Monday, June 4, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் -2

மோகன் தவிர மணிவண்ணன் அவர்களும்
ராம ராஜன் அவர்களும் இயகு நர்கள் என்பதால்
அவர்கள் எப்படி மிகத் தெளிவாக அவர்களுக்கான
இடத்தை மிகச் சரியாக தேர்ந்தெடுத்தார்கள் என்பதை
மிகச் சரியாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் முன் கதைச்
சுருக்கம் இருந்தால்தால் உதவும் என நினைக்கிறேன்

முன்பெல்லாம் வயதுக்கு மீறிப் பேசினாலே
புத்திசாலி யெனவும் ஒரு பிரபலமான
குட்டி நட்சத்திரத்தை ஒப்பிட்டுப் பேசுதலும்
கொஞ்சம் அழகாய் இருந்தாலே
பத்மினிபோல் வைஜந்திபோல் சாவித்திரிபோல்
என ஒப்பீடு செய்கிற கால கட்டம் அது.

பொழுது போக்கு என்றால் அது சினிமா மட்டுமே.
திருவிழா என்றால் சினிமா பார்த்தல் என்பது
நிச்சயமாக இருக்கவேண்டும் என அனைவரும்
ஏற்றுகொண்டிருந்த காலமது.

மதுரையைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட
இன மக்கள் திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை
பெண் வீட்டுக்காரர்களை புதிய திரைப்படத்திற்கு
அழைத்துச் செல்லவேண்டும் என்பது ஒரு
அங்கீகரிக்கப் பட்ட சடங்காகவே கூட இருந்தது
கூடுமானவரையில் இன்றைய அலங்கார் தியேட்டரும்
(அன்றைய லெட்சுமி ) சிந்தாமணி தியேட்டரும்
தினமணி டாக்கீசும் அதற்கான தியேட்டர்களாக்வே
அங்கீகரிக்கப் பட்டிருந்தன

இளைஞர்களாக் இருந்த நாங்கள் எல்லாம்
எங்களை சிவாஜி ரசிகராகவோ அல்லது
எம்.ஜி.ஆர் ரசிகராகவோ எங்களை
பிரித்துவைத்துக் கொண்டிருப்போம்.
எப்போதும் இரண்டு திலகங்களின் படங்களும்
ஒன்றாகவே திருவிழா நாட்களில் வெளியாகும்
அப்போதெல்லாம் ஒரு வார காலம்
மாலை நேர விவாதங்கள் எல்லாம் சினிமா குறித்தே
இருக்கும்.முதலில் அவர் அவர்கள் மதிக்கிற
திலகங்களைப் புகழ்வதில் துவங்குகிற விவாதம்
பின் அவர்களுக்கு எதிராகப் பேசுவதில் தொடர்ந்து
சண்டை சச்சரவு அடிதடியென முடிவதுண்டு

பெரும்பாலான சமயங்களில் நடிகர் திலகம்
அவர்களின் தொந்தி குறித்தும் மக்கள் திலகம்
அவர்களிம் சொட்டை குறித்தும் பேசினால் போதும்
அங்கு நிச்சயம் ஒரு பிரளயம் உருவாகிவிடும்

தங்கள் ரசிகர்களிடையே தங்கள் இமேஜ் குறித்து
இருக்கிற சாதக பாதகங்க்களை இர ண்டு திலகங்களும்
மிகத் தெளிவாக அறிந்திருந்தோடு மட்டுமல்லாது
அதனை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள்
என்பதுதான் சுவாரஸ்யத்திலும் சுவாரஸ்யம்

(தொடரும் )

38 comments:

இராஜராஜேஸ்வரி said...

தங்கள் ரசிகர்களிடையே தங்கள் இமேஜ் குறித்து
இருக்கிற சாதக பாதகங்க்களை இர ண்டு திலகங்களும்
மிகத் தெளிவாக அறிந்திருந்தோடு மட்டுமல்லாது
அதனை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள்
என்பதுதான் சுவாரஸ்யத்திலும் சுவாரஸ்யம்

சுவாரஸ்யம் நிறைந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Seeni said...

thodarattum...
thodarkiren!

Avargal Unmaigal said...

///பெரும்பாலான சமயங்களில் நடிகர் திலகம்
அவர்களின் தொந்தி குறித்தும் மக்கள் திலகம்
அவர்களிம் சொட்டை குறித்தும் பேசினால் போதும்
அங்கு நிச்சயம் ஒரு பிரளயம் உருவாகிவிடும்///

மிக உண்மையே.....சிறுவயதில் நான் சிவாஜி ரசிகன்

சசிகலா said...

சுவாரஸ்யத்திலும் சுவாரஸ்யம்
எங்களுக்கும் அப்படியே இருக்கிறது ஐயா தொடருங்கள் தொடர்கிறோம் .
Tha.ma.3

பால கணேஷ் said...

நானெல்லாம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சிவாஜியின் நடிப்புத் திறனை உணர இயலா மாணவப் பருவத்தில் சிவாஜி ரசிகர்களுடன் சண்டையே போட்டிருக்கிறேன். உங்களின் அரட்டையில் ஒன்றித் தொடர முடிகிறது. நன்றி.

பால கணேஷ் said...

த.ம.4

சின்னப்பயல் said...

மலரும் நினைவுகள்..!

ஸாதிகா said...

:)சுவாரஸ்ய தொடர்..

ஸ்ரீராம். said...

திருமணம் முடிந்து புதிய திரைப்படம்.... புதிய தகவல்!
மதுரையில் எதாவது இடம் அட்ரஸ் சொல்ல வேண்டுமென்றால் கூட அந்த ஏரியாவில் இருக்கும் தியேட்டர் பெயர் சொல்லித்தான் குறிப்பிடுவார்கள்!
அலங்கார் தியேட்டரின் முதல் பெயர் லட்சுமியா.... புதூர் அருகே ஐ டி ஐ ஸ்டாப்பிங்கில் ஒரு லட்சுமி தியேட்டர் உண்டு. மேலமாசி வீதி சந்திப்பில் இருந்த சாந்தித் தியேட்டரைத்தான் மூடியே விட்டார்கள்.... ஆசியாவின் மிகப் பெரிய தங்கமும் கூட!!

சிவாஜி எம் ஜி ஆர் சண்டை போல அதற்குமுன் எம் கே டி, பி யு சி ரசிகர்கள் இடையில் சண்டை நடந்திருக்குமா? தற்கால நடிகர்களின் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வது முகப் புத்தகத்தில் மிக மோசமாக உள்ளது!

ஸ்ரீராம். said...

மணிவண்ணனும் ராமராஜனும் டைரக்டர்கள் என்பதால் தனக்குரிய இடத்தை....// சரியான அவதானிப்பு. ஆனால் ராமராஜனுக்கு ஏதோ ஒரு அதிருஷ்டம்...!

மகேந்திரன் said...

அருமையான விவாதங்கள்..
அன்றைய தினம் அப்படித்தானே..
ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால்
அந்த வாரம் முழுதும் அதுதான் பேச்சு..
சின்னத்திரை ஊடகங்கள் பெருகுவதற்கு முன்னர்
இருந்த திரைப்படங்களின் நிலைமையே வேறு தான்..

அரட்டை தொடரட்டும் நண்பரே...

G.M Balasubramaniam said...

என் தம்பிகளில் ஒருவன் சிவாஜி ரசிகன்; மற்றவன் எம்ஜீயார் ரசிகன். இவகளின் கருத்து வேறுபாட்டுச் சண்டையை வேடிக்கை பார்த்த அனுபவம் உண்டு.

கீதமஞ்சரி said...

உங்கள் இளவயது அனுபவங்களோடு, அப்போதைய வாழ்க்கை முறையையும் அறிந்துகொள்ள முடிகிறது. சொல்லப்படும் விவரணைகள் விவாதத்தின் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகப்படுத்துகின்றன. தொடரும் பகுதிகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு ரசிகர்களுக்கும் இருந்த உணர்ச்சி பூர்வமான உரையாடல்களை உங்கள் எழுத்தின் மூலம் உணர முடிகிறது....

தொடர்ந்து வருவேன்.....

த.ம. 7

vanathy said...

தொடருங்கள். தொந்தி, சொட்டை இதுக்கெல்லாம் சண்டையா???

Unknown said...

அது ஏனோ இன்றுவரை எம்ஜிஆரை ஆதர்ஷ ஹீரோவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை! 70க்கு பின்னால் வந்த படங்களில் எம்ஜிஆர் பிரமாண்டத்தில் கவனம் செலுத்தி,நடிகைகளை பிழிந்து எடுத்திருப்பார்!அப்போது வந்த சிவாஜி படங்கள் பலதரப்பட்ட ரசனைக்குரியவையாய் இருந்தன..இதுவும் என்னை சிவாஜியின் பால் தள்ளியதற்கு ஒரு காரணம்!

Anonymous said...

சுவாரஸ்யம் நிறைந்த விவாதங்கள் நிறைந்த பகிர்வு...தொடருங்கள்...

ஹேமா said...

ராமராஜனைப் பிடிக்காது ஆனாலும் உங்கள் தொடர் சுவாரஸ்யம் !

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //s

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

thodarattum...
thodarkiren!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //


மிக உண்மையே.....சிறுவயதில் நான் சிவாஜி ரசிகன்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //
.
சுவாரஸ்யத்திலும் சுவாரஸ்யம்
எங்களுக்கும் அப்படியே இருக்கிறது ஐயா தொடருங்கள் தொடர்கிறோம் //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பா.கணேஷ் //
..
நானெல்லாம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சிவாஜியின் நடிப்புத் திறனை உணர இயலா மாணவப் பருவத்தில் சிவாஜி ரசிகர்களுடன் சண்டையே போட்டிருக்கிறேன். உங்களின் அரட்டையில் ஒன்றித் தொடர முடிகிறது. நன்றி.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சின்னப்பயல் //
.
மலரும் நினைவுகள்.

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

:)சுவாரஸ்ய தொடர்..//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம்.
திருமணம் முடிந்து புதிய திரைப்படம்.... புதியதகவல்!
மதுரையில் எதாவது இடம் அட்ரஸ் சொல்ல வேண்டுமென்றால் கூட அந்த ஏரியாவில் இருக்கும் தியேட்டர் பெயர் சொல்லித்தான் குறிப்பிடுவார்கள்!//

நீங்கள் குறிப்பிடுவது மிகச் சரி
தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

அருமையான விவாதங்கள்..
அரட்டை தொடரட்டும் நண்பரே...//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

என் தம்பிகளில் ஒருவன் சிவாஜி ரசிகன்; மற்றவன் எம்ஜீயார் ரசிகன். இவகளின் கருத்து வேறுபாட்டுச் சண்டையை வேடிக்கை பார்த்த அனுபவம் உண்டு.//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

.கீதமஞ்சரி //.

சொல்லப்படும் விவரணைகள் விவாதத்தின் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகப்படுத்துகின்றன. தொடரும் பகுதிகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //
.
இரண்டு ரசிகர்களுக்கும் இருந்த உணர்ச்சி பூர்வமான உரையாடல்களை உங்கள் எழுத்தின் மூலம் உணர முடிகிறது.... தொடர்ந்து வருவேன்.....//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy //

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //.

நீங்கள் குறிப்பிடுவது மிகச் சரி
தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

சுவாரஸ்யம் நிறைந்த விவாதங்கள் நிறைந்த பகிர்வு...தொடருங்கள்...//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //
.
ராமராஜனைப் பிடிக்காது ஆனாலும் உங்கள் தொடர் சுவாரஸ்யம் !//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

நானும் எம்ஜிஆர் ரசிகன்தான். ரொம்ப நாள் மற்றவர்கள் நடித்த படங்களைப் பார்ப்பதில்லை. அப்புறம் ஜெய்சங்கர் படங்களைப் பார்க்க தொடங்கினேன். விவரம் தெரிந்து பின் நாட்களில்தான் சிவாஜி, எம்.ஆர்.ராதா படங்களைப் பார்த்தேன் தங்கள் பதிவு தொப்பை சிவாஜி, எம்ஜிஆர் டோப்பா என்ற நண்பர்களுடனான பழைய வாக்குவாத நினைவுகளை இழுத்து வருகிறது. நன்றி!

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் பதிவு தொப்பை சிவாஜி, எம்ஜிஆர் டோப்பா என்ற நண்பர்களுடனான பழைய வாக்குவாத நினைவுகளை இழுத்து வருகிறது. நன்றி!

தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Anonymous said...

இதுவும் வாசித்தேன். தொடருவேன்.வாழ்த்துடன்....
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி //

Post a Comment