Tuesday, January 31, 2012

கால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்

கால எல்லைகளை
கடக்கத் தெரிந்தால்
இணக்கமாய் மனத்துள்
நினைக்க முடிந்தால்
புரியாத புதிர்கள்
புரிந்து போகுமோ ?
குழப்பிய நிகழ்வுகள்
சீராகிப் போகுமோ ?

கவிஞராக இல்லாது
வணிகராக இருந்தவர்
ஒருசிறு அதிர்வினில்
பெருங்கவிஞர் ஆவது
எங்ஙனம் சாத்தியம் ?

முத்தான கவிதை
என்பது கூட
நிச்சயமாய் சாத்தியம்
ஞானம் 100
எங்ஙனம் சாத்தியம்  ?

பட்டினத்து அடிகளின்
கதைகேட்டு நானும்
குழம்பித் தவித்ததுண்டு
நம்பாது கதையென்று
நாளும் நினைத்ததுண்டு

ஒரு நாள்..
கைபேசி மாற்றாது
"சிம்"மதனை மட்டுமே
சில நேரம் மாற்றிவிட
அலைபேசியின் உள்ளடக்கம்
அடியோடு மாறிவிட
புதிருக்குத் தெரிந்தது புதிய வழி
எனக்குள் புகுந்தது புதிய ஒளி

உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?
 

44 comments:

Unknown said...

எந்த ஒரு தொடக்கமும்,மாற்றமும் ஒரு சிறு புள்ளியிலிருந்தே ஏற்படுவது ! அனுபவமாற்றம் எக்காலத்திலும் ஏற்படலாம்!

Avargal Unmaigal said...

உங்கள் படைப்பு மிகவும் அருமை
//உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?//

சாத்தியமே...புத்தன் அதற்கு உதாரணம்தானே ???

Unknown said...

ஒரு ரவுண்டு வந்துட்டீங்க போல அண்ணே!

Anonymous said...

சாத்தியம் தான் . ஜீன்கள் எனும் சட்டியில் இருப்பது

செயல் எனும் அகப்பையில் வந்தே தீரும் ஒருநாள் .

எல்லாம் முன்பே இந்திந்த காலகட்டத்தில் இன்னென்ன

நடக்க வேண்டும் என்ற தகவல்கள் நம் மூளை செல்

குரோமோசோம்களில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது

என்பது அறிவியல் கூறும் உண்மை.

ஸாதிகா said...

உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?//ஆஹா..இது சாத்தியப்பட்டால் எப்படி இருக்கும்?

RAMA RAVI (RAMVI) said...

அறிவு மாறாது.ஏற்கனவே புதைந்து இருப்பது,ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டுவிடும் என நினைக்கிறேன்.

குறையொன்றுமில்லை. said...

உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?

சசிகுமார் said...

பதிவு மிக அற்ப்புதம் சார்....

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
சிந்திக்கத் தூண்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

உங்கள் படைப்பு மிகவும் அருமை
சாத்தியமே...புத்தன் அதற்கு உதாரணம்தானே

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

//உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?// அனைவர் வாழ்விலும் அனவரதமும் நடக்கும் நிகழ்வுதானே. என்ன ஒரு வித்தியாசம் என்றால் அறிவு அடியோடு மாறாவிட்டாலும் ஆளுக்கேற்றபடி மாறத்தான் செய்கிறது. சிலர் பட்டினத்தார் ஆகின்றனர். சிலர் ரமணி ஆகின்றனர். குழப்பம் தேவையில்லை என்று எண்ணுகிறேன். நிறையவே சிந்திக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //

கூகூள் குழப்பத்தில் நாமும் புதிதாக எழுதி
குழப்பவேண்டாம் என நினைக்கிறேன்
தங்கள் வரவுக்கு மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி .. //

பதிவுக்கு நான் யோசிப்பதைவிட பின்னூட்டத்திற்கு
தாங்கள் யோசிப்பது அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகுமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

அனைவர் வாழ்விலும் அனவரதமும் நடக்கும் நிகழ்வுதானே. என்ன ஒரு வித்தியாசம் என்றால் அறிவு அடியோடு மாறாவிட்டாலும் ஆளுக்கேற்றபடி மாறத்தான் செய்கிறது. சிலர் பட்டினத்தார் ஆகின்றனர். சிலர் ரமணி ஆகின்றனர். குழப்பம் தேவையில்லை என்று எண்ணுகிறேன். நிறையவே சிந்திக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான விரிவான
சிந்திக்கத் தூண்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Seeni said...

Ayya ramani avarkale!
baala subramaniyam
sonnathaiye naan aamothikkiren!
nalla thoru padaippu!

மாலதி said...

கவிஞராக இல்லாது
வணிகராக இருந்தவர்
ஒருசிறு அதிர்வினில்
பெருங்கவிஞர் ஆவது
எங்ஙனம் சாத்தியம் ?//அற்ப்புதம்மனமார்ந்த நன்றி

ADHI VENKAT said...

//உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?//

அறிவை மாற்றுவது இயலாதது ஆயிற்றே....

நல்லதொரு கவிதை சார்.

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாலதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ahila said...

யோசிக்க வேண்டிய விஷயம்தான் ரமணி அவர்களே.....

Yaathoramani.blogspot.com said...

அகிலா

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

சாகம்பரி said...

//உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் // பக்குவம்தான் சார். அதைத்தருவது அனுபவம்தான். அதிலும் மோசமான அனுபவங்கள்தான் நிறைய மாற்றங்களை கொண்டு வருகிறது. நல்ல அனுபவங்கள் நம்மை சிந்திக்க விடுவதில்லை என்று நினைக்கிறேன். சிந்திக்க வைக்கும் பகிர்விற்கு நன்றி சார்.

Yaathoramani.blogspot.com said...

சாகம்பரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான விரிவான
சிந்திக்கத் தூண்டிப்போகும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம் ! இப்பொழுது உங்கள் கவிதைகள் அனைத்தும், தத்துவங்களின் தேரோட்டங்களாக உள்ளன ” பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா! இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா “ - பாடல்: கண்ணதாசன் ( படம்: ஆலயமணி ) என்ற தத்துவம் ஞாபகம் வந்தது.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்துள்ள கவிதை....

சொல்ல வரும் கருத்துகள்... ம்... நீங்க எங்கேயோ போயிட்டீங்க!

Anonymous said...

சிந்திக்க வேண்டிய விஷயம் தான் ரமணி சார்...

ராஜி said...

முத்தான கவிதை
என்பது கூட
நிச்சயமாய் சாத்தியம்
ஞானம் 100
எங்ஙனம் சாத்தியம் ?
>>>
கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவுன்னு பெரியவங்க கூற்றை மீண்டும் மெய்ப்பிப்பது போல் உள்ளது உங்க கவிதை.

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

இப்பொழுது உங்கள் கவிதைகள் அனைத்தும், தத்துவங்களின் தேரோட்டங்களாக உள்ளன ”

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ்//

சொல்ல வரும் கருத்துகள்... ம்... நீங்க எங்கேயோ போயிட்டீங்க!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவுன்னு பெரியவங்க கூற்றை மீண்டும் மெய்ப்பிப்பது போல் உள்ளது உங்க கவிதை.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

vetha (kovaikkavi) said...

''...அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல

மாறியிருக்கச் சாத்தியமா...'''
வாழ்வின் அனுபவங்களும், நல்லவர் தொடர்பும் சிலரை மாற்றுகின்றனவே. சமய குரவர்கள் மாறியுள்ளனரே. புத்தர் ஒரு நடை மூலம் தானே அரசபோகம் விட்டு வெளியேறினார். மாறிவிட சாத்தியங்கள் உண்டு என்று நான் நினைக்கிறேன் நல்ல சிந்தனை - இடுகை வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

ஹேமா said...

கவிதை தொடங்கிய விதமும் முடித்த விதமும் அதிசயம் !

Yaathoramani.blogspot.com said...

kavithai (kovaikkavi) //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
விரிவானசிந்திக்கத் தூண்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

சின்னஞ்சிறு சிம்மதனை மாற்றியதில் சிந்தனைத் தூண்டும் சிறப்பான கவிதர எல்லோராலும் இயல்வதில்லை. எண்ணத்தில் தவம் கிடக்கும் கருத்துக்களும் கவி வரிகளும் தங்கள் விரல்களில் கவித் தாண்டவமாடுகின்றன. மனம் நிறைந்த பாராட்டுகள் ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...

கீதா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

சாந்தி மாரியப்பன் said...

//கால எல்லைகளை
கடக்கத் தெரிந்தால்
இணக்கமாய் மனத்துள்
நினைக்க முடிந்தால்
புரியாத புதிர்கள்
புரிந்து போகுமோ ?
குழப்பிய நிகழ்வுகள்
சீராகிப் போகுமோ ?//

உடலை மாற்றாமல் அறிவை மட்டும் மாற்றிக் கொள்ள முடிஞ்சா கால எல்லைகளைக் கடக்க முடியுமோ என்னவோ :-)

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment