Sunday, June 11, 2017

கடும் பயிற்சியிலிருக்கின்றன வார்த்தைகள் அனைத்தும்...

.கவிதைத் தேர்வுக்குத்தன்னைத்
தயார்செய்துகொள்ளும்படியான
கடும் பயிற்சியிலிருக்கின்றன
வார்த்தைகள் அனைத்தும்

நாணலினும்
இன்னும் நெகிழ்வாய்

கூரிய வாளினும்
இன்னும் கூர்மையாய்

மலர் இதழ்களினும்
இன்னும் மென்மையாய்

குளிர் நிலவினும்
இன்னும் தண்மையாய்

தேக்கு மரம் போல்
மிக்க உறுதியாய்

மொத்தத்தில்
கவிஞனின் எந்த மன நிலைக்கும்

கவிதைக்குள் கிடைக்கும்
எந்தச் சிறு இடைவெளியிலும்

மிகச் சரியாய்த்
தன்னைப் பொருத்திக்கொள்ளும்படியாய்..

கடும் பயிற்சியிலிருக்கின்றன
தமிழ் வார்த்தைகள் அனைத்தும்

வள்ளுவனின் விழிபட்ட
கம்பனின் கைத்தொட்ட
வள்ளலாரின் கருணைப்பெற்ற
பாரதியின் நாவு நவின்ற
அவன் தாசனால் எழுச்சிப் பெற்ற
வார்த்தைகள் போல்

காலம் எத்தனைக் கடந்தும்
மலர்ந்து மணம் வீசும்
புத்தம் புது மலராய்
மணக்க வேண்டுமெனில்

மாற்றங்கள் எத்தனை நேரினும்
மதிப்பில் உயர்ந்தே நிற்கும்
முத்தாய்ப் பவளமாய்ப் தங்கமாய்
ஜொலிக்க வேண்டுமெனில்

கவிஞனின் கருணைப் பார்வையில்
படும் படியாய்
அவன் கவிதைக்குள் பொருத்தமாய்
விழும் படியாய்
அதற்குரிய தகுதிகள் அனைத்தும்
பெறும் படியாய்
இருந்தால் மட்டுமே சாத்தியமென
உணர்ந்த படியால்

கடும் பயிற்சியிலும்
தொடர் முயற்சிலும்
இருக்கின்றன
அழகுத் தமிழ் வார்த்தைகள்

வார்த்தைகளின்
அசுர பலமறியாது
உயர் நிலையறியாது
அதை உமிழ்ந்துச்  செல்வோரே
சற்று விலகியே செல்லுங்கள்

ஆம் தவமனைய
அதன்கடும் பயிற்சிக்கு
அதன் பெரும் முயற்சிக்கு
பங்கம் வந்துவிடாது

மௌனமாய்   ......
ஆம்
மௌனமாய்
முடிந்தால்ஆசிர்வதிச்சு மட்டும் செல்லுங்கள்

தமிழ்மண வாக்களிக்க இங்கு க்ளிக்கி வாக்களிக்கலாம்.

15 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தவமனைய அதன்கடும் பயிற்சிக்கு அதன் பெரும் முயற்சிக்கு பங்கம் வந்துவிடாது

என நினைத்து

மௌனமாய் ......

மிகவும் மெளனமாய் நகர்ந்து சென்றுவிடுவதே என் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். :)

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

வார்த்தைகளின் முழு அர்த்தம்
மட்டுமல்ல உள்ளார்ந்த பல அர்த்தங்களும்
தெரிந்த ,மிகவும் பயனுள்ளதை மட்டுமே
எழுதுகிற பகிர்கிற உங்களைப் போன்றவர்களின்
படைப்புகளுக்காவே அவைகள்
தவமிருக்கின்றன

Unknown said...

சொற்களின் தவத்தைக் கலைத்து விடாதீர்கள் :)

KILLERGEE Devakottai said...

தொடரட்டும் தவம்
த.ம.

Rajeevan Ramalingam said...

அடடா.. அடடா... என்ன ஒரு அழகிய கவிதை..! தமிழ்ச் சொற்கள் அப்படித்தான். எல்லாவற்றுக்குமே தயாராக இருக்கின்றன. அவை எல்லா மூலை முடுக்கெங்கும் நுழைந்து கொள்ளும்..!

சொற்களின் வலிமை அறியாது அதை விணாக்குவோரின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளது கவிதை..!!

Rajeevan Ramalingam said...

ஐயா.. நான் எப்போதுமே மொபைலில் தான் பதிவுகள் படிக்கிறேன். எல்லோரைப் போலவும் தமிழ்மண வாக்கு லிங் தர முடியுமா?

vimalanperali said...

எதுவுமே பை பிராக்டீஸ்
என்றுதான் சொல்வார்கள்/

முற்றும் அறிந்த அதிரா said...

அருமை ... கவிதைக்குத் தயாராகும் சொற்கள்... என்னைப்பொறுத்து..இந்த இடத்தில் மெளனமாய் நான் போவதே மேல் ஹா ஹா ஹா:).

கோமதி அரசு said...

மெளன தவம் தொடர வாழ்த்துக்கள்.

Yarlpavanan said...

கவிஞர்கள் விளையாடும் சொல்களுக்கு
பயிற்சிகளும் தேவையா?

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான சிந்தனை... தொடர வாழ்த்துக்கள் ஐயா...

Yaathoramani.blogspot.com said...


Rajeevan Ramalingam //
.
நீங்கள் கேட்டுக் கொண்டபடி இத்துடன்
தமிழ் மண லிங்க் கொடுத்துள்ளேன்
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

மௌனமாய் விலகிச் செல்ல முடியவில்லை வாழ்த்த வேண்டிய இடத்தில் வாழ்த்தி மற்றும் சில இடங்களில் மனதில் பட்டதைச்சொல்லியும் போகிறேன் புர்ந்து கொள்ளாமல் இருப்போரே அதிகம் ரசிக்கத்தெரிந்த அளவு புகழ்த்தெரிவதில்லை.

ராமலக்ஷ்மி said...

அருமை. பயிற்சியின் பயனை அனுபவிக்கப் போவதென்னவோ நாமே. வெற்றி கிடைக்கட்டும் வார்த்தைகளுக்கு.

ஆன்மீக மணம் வீசும் said...

மோனத் தவம் அருமை.

//அழகுத் தமிழ் வார்த்தைகள்//

கவிதைகளுக்கு ஆதாரம் அவை தானே.

//முடிந்தால்ஆசிர்வதிச்சு மட்டும் செல்லுங்கள்//

கனியிருக்க காயைக் கவர்வானேன். முடியாவிட்டால் மௌனமே மேல்.

Post a Comment