Sunday, June 17, 2012

"அது "என்பது "இதுதான்"

ஏறக்குறைய முப்பதுவருடங்களுக்கு முன்னால்
 "கண்ணதாசன் " என்கிற ஒரு அருமையான
 இலக்கிய மாத இதழ் வெளிவந்து கொண்டிருந்தது

கணையாழியில் கடைசிப் பக்கத்தில்
சுஜாதா அவர்கள் எழுதி வந்ததைப் போல
கண்ணதாசன் மாத இதழின் கடைசி
பக்கங்களில் கவியரசு கண்ணதாசன் அவர்கள்
தன்னுடைய சிந்தனைகளை அருமையான
கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும்
எழுதி வந்தார்.

(அவைகள் புத்தகங்களாகவெளிவந்துள்ளனவா
என எனக்குத் தெரியவில்லை
தெரிந்தவர்கள் சொல்லலாம் குறிப்பாக
மின்னல் வரிகள் கணேஷ்  )

அதில் குறிப்பாக "நான்" என்கிற தலைப்பில்
ஒரு அற்புதமான கட்டுரையை எழுதி இருந்தார்
அந்தக் கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட வாசகம்தான்
என்னை சுயமாக சிந்திக்கத் தூண்டிப்போனது
அந்த வாசகம் இப்படிப் போகும்

"எனக்கு ஒரு பொருளைப் பற்றி
எழுதத் துவங்கும் முன்னால் எனக்கு அந்தப்
பொருள் பற்றி எனக்கு எ துவு ம் தெரியாது
எழுதத் துவங்கிவிட்டால் அந்தப் பொருள் குறித்து
எனக்கு எல்லாமே தெரியும்
ஏனெனில் எனக்கு எப்படி
சிந்திப்பது என்பது தெரியும்"என்பார்

யோசித்துப் பார்க்கையில்
ஒரு புதிய அறியாத பொருள் குறித்து
ஏதும் தெரியாத போதும்...

அதை உலகின் பார்வையிலும்
நம் தனித்த பார்வையிலும்
அதனை முற்றாக புற நிலையில் பார்க்கவும்
அக நிலையிலும் பார்க்கவும்
அதற்கு ஆதரவாகப் பார்க்கவும்
அதற்கு எதிர் நிலையில் பார்க்கவும்
அதன் கடந்த கால நிலையைப் பார்க்கவும்
எதிர்கால நிலையினை யூகிக்கவும் தெரிந்தாலே
அந்தப் பொருள் குறித்து எல்லாமும்
நிச்சய்ம் தெரிந்து தானே போகும் ?

இப்படிப் பார்க்கப் பழகினால் இதுவரை
நமக்குப் புரியாத, புதிராக இருப்பவைகள் எல்லாம்
பழகிய ,தெரிந்த  பொருளாகிப் தானே போகும் ?

வள்ளுவன் சொல்லுகிற "இதனை இதனால்
இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் " என்பதில்
இது என்பதும் இதனை என்பதும்
அதனை என்பதும் அவன் என்பதும்
அதுமட்டுமா என்ன ? எல்லாமும்தானே !

(குழப்பியதாக பெரும்பாலோர் சொன்ன
முன் பதிவான "அது""க்கான விளக்கப் பதிவு )


71 comments:

Avargal Unmaigal said...

///எனக்கு ஒரு பொருளைப் பற்றி
எழுதத் துவங்கும் முன்னால் எனக்கு அந்தப்
பொருள் பற்றி எனக்கு எதும் தெரியாது
எழுதத் துவங்கிவிட்டால் அந்தப் பொருள் குறித்து
எனக்கு எல்லாமே தெரியும்
ஏனெனில் எனக்கு எப்படி
சிந்திப்பது என்பது தெரியும்"என்பார்////

நாம் ப்ளாக்கில் எழுதுவது பற்றி கண்ணதாசன் அன்றே சொல்லி விட்டு போய்விட்டார் போலிருக்கிறது

எல் கே said...

Look in different angle

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
This comment has been removed by the author.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அது இது என்பது எது என்பதில் எல்லோருக்கும் குழப்பமும் இருக்கிறது.தெளிவும் இருக்கிறது. சிந்திக்க வைக்கிற பதிவு.

Gobinath said...

நான் சொல்ல வந்ததை “அவர்கள் உண்மைகள்” பதிவர் சொல்லிவிட்டார்.

ஆனால் சிந்தித்து உணர்வது தேடலிலும் மேலானது.

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வைக்கும் பதிவு சார் !

சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் பதிவு சென்றடையும் !

மகேந்திரன் said...

அது என்பதற்கான
குறள் வழி விளக்கம்
மிக அருமை நண்பரே..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"எனக்கு ஒரு பொருளைப் பற்றி
எழுதத் துவங்கும் முன்னால் எனக்கு அந்தப்
பொருள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது ...
எழுதத் துவங்கிவிட்டால் அந்தப் பொருள் குறித்து
எனக்கு எல்லாமே தெரியும் ...
ஏனெனில் எனக்கு எப்படி
சிந்திப்பது என்பது தெரியும்"
என்பார் கண்ணதாசன்//

சுயமாகவும், கற்பனையிலும் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு, மாறுபட்ட கோணங்களில், எல்லாப் பொருட்கள் பற்றியும் மிகத்தெளிவாகவும், விரிவாகவும் தெரியவே தெரியும். ;)))))

கண்ணதாசன் அவர்கள் இதுபோலச் சொன்னதில் வியப்பேதும் இல்லை தான்.

நல்ல விளக்கம்.

ஸாதிகா said...

வள்ளுவன் சொல்லுகிற "இதனை இதனால்
இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் " என்பதில்
இது என்பதும் இதனை என்பதும்
அதனை என்பதும் அவன் என்பதும்
அதுமட்டுமா என்ன ? எல்லாமும்தானே !
//அடடா..!

CS. Mohan Kumar said...

அடேங்கப்பா !!

பால கணேஷ் said...

அது என்பதன் விளக்கம் அடாடா... அருமை. கண்ணதாசன் இதழும் தென்றல் சில இதழ்களும் படிக்கும் பாக்கியம் எனக்கு முன்பு கிட்டியது. ஆனால் அவை புத்தகமானதா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை ரமணி ஸார். விசாரித்துச் சொல்கிறேன். நன்றி.

முத்தரசு said...

அதுக்கு தானா இவ்வளவும்

சீனு said...

அது என்பதற்கு அர்த்தம் அனைத்துமே என்பதை '
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் " '

வள்ளுவன் வரிகள் மூலம் கூறியது சிறப்பு

செய்தாலி said...

ம்(:

சசிகலா said...

வள்ளுவன் சொல்லுகிற "இதனை இதனால்
இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் " என்பதில்
இது என்பதும் இதனை என்பதும்
அதனை என்பதும் அவன் என்பதும்
அதுமட்டுமா என்ன ? எல்லாமும்தானே !// வள்ளுவரின் விளக்கத்தோடு கூடிய தங்கள் சிந்தனை சிறப்பு ஐயா.

ஸ்ரீராம். said...

நமக்குத் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. தேவை வரும்போது அது பற்றி எல்லாம் கேட்டு படித்தோ அறிந்து விடுகிறோம்....

MARI The Great said...

/////"எனக்கு ஒரு பொருளைப் பற்றி
எழுதத் துவங்கும் முன்னால் எனக்கு அந்தப்
பொருள் பற்றி எனக்கு எ துவு ம் தெரியாது
எழுதத் துவங்கிவிட்டால் அந்தப் பொருள் குறித்து
எனக்கு எல்லாமே தெரியும்
ஏனெனில் எனக்கு எப்படி
சிந்திப்பது என்பது தெரியும்"/////

சிந்தனை திறனுக்கு இந்த வரிகளே சான்று., இதை விட வேறு என்ன வேண்டும். ஒரு எழுத்தாளனாக வெற்றிபெற நல்ல சிந்தனை திறன் அவசியம்.!

MANO நாஞ்சில் மனோ said...

சிறப்பான சிந்தனை வாழ்த்துகள் குரு...!

ஆத்மா said...

அதுவுக்கு இதுதான் விளக்கமா...:)

பகிர்வுக்கு நன்றி சார்...

அருணா செல்வம் said...

தெளிவில்லாதது - “அது”
தெளியவைத்தது - ”இது”

நன்றிங்க ரமணி ஐயா.

S.Venkatachalapathy said...

அதனின் விளக்கம் அதற்குள்ளே இருந்த போதிலும் அதையே அதுவாகப் புரிந்து கொள்ள உதவும் பதிவோ இது?

மாலதி said...

யோசித்துப் பார்க்கையில்
ஒரு புதிய அறியாத பொருள் குறித்து
ஏதும் தெரியாத போதும்...//நன்றி

கோவி said...

ஓ.. புரிந்தது.

கே. பி. ஜனா... said...

//"எனக்கு ஒரு பொருளைப் பற்றி
எழுதத் துவங்கும் முன்னால் எனக்கு அந்தப்
பொருள் பற்றி எனக்கு எ துவு ம் தெரியாது
எழுதத் துவங்கிவிட்டால் அந்தப் பொருள் குறித்து
எனக்கு எல்லாமே தெரியும்
ஏனெனில் எனக்கு எப்படி
சிந்திப்பது என்பது தெரியும்"என்பார//
சிந்தனைத்திறன் பற்றி என்ன அழகாகச் சொல்லியிருக்கிறார்!

யுவராணி தமிழரசன் said...

வள்ளுவன் சொல்லுகிற "இதனை இதனால்
இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் " என்பதில்
இது என்பதும் இதனை என்பதும்
அதனை என்பதும் அவன் என்பதும்
அதுமட்டுமா என்ன ? எல்லாமும்தானே !
///////
தெளிவாக புரியவைத்துவிட்டீர்கள் Sir அது என்பது எது என்று!

G.M Balasubramaniam said...

ஓ, அந்த அது நான் எப்போதும் எழுதும் இதுதானா.?நானும் எழுதத் துவங்கின பிறகுதான் சிந்திப்பேன் அல்லது சிந்தனை தெளிவு பெற்று எழுத்தாக மாறும். நானும் என் பங்குக்கு குழப்புகிறேனா.?

kowsy said...

நிச்சயமாக எழுதுவதற்கு மட்டுமல்ல எந்த விடயத்திற்கும் ஆரம்பித்தாலே ஆராய்வும் முடிவும் தெரியும் .தொட்டால் தானே துலங்கும் . தொடங்கிய காரியத்தை முடிக்க கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தெளிவைப் பெறுவோம் அல்லவா. நன்றி

சென்னை பித்தன் said...

அது எது என்று சொன்ன சிறப்பான பதிவு இது!

சென்னை பித்தன் said...

த.ம.2

கோவி.கண்ணன் said...

//"எனக்கு ஒரு பொருளைப் பற்றி
எழுதத் துவங்கும் முன்னால் எனக்கு அந்தப்
பொருள் பற்றி எனக்கு எ துவு ம் தெரியாது
எழுதத் துவங்கிவிட்டால் அந்தப் பொருள் குறித்து
எனக்கு எல்லாமே தெரியும்
ஏனெனில் எனக்கு எப்படி
சிந்திப்பது என்பது தெரியும்"என்பார்//

கல்யாணத்துக்கு முந்தி தனக்கு நிச்சயக்கப்பட்டவள் ஒரு அப்பாவி என்றே ஆண் நினைக்கிறான், அப்பறம் பார்த்தால் அவனைவிட அவனைப் பற்றி அவன் மனைவிக்கு தான் நல்லாத் தெரியும். எல்லா இடத்திலும் லாக் ஆகிவிடுவான். ஆனால் அவன் அவளை எப்படி லாக் செய்ய வேண்டும் என்று கடைசிவரைக்கும் யோசித்துக் கொண்டே இருப்பான்.

:)

கோவி.கண்ணன் said...

//இப்படிப் பார்க்கப் பழகினால் இதுவரை
நமக்குப் புரியாத, புதிராக இருப்பவைகள் எல்லாம்
பழகிய ,தெரிந்த பொருளாகிப் தானே போகும் ?
//


:) மேலே நான் சொன்னப் பொருள் இது தானோ !

Unknown said...

// எனக்கு ஒரு பொருளைப் பற்றி
எழுதத் துவங்கும் முன்னால் எனக்கு அந்தப்
பொருள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது
எழுதத் துவங்கிவிட்டால் அந்தப் பொருள் குறித்து
எனக்கு எல்லாமே தெரியும்
ஏனெனில் எனக்கு எப்படி
சிந்திப்பது என்பது தெரியும்"//

கண்ணதாசன் கூற்று முற்றிலும் உண்மை
என்பதை உங்களைப் போலவே நானும் என் எழுத்தில்
உணர்கிறேன்
மிக்க நன்றி! இரமணி! இது போன்ற அரிய
செய்திகளை அனைவரும் அறிய,மேலும் தர வேண்டு
கிறேன்

சா இராமாநுசம்

Unknown said...

த ம ஓ 3

மாதேவி said...

நல்ல விளக்கம்.

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //


நாம் ப்ளாக்கில் எழுதுவது பற்றி கண்ணதாசன் அன்றே சொல்லி விட்டு போய்விட்டார் போலிருக்கிறது

த்ங்கள் முதல் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

எல் கே //

Look in different angle //

த்ங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

சிந்திக்க வைக்கிற பதிவு.//

த்ங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Gobinath //

சிந்தித்து உணர்வது தேடலிலும் மேலானது.//

த்ங்கள் வரவுக்கும் அருமையான கருத்தான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

சிந்திக்க வைக்கும் பதிவு சார் !

சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் பதிவு சென்றடையும் //

த்ங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
மனமார்ந்த நன்றி
அவசியம் செய்துவிடுகிறேன்!

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

அது என்பதற்கான
குறள் வழி விளக்கம்
மிக அருமை நண்பரே..//

த்ங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

சுயமாகவும், கற்பனையிலும் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு, மாறுபட்ட கோணங்களில், எல்லாப் பொருட்கள் பற்றியும் மிகத்தெளிவாகவும், விரிவாகவும் தெரியவே தெரியும். ;)))))//

த்ங்கள் வரவுக்கும் அருமையான கருத்தான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //


த்ங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பா.கணேஷ் //
.
அது என்பதன் விளக்கம் அடாடா... அருமை. //

த்ங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சீனு //


வள்ளுவன் வரிகள் மூலம் கூறியது சிறப்பு //

த்ங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //

த்ங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

வள்ளுவரின் விளக்கத்தோடு கூடிய தங்கள் சிந்தனை சிறப்பு ஐயா.//


த்ங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

த்ங்கள் வரவுக்கும் அருமையான கருத்தான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள்//.

சிந்தனை திறனுக்கு இந்த வரிகளே சான்று., இதை விட வேறு என்ன வேண்டும். ஒரு எழுத்தாளனாக வெற்றிபெற நல்ல சிந்தனை திறன் அவசியம்.!//

த்ங்கள் வரவுக்கும்
அருமையான கருத்தான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மோகன் குமார் //

அடேங்கப்பா !!//

த்ங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

சிறப்பான சிந்தனை வாழ்த்துகள் குரு...!//

த்ங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //

த்ங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

தெளிவில்லாதது - “அது”
தெளியவைத்தது - ”இது”

நன்றிங்க ரமணி ஐயா.//

த்ங்கள் வரவுக்கும்
அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

VENKAT //
.
அதனின் விளக்கம் அதற்குள்ளே இருந்த போதிலும் அதையே அதுவாகப் புரிந்து கொள்ள உதவும் பதிவோ இது?//

மிகச் சரி
அதை அதாக்வே சரியாகபுரிந்து கொள்ளவே
இத்னைப் பதிவாக்கி கொடுத்தேன்
இதை மிகச் சரியாகப் புரிந்து
பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தியமைக்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாலதி //

த்ங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவி //

ஓ.. புரிந்தது.//

சுருக்கமான ஆயினும் மிக அழுத்தமான
அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா...//


சிந்தனைத்திறன் பற்றி என்ன அழகாகச் சொல்லியிருக்கிறார்!//

த்ங்கள் வரவுக்கும்
அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

யுவராணி தமிழரசன் //

தெளிவாக புரியவைத்துவிட்டீர்கள் Sir
அது என்பது எது என்று!//

த்ங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

ஓ, அந்த அது நான் எப்போதும் எழுதும் இதுதானா.?நானும் எழுதத் துவங்கின பிறகுதான் சிந்திப்பேன் அல்லது சிந்தனை தெளிவு பெற்று எழுத்தாக மாறும்.//

த்ங்கள் வரவுக்கும் அருமையான கருத்தான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

த்ங்கள் வரவுக்கும் அருமையான கருத்தான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //
.
அது எது என்று சொன்ன சிறப்பான பதிவு இது!//

த்ங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

கோவி.கண்ணன் //

கல்யாணத்துக்கு முந்தி தனக்கு நிச்சயக்கப்பட்டவள் ஒரு அப்பாவி என்றே ஆண் நினைக்கிறான், அப்பறம் பார்த்தால் அவனைவிட அவனைப் பற்றி அவன் மனைவிக்கு தான் நல்லாத் தெரியும். எல்லா இடத்திலும் லாக் ஆகிவிடுவான். ஆனால் அவன் அவளை எப்படி லாக் செய்ய வேண்டும் என்று கடைசிவரைக்கும் யோசித்துக் கொண்டே இருப்பான்.

மேலே நான் சொன்னப் பொருள் இது தானோ !

நீங்கள் சொல்லிப் போவதும்
மிகச் சரியாகத்தான் இருக்கிறது
அவன் அது என பொதுவாகச் சொல்லிப்போனது
எனக்கு எப்படி கை கொடுக்கிறது பாருங்கள்
தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

கண்ணதாசன் கூற்று முற்றிலும் உண்மை
என்பதை உங்களைப் போலவே நானும் என் எழுத்தில்
உணர்கிறேன்
மிக்க நன்றி! இரமணி! இது போன்ற அரிய
செய்திகளை அனைவரும் அறிய,
மேலும் தர வேண்டுகிறேன்

த்ங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

நல்ல விளக்கம்.//

த்ங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

அது "என்பது "இதுதான்...
18+ போல என்று நினைத்தேன் ரமணி சார்...

Anonymous said...

அது இது எது விளக்கம் நன்றி. நல்வாழ்த்து..
வேதா. இலங்காதிலகம்.

Seeni said...

mun pathivum vilangiyathu!

ithuvum vilangiyathu!

paaraattukal!

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

த்ங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

அது இது எது விளக்கம் நன்றி. நல்வாழ்த்து..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

paaraattukal!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment