Wednesday, May 23, 2012

கரு நாகத்தின் பலவீனம் -5 (டிஸ்கி )


நம் வாழ்வில் எவ்வித மாறுதலும் இல்லாமல்
நிகழ்வுகளும் நாட்களும் தொடர்ந்து ஒரே மாதிரி
செல்லுகிற வரையில் எவ்வித
பிரச்சனையும் இல்லை
நாம் பாதுகாப்பு வலையத்தினுள் மிகச்சரியாகவும்
அதிகச் சுகமாகவும் மிக இயல்பாகவும்
பொருந்தி இருப்பதாக எண்ணி நாட்களைக்
கடத்திக் கொண்டிருக்கிறோம்

அதே சமயம் புதியதாகவும் நம் அன்றாட
நிகழ்வுகளில் ஒரு தடை ஏற்படுத்துவதாக்வும்
ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்குமாயின் அதிர்ச்சி
அடைவதோடு குழம்பியும் போய் விடுகிறோம்
அந்தக் குழப்பத்திற்கு பிரச்சனை எனப் பெயரிட்டு
திகைத்து நிற்கிறோம் இதனைத்தான்
 கரு நாகத்தின் பலவீனத்தின்
முதல் பதிவாகப் போட்டிருந்தேன்
அனைவரின் கவனமும் பிரச்சனையில்
முழுவதுமாக இருக்கும்படியாக பதிவை
மிக கவனமாக எழுதி இருந்தேன்
பின்னூட்டங்களும் அதையே பிரதிபலித்தன.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டோ அல்லது
அதனுடன் இருந்து கொண்டே எப்போதும் போல
இயல்பாக இருக்க முடிகிற பிரச்சனைகள் குறித்து
நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.
மாறாக அதனைத தீர்க்காவிடில்
நம் அன்றாட வாழ்வில் அதிகப் பாதிப்பு
ஏற்படும் எனில் அப்போதுதான்
அதனைத்தான் உடனடியாக தீர்க்க முயல்கிறோம்

முதல் நிலையாக நமக்குத் தெரிந்த விஷயங்கள்
மூலம் முயல்கிறோம்..அது சரிப்பட்டு
வரவில்லையெனில் அது குறித்து
அனுபவஸ்தர்களின் அறிவுரைகளைப்
பெற முயல்கிறோம்.பின் சாத்தியமானதும்
உடனடியாக ஆகக் கூடியதாகவும் உள்ள
ஒரு தீர்வைத் தேர்ந்தெடுத்து செயல் பட
முடிவெடுக்கிறோம்
இதைத்தான் இரண்டாம் பதிவாகப் போட்டிருந்தேன்
பின்னூட்டங்களிலும் இதன் பிரதிபலிப்பு
மிகச் சரியாக இருந்தது

பிரச்சனையை அங்குதான் தீர்க்கவேண்டும்
என்றாலும் கூடஅதற்கான தீர்வு அங்குதான்
இருக்கவேண்டும் என்பதில்லை
விக்கிரமாதித்தன் கதைகளிலோ அல்லது
பிற மந்திர வாதிக்கதைகளிலோ
அரக்கனின் உயிர் அவனிடத்து இல்லாது
வேறு எங்கோஒளித்துவைக்கப் பட்டிருப்பதைப்போல
 தீர்வுகளும் வேறு எங்கோ இருக்கலாம்
இதனை அறிய ஏற்கெனவே இதுபோல்
இதுவிஷயத்தில் அனுபவப்பட்டவர்களைத்
தேடிச் செல்வதே புத்திசாலித் தனம்

நமக்கு இமாலயப் பிரச்சனையாகத்
தெரிகிற பிரச்சனைஅவர்களுக்கு கூழாங்கல்லைப்
போலக் கூட எளியதாக இருக்கலாம் .
இதனை வலியுறுத்தும் விதமாகவே
பாம்புப் பிடிக்கும் ஊரைத் தேடிப்
போவதையும் அவர்கள் மிக எளிதான
ஒரு தீர்வு சொன்னதையும் பதிவாகப்போட்டிருந்தேன்'

முதல் பதிவில் பிரச்சனைகளின் தாக்கத்தில் மட்டுமே
இருந்தவர்கள் இரண்டாவதாக அடுத்து என்ன
எனத் தொடர்ந்தவர்கள் மூன்றாவதான பதிவில்
அந்தப் பலவீனம் என்ன எனஅறிந்து கொள்வதிலேயே
அதிகம்ஆர்வம் காட்டினார்களே ஒழிய பிரச்சனையில்
முன் போல அதிகக் கவனம் கொள்ளவில்லை.

நான்காவதாக பிரச்சனையை அனுபவஸ்தர்களின்
அறிவுறுத்தலோடு அல்லது அவர்களின் துணையோடு
தீர்ப்பது குறித்து எழுதி இருந்தேன்
அனுபவஸ்தர்களாக இருந்தாலும் பிரச்சனையை
முதல் தடவை சந்திக்கிற அதே மனோபாவத்தில்
பிரச்சனையை அணுகவேண்டிய
அவசியம் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளவே
பெரியவர் சூழலை ஆராய்வது தன் கைகளைத் துணியால்
கட்டிக் கொள்வது செங்கல்லைத் தேர்ந்தெடுப்பது என
நுட்பமான விஷயங்களாகப் பதிவு செய்திருந்தேன்

பாம்புப் பிரச்சனை மட்டுமில்லை.எந்தப் பகாசுரப்
பிரச்சனையாக இருந்தாலும் நிச்சயமாக அதற்கென
நிச்சயமாகஒரு தீர்வு உண்டு.ஒருவேளை இப்பதிவில்
குறிப்பிட்டிருப்பதைப் போல அந்தப் பிரச்சனைக்கு
மிகப் பெரிய பலவீனமான பக்கம் இருக்கவும் நிச்சயம்
 அதிகச் சாத்தியம் உண்டு எனபதற்காகவே
தலைப்பைக் கூட க் கரு நாகத்தின் பல்வீனம்
எனக் குறிப்பிட்டிருந்தேன்

இது நடந்த நிகழ்வுதான்.என்வேதான் இயல்பாக
எழுத முடிந்தது.ஆயினும் இது வெறும் நிகழ்வாகவும்
கதை போலவும் மட்டும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக்வே
இத்தனை பகுதிகளாகப் பிரித்து இதனை எழுதினேன்

இதனை மிகச் சரியாக்ப் புரிந்து கொண்டு சிலர்
பின்னூட்டமிட்டிருந்தது மனதிற்கு நிறைவாக இருந்தது
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி


62 comments:

பால கணேஷ் said...

ஆம். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு ஒரு பாடம் கற்றுத் தந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு பிரச்சனை எனில் அதைப் பதட்டமின்றி எப்படி அணுக வேண்டும் என்பதற்கு நீங்கள் கொடுத்த பாடமும் நிச்சயம் உதவும். (த.ம.2)

தீபிகா(Theepika) said...

கதையை வாழ்வியல் யதார்த்தங்களுக்கான படிப்பினைகளாக்கி சிந்திக்க வைக்கும் விதத்தில் தந்த தங்கள் பொறுப்புணர்வுள்ள எழுத்தாற்றல் பாராட்டத்தக்கது. பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்கான முடிவெடுக்கும் ஆற்றலை ஒரு கதையின் மூலம் புலப்படுத்திய அழகு தனி. வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

இமாலயப் பிரச்சனைக்கு எளிதான அனுபவத் தீர்வு !

பகாசுரப் பிரச்சினைக்கு படு எளிதான வழிகாட்டல் !

மகேந்திரன் said...

நிகழ்வுகள் நமக்கு சரியான ஆசான்
என்பது நிதர்சனமான உண்மை நண்பரே...
உங்கள் எழுத்தின் வடிவில் அதை அழகாக
புரிய வைத்துவிட்டீர்கள்...

குறையொன்றுமில்லை. said...

உண்மைதான் நிகழ்வுகள்தான் சரியானபடிப்பினையாக இருக்கு. அதை அழகாக சொல்லி விட்டீர்கள் நன்றி

குறையொன்றுமில்லை. said...

த. ம எங்க போச்சு?

தமிழ் மீரான் said...

ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுத் தராததை ஒரே ஒரு அனுவம் கற்றுத் தருந்து விடும். உங்கள் அனுபவப் பாடம் அருமை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளோடு கருநாகத்தை ஒப்பிட்டு விளக்கம் கொடுத்துள்ள்து வெகு அருமை, சார். பாராட்டுக்கள்.

குறையொன்றுமில்லை. said...

த. ம. 4

Unknown said...

உண்மை நிகழ்வுகளை,கதை போல, சுவைபட
சொல்லும் திறமை உமக்கே உரியது.

வாழ்த்துக்கள்!

சா இராமாநுசம்

Unknown said...

த ம ஓ 5

சா இராமாநுசம்

Ahila said...

ரமணி அவர்களே உங்களின் இந்த தொடர் பதிவு மூலம் வாழ்க்கையில் தினசரி சந்திக்கும் பிரச்சனைகளை கையாள வேண்டிய முறையை அழகான அனுபவமாக சொல்லி போனது அருமை...

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா குரு, உங்கள் அனுபவங்கள் எங்கள் வழிகாட்டி....!!!

Venkat said...

வேகமான இந்த உலகில் கதைகளைக் கதைகளாகப் பார்க்க மட்டுமே கற்றுக்கொடுக்கப் படுகிறோம்.

கதைகளை வைத்து சுவாரசியம் கூட்டிப் பணம் பண்ணும் கலை ஓங்கியுள்ள காலமிது.

கதைகள் வாழ்வியல் தத்துவங்களை விளக்குமாறு அமைப்பது மிகவும் அரிதான ஒன்று.

உங்களின் இந்தப் பதிவு அவ்வகையிலமைந்த அரிதான ஒன்று.

குறிப்பாக உங்களது இந்த 5 வது பகுதி மிக மிக முக்கியமான ஒன்றும் கூட.

துளசி கோபால் said...

ஆஹா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Madhavan Srinivasagopalan said...

Good article..
good analysis..

Thanks for sharing.

செய்தாலி said...

உண்மைதான் சார்
கண்டிப்பா அனுபங்களில் இருந்து நிறை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்

NAAN said...

உங்களின் இந்தப் பதிவு...... சரியானபடிப்பினை....

கீதமஞ்சரி said...

கருநாகத்தின் பலவீனம் என்னும் இத்தொடர்பதிவின் மூலம் பல வாழ்வியல் கருத்துகளை எங்கள் மனதில் பதியச் செய்திருக்கிறீர்கள். சிறுவயதில் சொல்லப்படும் ஒவ்வொரு கதையின் முடிவிலும் கேள்வி ஒன்று கேட்கப்படும். இந்தக் கதையிலிருந்து என்ன தெரியிது என்று. மிகச் சரியான முறையில் கதை சொல்லப்பட்டு, அதே நேர்க்கோட்டிலேயே புரிதலும் இருக்குமாயின் கதையின் நீதி சட்டென பிடிபட்டுவிடும். இங்கும் அப்படித்தான். ஆர்வம் சிலரிடத்தில் அதிகமாய்த் தென்பட்டிருந்தாலும் அதையும் விஞ்சிய வாழ்வியல் சிந்தனைகளும் அனுபவப் பாடங்களும் அனைவருக்குமே பிடிபட்டிருக்கும். மனம் தொட்டப் பதிவுகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார்.

கோவி.கண்ணன் said...

பம்புக்கு சமாதி கட்டிய இடத்தில் புற்றுக் கோவில் முளைத்ததா இல்லையா ?

:)

K said...

மிக அருமையாகச் சொல்லியிருக்கீங்க அண்ணா! ஒரு கதைக்குள் இவ்வளவு வாழ்வியல் விஷயங்களா? முதலில் படிக்கும் போது அந்தப் பாம்பு பற்றிய எண்ணமே மனதில் இருந்தது! ஆனால் இப்போது உங்கள் விளக்கம் படித்ததும் மிகவும் நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு!!

நல்லதொரு தொடர் தந்தமைக்கு வாழ்த்துக்கள் மீண்டும் அண்ணா :-))

Anonymous said...

இந்த டிஸ்கி வியாதி உங்களுக்கும் பரவிடுச்சா ரமணி சார்...

அருமையாகச் சொல்லியிருக்கீங்க...அனுபங்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்...

Learning never stops..Life never stops teaching us also...

வாழ்த்துக்கள் ரமணி சார்...

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

. ஒரு பிரச்சனை எனில் அதைப் பதட்டமின்றி எப்படி அணுக வேண்டும் என்பதற்கு நீங்கள் கொடுத்த பாடமும் நிச்சயம் உதவும். //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Angel said...

//அந்தப் பிரச்சனைக்கு
மிகப் பெரிய பலவீனமான பக்கம் இருக்கவும் நிச்சயம்
அதிகச் சாத்தியம் உண்டு //

நீங்க கூறியிருப்பது போல .எந்த பிரச்சினைக்கும் தீர்வு உண்டு அழகாக எழுதியிருக்கீங்க .

பாம்பை இருப்பிடத்தை முழுதும் அடைத்தது கொஞ்சம் மனதுக்கு கவலைதான் .தக்கன பிழைக்கும்.

Yaathoramani.blogspot.com said...

.தீபிகா(Theepika) //

பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்கான முடிவெடுக்கும் ஆற்றலை ஒரு கதையின் மூலம் புலப்படுத்திய அழகு தனி. வாழ்த்துக்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

இமாலயப் பிரச்சனைக்கு எளிதான அனுபவத் தீர்வு !
பகாசுரப் பிரச்சினைக்கு படு எளிதான வழிகாட்டல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

நிகழ்வுகள் நமக்கு சரியான ஆசான்
என்பது நிதர்சனமான உண்மை நண்பரே...
உங்கள் எழுத்தின் வடிவில் அதை அழகாக
புரிய வைத்துவிட்டீர்கள்...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

உண்மைதான் நிகழ்வுகள்தான் சரியானபடிப்பினையாக இருக்கு. அதை அழகாக சொல்லி விட்டீர்கள் நன்றி//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் மீரான் //

ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுத் தராததை ஒரே ஒரு அனுவம் கற்றுத் தருந்து விடும். உங்கள் அனுபவப் பாடம் அருமை!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //
.
அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளோடு கருநாகத்தை ஒப்பிட்டு விளக்கம் கொடுத்துள்ள்து வெகு அருமை, சார். பாராட்டுக்கள் //

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

உண்மை நிகழ்வுகளை,கதை போல, சுவைபட
சொல்லும் திறமை உமக்கே உரியது.
வாழ்த்துக்கள்!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அகிலா //.

ரமணி அவர்களே உங்களின் இந்த தொடர் பதிவு மூலம் வாழ்க்கையில் தினசரி சந்திக்கும் பிரச்சனைகளை கையாள வேண்டிய முறையை அழகான அனுபவமாக சொல்லி போனது அருமை//.

.பராட்டுக்கு மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //
.
ஆஹா குரு, உங்கள் அனுபவங்கள் எங்கள் வழிகாட்டி....!!!//

தங்கள் வரவும் பாராட்டும் எனக்கு
அதிக ஊக்கம் அளிக்கிறது
பாராட்டுக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

Venkat //

கதைகள் வாழ்வியல் தத்துவங்களை விளக்குமாறு அமைப்பது மிகவும் அரிதான ஒன்று.
உங்களின் இந்தப் பதிவு அவ்வகையிலமைந்த அரிதான ஒன்று.//

தங்கள் வரவும் பாராட்டும் எனக்கு
அதிக ஊக்கம் அளிக்கிறது
பாராட்டுக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

துளசி கோபால் //

தங்கள் வரவும் பாராட்டும் எனக்கு
அதிக ஊக்கம் அளிக்கிறது
பாராட்டுக்கு நன்றி

ஸ்ரீராம். said...

அருமை. மிச்ச நான்கு பகுதிகளும் படிக்கிறேன்.

தனிமரம் said...

அனுபவங்கள் ஊடேதான் பல தத்துவங்கள் அமையும் அருமை வாழ்த்துக்கள் ஐயா!

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //

Good article..
good analysis..
Thanks for sharing.//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //

உண்மைதான் சார்
கண்டிப்பா அனுபங்களில் இருந்து நிறை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வல்லத்தான் //

உங்களின் இந்தப் பதிவு...... சரியானபடிப்பினை..//

தங்கள் வரவும் பாராட்டும் எனக்கு
அதிக ஊக்கம் அளிக்கிறது
பாராட்டுக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி //

.. வாழ்வியல் சிந்தனைகளும் அனுபவப் பாடங்களும்
அனைவருக்குமே பிடிபட்டிருக்கும். மனம் தொட்டப் பதிவுகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

அருணா செல்வம் said...

தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்.
ஆனால்
நீங்கள் இந்த பாம்பு விசயத்தில் எல்லோருக்குமே பயத்தை வரவழித்துவிட்டீர்கள் ஐயா....
மற்றவர்களெல்லாம் எப்படியோ....
அந்தத் தொடர்“ முடியும் வரை என் கனவில் கூட பாம்பு வந்து பயமுறுத்தியது... ஆனால் பாவம் அதை அடித்து சாகடிப்பீர்களோ என்ற கவலையும் வந்தது. ஆனால் அழகாக சமாதி கட்டிவிட்டீர்கள்.
இது உண்மையில் நல்ல அருமையான படிப்பினை.

யாரும் அறியாத தகவலைக் கொடுத்தீர்கள்.
உங்கள் வழி தனி வழிங்க ரமணி ஐயா.

Yaathoramani.blogspot.com said...

கோவி.கண்ணன் //

பம்புக்கு சமாதி கட்டிய இடத்தில் புற்றுக் கோவில் முளைத்ததா இல்லையா ?

நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாத்தியோசி - மணி //

நல்லதொரு தொடர் தந்தமைக்கு வாழ்த்துக்கள் மீண்டும் அண்ணா :-))//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

அருமையாகச் சொல்லியிருக்கீங்க...அனுபங்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்...
Learning never stops..Life never stops teaching us also...
வாழ்த்துக்கள் ரமணி சார்...//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

angelin //


நீங்க கூறியிருப்பது போல .எந்த பிரச்சினைக்கும் தீர்வு உண்டு அழகாக எழுதியிருக்கீங்க //.

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

அருமை. மிச்ச நான்கு பகுதிகளும் படிக்கிறேன்.//

தங்கள் கருத்துடன் கூடிய பின்னூட்டத்தை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்

Yaathoramani.blogspot.com said...

தனிமரம் //

அனுபவங்கள் ஊடேதான் பல தத்துவங்கள் அமையும் அருமை வாழ்த்துக்கள் ஐயா!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //


யாரும் அறியாத தகவலைக் கொடுத்தீர்கள்.
உங்கள் வழி தனி வழிங்க ரமணி ஐயா.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Avargal Unmaigal said...

உங்களுடைய முத்திரை இல்லாமல் கதை முடிந்துவிட்டதே என்று எண்ணினேன் அதற்கு மாறாக இந்த பதிவில் அந்த முத்திரையை கண்டேன் நன்றாக இருக்கிறது

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //
.
உங்களுடைய முத்திரை இல்லாமல் கதை முடிந்துவிட்டதே என்று எண்ணினேன் அதற்கு மாறாக இந்த பதிவில் அந்த முத்திரையை கண்டேன் நன்றாக இருக்கிறது //

தங்கள் வரவும் பாராட்டும் எனக்கு
அதிக ஊக்கம் அளிக்கிறது
பாராட்டுக்கு நன்றி

வேலணை வலசு said...

//
பாம்புப் பிரச்சனை மட்டுமில்லை.எந்தப் பகாசுரப்
பிரச்சனையாக இருந்தாலும் நிச்சயமாக அதற்கென
நிச்சயமாகஒரு தீர்வு உண்டு.ஒருவேளை இப்பதிவில்
குறிப்பிட்டிருப்பதைப் போல அந்தப் பிரச்சனைக்கு
மிகப் பெரிய பலவீனமான பக்கம் இருக்கவும் நிச்சயம்
அதிகச் சாத்தியம் உண்டு
//
உண்மைதான்

Ganpat said...

சுருக்கமாக சொல்வதென்றால் இந்த ஐந்து பகுதிகளையும் சேர்த்து உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு ஒரு பாடமாக வைத்து விடலாம்.இந்த நிகழ்வு யாருக்கு வேண்டுமென்றாலும் ஏற்படலாம் ஆனால் இதனால் ஏற்பட்ட விளைவுகள் அதை சீர்படுத்தி சொல்லும் திறன்,மிக குறைந்த பேர்களுக்கே சாத்தியம்.அதில் நீங்களும் ஒருவர் ரமணி சார்!

Yaathoramani.blogspot.com said...

வேலணை வலசு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ganpat //

.இந்த நிகழ்வு யாருக்கு வேண்டுமென்றாலும் ஏற்படலாம் ஆனால் இதனால் ஏற்பட்ட விளைவுகள் அதை சீர்படுத்தி சொல்லும் திறன்,மிக குறைந்த பேர்களுக்கே சாத்தியம்.
அதில் நீங்களும் ஒருவர் ரமணி சார்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

பாம்புகளுக்கு பொந்தை மூடவும் தெரியாது, தோண்டவும் தெரியாது. ஆகவே எறும்புப் புற்றுக்குள் பாம்பு நுழையக் கூடாது என்று புற்றை அடைத்தால் ஒரு சில நாட்களில் மீண்டும் புற்று தோண்டப் படுவதைப் பல முறை கண்டிருக்கிறேன் . என்ன ஒரு சமாதானம் என்றால் அந்தப் புற்றுக்குள் பாம்பு இன்னும் குடிபுக வில்லை. வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

விட்டதை இப்போது தான் படித்து முடித்தேன்.
பிரச்சினைகளைத் தீர்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை - cut the loss and move on - இதையும் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
தீர்த்தே ஆக வேண்டும், தீர்வு இருந்தே தீரும் என்ற கொள்கையும் கருநாகத்தை கழுத்தில் சுற்றித்திரிவது போல என்று நினைக்கிறேன்.
ஒரு சிறுகதை போல் விறுவிறுப்பான தொடர். (இந்தக் கருவை வைத்து ஒரு கவிதையும் எழுதிவிட்டீர்கள் போலிருக்கிறதே?)

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

தீர்த்தே ஆக வேண்டும், தீர்வு இருந்தே தீரும் என்ற கொள்கையும் கருநாகத்தை கழுத்தில் சுற்றித்திரிவது போல என்று நினைக்கிறேன்.//

அதிகம் சிந்திக்கச் செய்த பின்னூட்டம்
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

யுவராணி தமிழரசன் said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு படித்ததால் ஐந்து பகுதிகளையும் தொடர்ச்சியாகவே படித்தேன்! பிரச்சனையை கையாளும் முறை பற்றிய மிகவும் அவசியமான பதிவு! பிரச்சனையை தீர்க்கும் முன் அதன் பலமும் அறிந்திருக்க வேண்டும் பலவீனமும் அறிந்திருக்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் Sir!

Yaathoramani.blogspot.com said...

யுவராணி தமிழரசன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment