Sunday, June 3, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்...

சனி மாலையில் துவங்கி நள்ளிரவு வரை நீளும் 
அரட்டைக் கச்சேரியில் அந்த அந்த
வாரத்தில் நடந்த நாட்டு நடப்புகள்  குறித்து
விரிவான காரசாரமான விவாதம் எங்கள்
நண்பர் குழுவில் நடைபெறும்

ஒரு பொருள் குறித்த விரிவான விவாதம்
என்பதைவிட பல பொருள் குறித்த
முடிவற்ற விவாதமே அதிகம் நடைபெறும்
எப்போதேனும் ஒரு பொருள் குறித்த
விவாதம் நாங்களே எதிர்பாராது அமைந்துவிடும்

அந்தவகையில் இந்த வாரம் மாட்டியவர்
நடிகர் ராம ராஜன்தான்

நடிப்புத் திறனோ அல்லது சண்டைக் காட்சியில்
மிளிரும் திறனோஅல்லது சொல்லிக்
கொள்ளும்படியானஎந்த வித்தியாசமான
 நடிப்புத் திறமையோ இல்லாத நடிகர் ராம ராஜன்
எப்படி இத்தனைப் படங்களில்
நடித்து முடித்தார் என்கிற விவாதத்தை ஒருவர்
துவங்கி வைக்க விவாதம் சூடு பிடித்தது

நல்ல வேளையாக ராம ராஜன் அவர்களுக்கு
தீவீர ரசிகர் யாரும் கூட்டத்தில் இல்லாததால்
அவர் நடிப்பு குறித்த, கோடு போட்ட
உள்ளாடை குறித்த,லிப்ஸ்டிக் போட்ட உதடுகள்
குறித்த மோசமான விமர்சனங்களுக்கெல்லாம்
எவ்வித எதிர்ப்பும் இல்லை

ஆனாலும் கூட அவர் நடித்த படங்கள் எல்லாம்
ஓரளவு வசூல் குவித்தது குறித்தும் அவர் நடித்த
கரகாட்டக்காரன் தமிழ் பட உலகில் நிகழ்த்திய
சாதனைகள் குறித்தும் அந்தக் கூட்டத்தில்
மாற்றுக் கருத்தில்லை

நிச்சயமாக ஓரளவேனும் காரணமில்லாமல்
எவரும் வெற்றி கொள்ள சாத்தியமில்லை
ராம ராஜன் மட்டும் அல்ல மணிவண்ணன்
மற்றும் மோகன் அவர்கள் கூட
அதிகப் படங்களில் நடித்ததற்கு
ஒரு அடிப்படையான ஒரு காரணம் உண்டு

குறிப்பாக இயக்குநர்களாக இருந்த  ராம ராஜனும்
மணிவண்ணன் அவர்களும் மிகப் புத்திசாலித்தனமாக
தமிழ்த்திரையுல்கில் வெகு நாட்களாக
 காலியாகக் கிடந்தஅனைவரையும் கவர்ந்த
 காலி இடத்தை மிகச் சரியாகத்கண்டுபிடித்து
 நிரப்பியதுதான் அவர்கள் வெற்றிக்கான
விஷயமேயன்றி அவர்கள் நடிப்புத் திறனில்லை
என்பதை நான் விளக்கத் துவங்கினேன்

(தொடரும் )


35 comments:

Lali said...

வித்தியாசமா யோசிக்க தூண்டி இருக்கீங்க!

செய்தாலி said...

நல்ல அரட்டை சார்

வெங்கட் நாகராஜ் said...

அருமையா தொடங்கி இருக்கு அரட்டைக்கச்சேரி.... தொடருங்கள்... தொடர்கிறேன்.

பால கணேஷ் said...

எந்தக் கேரக்டருக்கும் பொருந்தக்கூடிய நடிப்பைக் கொண்டிருந்ததும் மிக இயல்பாக நடித்ததும் மணிவண்ணனின் பலம். ராமராஜன்..? அவரின் வெற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியமே! சொந்தக் குரலில் கூடப் பேசியராத மோகனும் கூட! தொடரும் அரட்டைக் கச்சேரியில் மகிழ்வுடன் கலந்து கொள்கிறேன்! (த.ம.4)

Seeni said...

Sari......
thodarattum!

இராஜராஜேஸ்வரி said...

தமிழ்த்திரையுல்கில் வெகு நாட்களாக
காலியாகக் கிடந்தஅனைவரையும் கவர்ந்த
காலி இடத்தை மிகச் சரியாகத்கண்டுபிடித்து
நிரப்பியதுதான் அவர்கள் வெற்றிக்கான
விஷயமே

மிகச்சரியான அவதானிப்பு !

Unknown said...

பெரிய ஆட்கள் பிரமாண்டத்தில் ஆழ்ந்திருக்க, எளியவர்கள் இடையில் புகுந்து தேவையானதை பெற்றுக் கொள்கின்றனர்!

Unknown said...

//பா.கணேஷ் said...
எந்தக் கேரக்டருக்கும் பொருந்தக்கூடிய நடிப்பைக் கொண்டிருந்ததும் மிக இயல்பாக நடித்ததும் மணிவண்ணனின் பலம்.//

இந்த கருத்தோடு ஒத்து போகிறேன்.

மோகன் அந்த கால கட்டத்தில் அசப்பில் கமலை ஒத்திருந்தார் அதனால் அவருக்கு வெற்றி கிட்டியிருக்கும் என்பது என் அவதானிப்பு

ராமராஜன் - no idea!

உங்கள் அவதானிப்பை எதிர் நோக்குகிறேன்

அப்பாதுரை said...

ஜெமினி கணேசன் வெற்றியே புரியாத புதிர் தானே?
சுவாரசியமான அரட்டை. ஒருதடவை கலந்து கொள்ளத் தோன்றுகிறது.

Avargal Unmaigal said...

உங்களின் அரட்டை கச்சேரி நன்றாக இருக்கும் போலிருக்குதே

ஸ்ரீராம். said...

வெற்றிடத்தை நோக்கி நிரப்ப ஓடும் காற்று போல இவர்கள் நுழைவு. மணிவன்னனுக்குத் திறமை இல்லை என்று சொல்லத் தோன்றவில்லை. மோகன் ஏழைகளின் கமலஹாசன்!

சசிகலா said...

வித்தியாசமான அரட்டை தொடருங்கள் ஐயா தொடர்கிறோம் .
Tha.ma.7

மகேந்திரன் said...

வித்தியாசமான அரட்டை நண்பரே..
ஆரம்பமாகட்டும்
அரட்டை அரங்கம்...

ஹேமா said...

தொடரும் .... ஆவல் !

அருணா செல்வம் said...

“பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்“ என்பார்கள்.
ராமராஜனை “நார்“ என்று எடுத்துக்கொள்ளலாம்.

அருமையான தொடக்கம்.
அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம் ரமணி ஐயா.

vanathy said...

நல்ல அலசல். ராமராஜன் படங்களை அதிகம் விரும்பி பார்த்தது கிராமத்து ஜனங்களே. மோகன் இந்த லிஸ்டில் வர மாட்டார் என்பதே என் கருத்து.

Yaathoramani.blogspot.com said...

Lali //

வித்தியாசமா யோசிக்க தூண்டி இருக்கீங்க!//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //
.
நல்ல அரட்டை சார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

அருமையா தொடங்கி இருக்கு அரட்டைக்கச்சேரி.... தொடருங்கள்... தொடர்கிறேன்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பா.கணேஷ் //
.
எந்தக் கேரக்டருக்கும் பொருந்தக்கூடிய நடிப்பைக் கொண்டிருந்ததும் மிக இயல்பாக நடித்ததும் மணிவண்ணனின் பலம். ராமராஜன்..? அவரின் வெற்றி எனக்கு எப்போதும் ஆச்சரியமே! சொந்தக் குரலில் கூடப் பேசியராத மோகனும் கூட! தொடரும் அரட்டைக் கச்சேரியில் மகிழ்வுடன் கலந்து கொள்கிறேன்! //

தங்களின் விரிவான பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது
மோகன் விஷயம் குறித்து நீங்க்கள் சொன்னது
மிகச் சரி
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

Sari......
thodarattum!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

மிகச்சரியான அவதானிப்பு !//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

பெரிய ஆட்கள் பிரமாண்டத்தில் ஆழ்ந்திருக்க, எளியவர்கள் இடையில் புகுந்து தேவையானதை பெற்றுக் கொள்கின்றனர்!//

ஒரு வகையில் தங்கள் கருத்து இந்தப் பதிவுக்கு
ஒத்துப்போகும் என நினைக்கிறேன்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kari kalan //

மோகன் அந்த கால கட்டத்தில் அசப்பில் கமலை ஒத்திருந்தார் அதனால் அவருக்கு வெற்றி கிட்டியிருக்கும் என்பது என் அவதானிப்பு //

சரியான அவதானிப்பே
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

ஜெமினி கணேசன் வெற்றியே புரியாத புதிர் தானே? //

நிச்சயமாக.ஆனாலும் அவருடைய
வஞ்சிக்கோட்டை வாலிபன், வாழ்க்கைப்படகு .,கல்யாணப்பரிசுசுமைதாங்கி,முதலான படங்கள் மறக்க முடியாத படங்களே
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

உங்களின் அரட்டை கச்சேரி நன்றாக இருக்கும் போலிருக்குதே//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

வெற்றிடத்தை நோக்கி நிரப்ப ஓடும் காற்று போல இவர்கள் நுழைவு. மணிவன்னனுக்குத் திறமை இல்லை என்று சொல்லத் தோன்றவில்லை. மோகன் ஏழைகளின் கமலஹாசன்!//

மனம் கவர்ந்த அருமையான பின்னூட்டம்
ஏழைகளின் கமலஹாஸன் என்கிறவித்தியாசமான
சொற்பிரயோகம் மனம் கவர்ந்தது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகலா //

வித்தியாசமான அரட்டை தொடருங்கள் ஐயா தொடர்கிறோம் .//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

வித்தியாசமான அரட்டை நண்பரே..
ஆரம்பமாகட்டும்
அரட்டை அரங்கம்...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //
.
தொடரும் .... ஆவல் !//

சுருக்கமான ஆயினும் நிறைவான பின்னூட்டம்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

அருமையான தொடக்கம்.
அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம் ரமணி//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy //.

நல்ல அலசல். ராமராஜன் படங்களை அதிகம் விரும்பி பார்த்தது கிராமத்து ஜனங்களே. மோகன் இந்த லிஸ்டில் வர மாட்டார் என்பதே என் கருத்து.//

சரியான அவதானிப்பே
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

தங்கள் வலைக்கு வந்தேன். 4வது தொடர் ஆக்கம். எப்படி விளங்கும்! முதலாவதுக்கு சென்றேன். சரி. நீங்களுமா! இப்படி சினிமா பற்றி எழுதுவது!...ஆச்சரியமாக உள்ளது. கருவிற்குப் பஞ்சம் போல. ஏன்?...ஏன்?....
பொதுவாக உங்கள் ஆக்கம், உலக நடப்புப் பற்றிய உங்கள் பாணி..யை நான் மிஸ் பண்ணுகிறேன். முயற்சிக்கு நல்வாழ்த்து. மற்றவை பின்பு வாசிப்பேன் இப்போது வேலைக்கு நேரமாகிறது.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

தங்கள் மனம் திறந்த கருத்துக்கு மனமார்ந்த நன்றி
சினிமாதான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது
இனி ஆளப் போவதும் அதுவாகத்தான் இருக்கப் போகிறது
அதனாலதான் எல்லா அரசியல் வாதிகளின் மகன்களும்அதில் கண்ணாய் இருக்கிறார்கள்.
அது குறித்தும் எழுதுவது எனக்கு முரணாகத் தெரியவில்லை
கருத்துக்கு மீண்டும் நன்றி

Post a Comment