நாங்கள் சன்னதியின் வாசலில் இருந்தோம்
"இது முட்டாள்களின் சரணாலயம் "
எனச் சொல்லிப்போனார்
ஒரு கருஞ்சட்டைக் காரர்
"எல்லாம அவன் கொடுத்தது
அவனிடம் எப்படி கணக்குப் பார்ப்பது "
மொத்தமாக உண்டியலில்
பணத்தை கொட்டிக்கொண்டிருந்தார்
ஒரு தொந்தி பெருத்த" கன "வான்
"உனக்கு எப்ப மனம் வருகிறதோ
அப்போது செய்
நான் விடாது வந்துகொண்டுதான் இருப்பேன்
நீயா நானா பார்த்துவிடுவோம் "
தானாகபுலம்பிக் கொண்டிருந்தார்
ஒரு கூன் விழுந்தபெரியவர்
"இதில் எது சரி
எல்லாமே சரியாய் இருக்க வாய்ப்பில்லையே "
குழப்பத்தில் இருந்தான நண்பன்
"அவர்களை நம்பி "கை"யின்றி வருபவர்கள்
எதையும் எடுத்துச் செல்ல வழியில்லை
வெறுங் கையுடன் வருபவர்கள்
கையளவே கொண்டு போகிறார்கள்
அண்டாவுடன் வருபவர்கள்
அள்ளிக் கொண்டு போகிறார்கள்.
இது கொடுக்கிற இடமில்லை
அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துக் கொண்டு செல்கிற இடம் " என்றேன்
நண்பன் கீழ் மேலாய் தலையாட்டினான்
அது ஏற்றுக் கொண்டது போலவும் இருந்தது
ஏற்றுக் கொள்ளாதது போலவும் இருந்தது
73 comments:
அவரவர் நம்பிக்கை பற்றிய அழகான கவிதை. வாழ்த்துகள்.
இது கொடுக்கிற இடமில்லை
அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துக் கொண்டு செல்கிற இடம் " //
அருமையான அனுபவ வரிகள்..
நம்பினவர்களுக்கு கடவுள்..
ஏற்றுக்கொள்ளாதவர்களைப்பற்றி கணக்கு ஏன்?
"உனக்கு எப்ப மனம் வருகிறதோ
அப்போது செய்
நான் விடாது வந்துகொண்டுதான் இருப்பேன்
நீயா நானா பார்த்துவிடுவோம் "
தானாகபுலம்பிக் கொண்டிருந்தார்
ஒரு கூன் விழுந்தபெரியவர்//
ரசித்த வரிகள்!
நம்பிக்கையோடு அள்ளிச் செல்வோம் ஆண்டவன் அருளை .
தாராளமாக கொடுத்துச் செல்வோம் நம் பாராட்டுக்களைக் கவிதைக்கு.
அவர்களோடு நம்பிக்”கை” யோடு வருகிறவர்கள் கையளவோடோ, அண்டாகுண்டாவிலோ எடுத்துச் செல்கிறர்கள் என்பதும் நம்பிக்”கை” யே. நம்மில் சிலர் ஏற்றுக் கொள்வதைக் குறிக்கவும் இடவலமாகத் தலையாட்டுவார்கள்.
ரமணி சார் உங்கள் கவிதை எவ்வளவு அழகான, ஆழமான விஷயங்களை மிக எளிதாக அள்ளிதருகிறது. எப்படிதான் உங்களால் ஒவ்வொரு பதிவிலும் மாறுபட்ட சிந்தனை கொண்ட கவிதைகளை உங்களால் அமுதசுரபி போல அள்ளி அள்ளி தரமுடிகிறது. வாழ்த்துக்கள்
நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.
நம்பிக்கைகள் வேறுபடும்.
"எல்லாம அவன் கொடுத்தது
அவனிடம் எப்படி கணக்குப் பார்ப்பது "
மொத்தமாக உண்டியலில்
பணத்தை கொட்டிக்கொண்டிருந்தார்
ஒரு தொந்தி பெருத்த" கன "வான்
அருமையான உண்மை.பணம் மட்டும் வாழ்க்கை இல்லை.
ஒவ்வொருவரின் கோணம் ஒவ்வொரு விதம். அதை அழகாய் நீங்கள் சொல்லிச் சென்ற விதம் அருமை. (தவிர்க்க இயலாத காரணங்களால் அடுத்த ஒரு வாரம் அதிகம் வலைப்பூக்கள படிக்க இயலாது. பின்னர் சேர்த்துப் படித்து கருத்திடுகிறேன். பொறுத்தருள்க!)
உடல் தளரும் முன்னே மனம் தளர ஆரம்பிக்கும் போது தான் ஆலய நம்பிக்கைகள் பலம் பெறுகின்றன!
//அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துக் கொண்டு செல்கிற இடம் "//
அருமை.
நம்பிக்கை பற்றி அழகான கவிதை.
அவரவர் நீதிகளை சொல்லி விட்டீர்கள். அருமையான கவிதை.
எதிலும் நம்பிக்கை தான் ஆதார மூலதனம்
என்பதை அழகாக விளக்கிச் சொல்லும் பதிவு.
உண்டென்றால் உண்டு
இல்லையென்றால் இல்லை......
கொடுக்கிற இடமில்லை எடுத்துச் செல்லுமிடம்தான் நன்றாகச் சொன்னீர்கள்..வாசித்தேன் வாக்கிட்டேன்..
நீ யாரெனத் தெரியவில்லை
நம்பிக்கையின்
ஆழத்தையும்,
அவசியத்தையும் ,
அழகாக சொன்ன பதிவு,
ஆனந்தம்
அருமை சார்.
பாஸ் உங்கள் கவிதைகள் ஓவ்வொன்றிலும் ஒரு கருத்து இருக்கின்றது நான் யோசிப்பதுண்டு எப்படி இப்படி எழுதுகின்றார் என்று.சந்தர்ப்பம் கிடைத்தால் உங்கள் கவிதைகளை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே.இன்னும் பலரை சென்று அடையும்
ஓவ்வொறுவரின் நம்பிக்கைகள் பற்றி சிறப்பான கவிதை
கவிதை அழகாகவும், ஆழமாகவும் இருக்கு சார்....
வெறுங் கையுடன் வருபவர்கள்
கையளவே கொண்டு போகிறார்கள்
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி .....
கண்ணதாசன் வரிகள் ஜாபகம் வருகிறது
மிகவும் அருமை ஐயா
தன்னிலே நம்பிக்கை யிருந்தால் இறை நம்பிக்கை இரண்டாம் பட்சமே. ஆயினும் இறை நம்பிக்கை எனக்கு ஒரு கைத்தடி. உங்கள் வரிகள் மிக நல்ல தத்துவ வரிகள். யதார்த்தம் கூறப்பட்டுள்ளது. அருமை. சிறப்பு .வாழ்த்துகள்.
வேதா.இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
அவரவர்களின் நம்பிக்கை தான் காரணம்.
எல்லாமே அருமையான யதார்த்த வரிகள்.
Lakshmi //
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கே. பி. ஜனா... //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தாராளமாக கொடுத்துச் செல்வோம் நம் பாராட்டுக்களைக் கவிதைக்கு.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாதேவி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
dhanasekaran .S //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கணேஷ் //
தாங்கள் மேற்கொள்ளும் பணி சிறக்க
மனமார்ந்த வாழ்த்துக்கள்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
உடல் தளரும் முன்னே மனம் தளர ஆரம்பிக்கும் போது தான் ஆலய நம்பிக்கைகள் பலம் பெறுகின்றன!//
மிகச் சரியான கருத்து
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
உண்டென்றால் உண்டு
இல்லையென்றால் இல்லை...... //
மிகச் சரியான கருத்து
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
A.R.ராஜகோபாலன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
K.s.s.Rajh //
சந்தர்ப்பம் கிடைத்தால் உங்கள் கவிதைகளை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே.இன்னும் பலரை சென்று அடையும் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சசிகுமார் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
sasikala //
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி .....
கண்ணதாசன் வரிகள் ஜாபகம் வருகிறது
மிகவும் அருமை ஐயா //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kavithai (kovaikkavi) //
தன்னிலே நம்பிக்கை யிருந்தால் இறை நம்பிக்கை இரண்டாம் பட்சமே. ஆயினும் இறை நம்பிக்கை எனக்கு ஒரு கைத்தடி.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோவை2தில்லி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இறைவன் திருவடி தவிர நமக்கு வேறு சரணாகதி ஏது ஐயா?
ராஜி //
தங்கள் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால்,அற்புதங்கள் நிகழாவோ!
அருமை
சென்னை பித்தன் //
தங்கள் வரவுக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வரிகள் அசத்தல்.... தொடருங்கள் அசத்துங்கள்.....
இடி முழக்கம் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஆமா
ஆமா
சிந்திக்கும் விதமா சொன்னீங்க அன்பரே..
அருமையான கவிதை....
வாழ்த்துகள்....
இது கொடுக்கிற இடமில்லை
அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துக் கொண்டு செல்கிற இடம் "
சிந்திக்க வைத்தது!
guna thamizh //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கோவிந்தராஜ்,மதுரை. //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பக்தியும் அது இல்லாததும் அவரவர் மனதளவு, நம்பிக்கைக்க, அனுபவங்களைப் பொறுத்தது....அழகாகச் சொல்லி விட்டீர்கள்.
அண்ணே சன்னிதி தரும் சங்கதியா!
ஸ்ரீராம். //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
விக்கியுலகம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
எடுத்துச் செல்லும் இடம் - சாமர்த்திய வரி. பிடித்தது.
அப்பாதுரை //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
சன்னதி - எடுத்து செல்லும் இடம்
மனசாட்சி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Rathnavel //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வணக்கம்! இது கொடுக்கிற இடம் இல்லை, அவரவர் சக்திக்கு எடுத்துக் கொள்ளும் இடம் என்று இறைவன் சன்னதியின் “ தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கருப் பொருளை உணர்த்துவதாய் அமைந்துள்ளது.
"இது கொடுக்கிற இடமில்லை
அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துக் கொண்டு செல்கிற இடம் "
இப்பத்தான் புரியுது கோவில்களில் கூட்டம் ஏன் பிச்சிக்கிட்டு போகுதுன்னு.
தி.தமிழ் இளங்கோ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
VENKAT //
தங்கள் வரவுக்கும் வித்தியாசமான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தாமத வருகைக்கு மன்னிக்கவும் சார். கணினி மற்றும் இணையதள பிரச்சினையினால் கடந்த ஒரு வாரமாக வலைத்தளம் பக்கம் வர இயலவில்லை. பதிவும் இட முடியவில்லை. தங்களது சில பதிவுகளையும் தவறவிட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். இனி தொடர்ந்து வருவேன்.
அருமையான உள்ளடக்கம் கொண்ட நல்ல கவிதை. இறைவனின் சந்நிதி என்றுமே எடுத்துச்செல்லும் இடம்தான் சந்தேகமில்லை. எந்த அளவினால் அளக்கிறோமோ அந்த அளவே நமக்கு கொடுக்கப் படும். இறைபக்தியும் சமூகத்தொண்டும் இருகண்களாய் கொண்டவருக்கு துன்பமில்லை. கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் என்னைப் பொறுத்தவரை பரிதாபத்துக்குரியவர்கள்தான். அருமையான கவிதை. தொடருங்கள் சார்! நண்பர் K.S.Raj சொல்வதைப்போல் தங்களது கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் சமூகத்திற்கு மிகுந்த பிரயோஜனமாக இருக்குமே?! முதல் காப்பி எனக்குத்தான் சார்!
துரைடேனியல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
த்ங்கள் கருத்தை கூடிய விரைவில்
செயல் படுத்த முயல்கிறேன்
பகிர்வுக்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்
ரமணி,
நிச்சயமாக 'எடுத்துச் செல்லும் இடம்தான்'. ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் யாரும் கோயிலுக்குப் போவதில்லை. நல்ல ஒப்பீடு. வாழ்க.
ShankarG //
தங்கள் வரவுக்கும் வித்தியாசமான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கோவிலைப் பற்றிய நம்பிக்கை தரும் பார்வை!
ஒவ்வொரு கவிதையிலும் மிளிர்கிறது வார்த்தைகளின் நயம்!
நம்பிக்கைபாண்டியன் . //
தங்கள் வரவுக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Post a Comment