"சமத்தன் சந்தைக்குப் போனால்
ஊரறிந்த பழமொழி
"சமத்தனுடன் சந்தைக்குப் போனாலும்
சாமான் வா ஙக முடியாது" என்பது
நானறிந்த புதுமொழி
நெருங்கிய நண்பனொருவனின்
புதுமனை புகுவிழாவிற்கு
திருமுருகன் திருவுருவப்படம்
பரிசளிக்கலாம் என எண்ணி
என் ஓவிய ந ண்பனின்
உதவியை நாடினேன்
எத்தனை கடை ஏறி இறங்கிய போதும்
எத்தனை படங்கள் எடுத்துக்காட்டிய போதும்
அத்தனையும் சரியில்லை எனச்சொல்லி
எனக்கு வெறுப்பேற்றிக்கொண்டே வந்தான்
பொறுமை இழந்து நானும்
உண்மைக் காரணம் கேட்டபோது
முடிவாக இப்படிச் சொன்னான்
"அனைத்து படங்களிலும்
குறையொன்று உள்ளது
முருகனின் சிரசுக்கு மேலாக
வேலின் கூர்முனை உள்ளது
இது வைக்கப்பட்ட வீடு
நிச்சயம் உருப்படாது "என்றான்
முருகனின் உயரத்திற்கும்
வேலின் உயரத்திற்கும்
அப்படி என்ன சம்பந்தம்
எனக்கேதும் விளங்கவில்லை
பின் அவனே விளக்கலானான்
"முருகனின் வேல் ஆயுதமில்லை
அது ஞானத்தின் குறியீடு
ஞானம் முருகனை மீறியது இல்லை
அவனுக்குள் அடங்கியதற்குள்
அவனை அடக்குவதென்பது
அறிவீனமானது "என்றான்
"சரி இருக்கட்டும்
அதனால் என்ன " என்றேன் நான்
என்னை அவன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்
அதில் ஏளனக் கலப்பு அதிகம் இருந்தது.
பின் தொடர்ந்து இப்படிச் சொன்னான்
"சரி இதையே மாற்றிச் சொல்லுகிறேன்
பதவிக்கு மீறிய தகுதி உடையவன்
தலைவன் என ஆனால்
பதவிக்கும் பெருமை
நாட்டுக்கும் நல்லது
பதவிதான் தகுதி என
ஒரு தலைவன் இருப்பானாகில்
அவனும் உருப்படமாட்டன்
அவன் நாடும் உருப்படாது
நம் நாட்டைபோல" எனச் சொல்லி
என்னை கடந்து போனான்.
வழக்கம்போலவே
நான் விளங்கிக் கொள்ள
சிறிது நேரம் ஆனது
73 comments:
ஆஹா... அழகான ஒரு கருத்து. முருகனின் வேலுக்குப் பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா? நன்று! (த.ம.2)
ஆணித்தரமானக் கருத்து! பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
தகுதியும் தலைமையும் எளிமையாக சொல்ல வந்தததை சொல்லி விட்டீர்கள். படித்தாலும் புரிதலும் எளிமையாக இருந்த்தது எனக்கு மிக மிக நிறைவைத் தருகிறது.
உங்கள் அனுபவங்களை சிந்தளைகளாக மாற்றி அதையே கவி வடிவில் கொடுத்திருப்பது நன்றாக உள்ளது.(த.ம.3)
படித்துப் பாருங்களேன்
சென்னையில் வாங்கலாம் வாங்க
நன்று.
அதானே படிச்சாப்ல இருக்கேன்னு கீழே வந்தால் மீள்பதிவு ம்ம்ம்ம் சரியாகத்தான் சொன்னாரோ உங்க நண்பர்...?
அட! வேலுக்குப் பின்னால் இம்புட்டு விஷயமா!!!!!!!
அதானே இந்த விளக்கமே புதுசா இருக்கே.
வணக்கம்!
"அனைத்து படங்களிலும குறையொன்று உள்ளது
முருகனின் சிரசுக்கு மேலாக வேலின் கூர்முனை உள்ளது
இது வைக்கப்பட்ட வீடு நிச்சயம் உருப்படாது "என்றான் ”
வேலிருக்க வினை இல்லை என்பார்கள். வேலவனின் வேலிலேயே இப்படி ஒரு கதை? இப்படியும் சிலபேர் பீதியை நல்லாத்தான் கிளப்புறாங்க! எடுத்துச் சொன்ன கவிஞருக்கு நன்றி!
//"சரி இதையே மாற்றிச் சொல்லுகிறேன்
பதவிக்கு மீறிய தகுதி உடையவன்
தலைவன் என ஆனால்
பதவிக்கும் பெருமை
நாட்டுக்கும் நல்லது
பதவிதான் தகுதி என
ஒரு தலைவன் இருப்பானாகில்
அவனும் உருப்படமாட்டன்
அவன் நாடும் உருப்படாது
நம் நாட்டைபோல" எனச் சொல்லி
என்னை கடந்து போனான்.//
வேல், முருகன். இவைகளை தவிர்த்து :)
நண்பர் சொல்லும் இந்த கருத்தில் எனக்கு 100 %
உடன்பாடு
இப்படித்தான் இறைவனுக்கே புது புது முட்டுக்கட்டைகளைப் பிறப்பித்துவிடுவது...
தேவையா...?
உங்களின் நண்பருக்குக்கு ஆண்டவனும் படத்தில் உள்ள அளவே தெரிந்திருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பகிர்வுக்கு நன்றிங்க ரமணி ஐயா.
நல்ல விளக்கம் கவிதை வடிவில் சொல்லியுள்ளீர்கள். ஒரு வேலுக்குப் பின்னால் இம்புட்டு விளக்கமா!! அற்புதம்.
முருகன் கைவேலுக்கு இப்படி ஒரு கதையா.....அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா.நிச்சயம் அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வேன் !
//வேர்கள்....வேல், முருகன். இவைகளை தவிர்த்து :)
நண்பர் சொல்லும் இந்த கருத்தில் எனக்கு 100 %
உடன்பாடு ///
வேர்கள்....கை குடுங்க.ஷேக் பண்ணிக்கிறேன் !
இனி முருகனை கும்பிடும்போதெல்லாம் இந்த கவிதான் நினைவுக்கு வரும். பகிர்வுக்கு நன்றி ஐயா
முருகனின் வேலைப்பற்றி நல்ல தகவல்.
கருத்து, இருமுறை படித்த பின் தான் எனக்கு விளங்கியது.
"நச்" தகவல் தல ..!
ரசிக்கும்படியான கவிதை!
'பதவி தான் தகுதி'... இது தான் உலக நியதி :)
முருகன்-வேல்... சுவாரசியமான பார்வை.
பணம் உள்ளவர் மட்டும் உயரட்டும் என்ற உயர் கொள்கை போலும் . மூளை உள்ளவர் எல்லாம் நொந்து போவது அவர் இன்பம்போலும் . என் செய்வது எழுதிக் கேட்பது எம் பணி அதை செவி சாய்க்காததுவே அவர் பணி போலும் . நல்ல கவிதை சமுதாய நோக்கு நலம் பெறட்டும்
////பதவிதான் தகுதி என
ஒரு தலைவன் இருப்பானாகில்
அவனும் உருப்படமாட்டன்
அவன் நாடும் உருப்படாது
நம் நாட்டைபோல" எனச் சொல்லி
என்னை கடந்து போனான்.////
அருமையான கருத்து சார்!
பகிர்வுக்கு நன்றி!
nalla vilakkam!
புதுமையான விளக்கம் புரிந்து கொண்டேன்
விளக்கம் நன்று!
இப்படியும் ஒருவிளக்கம் இருக்கின்றதா. அறிந்து கொண்டோம்.
பதவி, தகுதி பற்றி உங்கள் நண்பர் சொல்லியிருப்பது உண்மைதான்!
எனக்கு என்ன தோணுதுன்னா பதவிக்கும் தகுதிக்கும் இடையே உள்ளவற்றை விளக்க, சுட்ட உங்கள் நண்பர் போல் ஒருவர் தலைவர்களுக்கு இல்லையா :)
இனிமேல் தனியாகப்போய் படம் வாங்குங்கள்.அது அதுவே நல்லது.படதை ஒரு சமூக குறீடாக வைத்து நிறைய சொன்னது போல் உள்ளது.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
சார்
கலகிட்டீங்க சரியான கருத்து
ஆழமா சிந்திச்சா
அர்த்தம் உண்டு
மிகவும் அழகான ஒரு கருத்துமட்டுமல்ல ஆணித்தரமானக் கருத்தும் கூட!
வித்தியாசமான கருத்து! வித்தியாசமான விளக்கம்!.
த.ம. 8
மீள்பதிவானாலும் மறுபடியும் ஒரு முறை கவிதையைப்படித்து ரசித்தேன்!!!
பதவிக்கும் தகுதிக்கும் இடையில் தலைவனின் இருப்பைக் கொண்டு பயன்பெறலின் பங்கு என்ன என்பதை வேலுக்கும் குமரனுக்கும் பொருத்தி எளிதில் விளக்கிய விதம் அருமை. அதே சமயம் சமத்தனோடு போனால் சாமான் வாங்குவது சிரமம் என்னும் சொலவடையைத் தக்க உதாரணத்துடன் சொன்னதையும் ரசித்தேன். பை நிறையாவிட்டாலும் மனம் நிறைக்கிறதே...
மனம் தொட்டப் பதிவுக்குப் பாராட்டுகள் ரமணி சார்.
வேலும் அதன் உயரத்திலும் இத்தனை விடயம் உள்ளதா? இன்று தான் அறிகிறேன் .மிக நன்றி பதிவிற்கு. நல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
கணேஷ் //
ஆஹா... அழகான ஒரு கருத்து. முருகனின் வேலுக்குப் பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா?/
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
ஆணித்தரமானக் கருத்து! பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
சீனு //
உங்கள் அனுபவங்களை சிந்தளைகளாக மாற்றி அதையே கவி வடிவில் கொடுத்திருப்பது நன்றாக உள்ளது //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
பழனி.கந்தசாமி //.
..
நன்று.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
துளசி கோபால் //
அட! வேலுக்குப் பின்னால் இம்புட்டு விஷயமா!!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Lakshmi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //...
வேலிருக்க வினை இல்லை என்பார்கள். வேலவனின் வேலிலேயே இப்படி ஒரு கதை? /
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வேர்கள் //
நண்பர் சொல்லும் இந்த கருத்தில் எனக்கு 100 %
உடன்பாடு
வேல், முருகன். இவைகளை தவிர்த்து :)
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME .//
ஓவியர் என்பவர் நன்றாகப் படம் வரைவது மட்டுமல்லாது
அனைத்து விஷயங்க்களையும் அறிந்திருப்பதே சிறந்தது
கவிஞருக்கு இலக்கண அறிவு மட்டும் போதுமானதில்லை
என்பதைப் போல
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விச்சு //
.
நல்ல விளக்கம் கவிதை வடிவில் சொல்லியுள்ளீர்கள். ஒரு வேலுக்குப் பின்னால் இம்புட்டு விளக்கமா!! அற்புதம்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
படிக்கத் துவங்கும்போதே ஏதோ பொறி தட்டியது. ஏற்கனவே படித்ததுபோல் இருக்கிறதே என்று. மீள்பதிவு என்பதைப் படித்ததும் சில குறிப்புகள் எத்தனை முறை படித்தாலும் திகட்டாதது புரிந்தது. வாழ்த்துக்கள்.
இப்பெல்லாம் முருகனைப் பார்த்தவுடன் வேல் எந்த உயரத்தில் இருக்குன்னு கவனிப்பதே வேலையாப் போச்சு.
'நல்லவேளை....க்ரீடத்துக்குக் கீழே இருக்கு'ன்னு நானும் முகத்துக்குப் பக்கம் இருக்கு, தலையைத் தொடுதுன்னு கோபாலும்......:-))))
ஹேமா /
முருகன் கைவேலுக்கு இப்படி ஒரு கதையா.....அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா.நிச்சயம் அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வேன் //!
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்
ராஜி //
..
இனி முருகனை கும்பிடும்போதெல்லாம் இந்த கவிதான் நினைவுக்கு வரும். பகிர்வுக்கு நன்றி ஐயா//
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
RAMVI //
.
முருகனின் வேலைப்பற்றி நல்ல தகவல்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வரலாற்று சுவடுகள் //
.
"நச்" தகவல் தல ..//!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
.
ரசிக்கும்படியான கவிதை!
'பதவி தான் தகுதி'... இது தான் உலக நியதி :)
முருகன்-வேல்... சுவாரசியமான பார்வை.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
.சந்திரகௌரி //.
நல்ல கவிதை சமுதாய நோக்கு நலம் பெறட்டும் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
யுவராணி தமிழரசன் //
அருமையான கருத்து சார்!
பகிர்வுக்கு நன்றி!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Seeni //
nalla vilakkam!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மனசாட்சி™ //
புதுமையான விளக்கம் புரிந்து கொண்டேன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
விளக்கம் நன்று!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மாதேவி //
..
இப்படியும் ஒருவிளக்கம் இருக்கின்றதா. அறிந்து கொண்டோம்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கே. பி. ஜனா... //
பதவி, தகுதி பற்றி உங்கள் நண்பர் சொல்லியிருப்பது உண்மைதான்//!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Rathi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் சிந்திக்கவைக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விமலன் //
நல்ல பதிவு.வாழ்த்துக்கள் //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
செய்தாலி //
.
சார்
கலகிட்டீங்க சரியான கருத்து
ஆழமா சிந்திச்சா
அர்த்தம் உண்டு//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
மிகவும் அழகான ஒரு கருத்துமட்டுமல்ல ஆணித்தரமானக் கருத்தும் கூட!//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN //
வித்தியாசமான கருத்து! வித்தியாசமான விளக்கம்!//
..தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மனோ சாமிநாதன் //
.
மீள்பதிவானாலும் மறுபடியும் ஒரு முறை கவிதையைப்படித்து ரசித்தேன்!!//
..தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கீதமஞ்சரி //
பதவிக்கும் தகுதிக்கும் இடையில் தலைவனின் இருப்பைக் கொண்டு பயன்பெறலின் பங்கு என்ன என்பதை வேலுக்கும் குமரனுக்கும் பொருத்தி எளிதில் விளக்கிய விதம் அருமை.//
..தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
kovaikkavi //
வேலும் அதன் உயரத்திலும் இத்தனை விடயம் உள்ளதா? இன்று தான் அறிகிறேன் .மிக நன்றி பதிவிற்கு. நல் வாழ்த்து//.
..தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //.
சில குறிப்புகள் எத்தனை முறை படித்தாலும் திகட்டாதது புரிந்தது. வாழ்த்துக்கள் //
..தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.
துளசி கோபால் //
இப்பெல்லாம் முருகனைப் பார்த்தவுடன் வேல் எந்த உயரத்தில் இருக்குன்னு கவனிப்பதே வேலையாப் போச்சு //.
தங்கள் வரவுக்கும் வித்தியாசமான ரசிக்கும்படியான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
||பதவிதான் தகுதி என
ஒரு தலைவன் இருப்பானாகில்
அவனும் உருப்படமாட்டன்
அவன் நாடும் உருப்படாது
நம் நாட்டைபோல" //
அருமை.
வேலின் நீளம் பற்றிய பார்வை - அபத்தம்.
" வெள்ளத் தனைய மலர் நீட்டம்" - என்ற வள்ளுவனின் வாக்கை எடுத்துச் சொல்லுங்கள் நண்பருக்கு.
சிவகுமாரன் //.
அருமை.
வேலின் நீளம் பற்றிய பார்வை - அபத்தம்.
" வெள்ளத் தனைய மலர் நீட்டம்" - என்ற வள்ளுவனின் வாக்கை எடுத்துச் சொல்லுங்கள் நண்பருக்கு.//
தங்கள் வரவுக்கும் வித்தியாசமான ரசிக்கும்படியான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வேலின் நீளத்திற்கு இப்படி ஒரு விளக்கம் இருப்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி
.வலசு - வேலணை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி //
Post a Comment