய் இணைத்து

நடக்கவே இயலாததை
நடந்து கொண்டிருப்பதாய்
ஒரு மனப் பிம்பம் காட்டி

உணர்வுடன் கைகோர்த்து
உல்லாசமாய் சில நேரம்
எங்கெங்கோ உலவவிட்டு

மகிழ்வித்து
மயங்கவிட்டு
யதார்த்தம் மறக்கவிடும்
விழி திறந்து துயிலவிடும்

கற்பனையும் இதுவரை
எனக்குக் கட்ட்ப்பட்டதே இல்லை

ஆயினும்
எனக்குக் கட்டுப்பட்ட
விழிப்பினை விட
நினைவினை விட

கட்டுப்படாத
கனவும்
கற்பனையுமே
எனக்கு  உகந்ததாய் இருக்கிறது

காரணம்
அவைகள்தானே
என் படைப்புகளுக்கு
உற்ற உறுதுணையாய் இருக்கிறது

6 comments:

ஸ்ரீராம். said...

நல்ல கற்பனை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கற்பனை....

த.ம. +1

KILLERGEE Devakottai said...

உண்மையில் கற்பனை கவிஞருக்கு கட்டுப்படவில்லைதான்....
த.ம.4

கோமதி அரசு said...

நல்ல கற்பனை

kowsy said...

சிறந்த சிந்தனை. கற்பனைகள் கட்டுப்பட்டு விட்டால் எழுத்தாளர்கள் உறங்கி விடுவார்கள்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான சிந்தனை! பாராட்டுக்கள்!

Post a Comment