ரூப மற்றதாயினும்
அனைத்து இயக்கங்களுக்கும்
அச்சாணியாய் இருக்கும் அற்புதமே
நீதானே பிரம்மன்
நீதானே விஷ்ணு
நீதானே ருத்ரன்
தொப்புள் கொடி அறுபட
எம்முள் பிராண ஜீவனை ஏற்றி
எம்மை இயக்கத் துவங்கும்
நீதானே பிரம்மன்
ஒரு சிறு துளிக்கும்
பேரண்டப்பெருங்கடலுக்கும்
ஒரு இணைப்புப் பாலமாய் இருந்து
எம்மை தொடர்ந்து இயக்கும்
நீதானே விஷ்ணு
ஜீவ ராசிகளை
தோற்றுவித்தும் வளர்த்தும்
ஒரு நொடியில்வெளியேறி
ஏதுமற்றதாக்கியும்
களி நடனம் புரியும்
கருணையற்ற அரூபமே
நீதானே ருத்ரன்
உன் கருணையற்றுப் போயின்
உன் சகோதர்கள் நால்வரின்
வீரியமும் ஆகிருதியும்
ஒரு நொடியில்
அர்த்தமற்றதாகித்தானே போகிறது
காலதாமதமாயினும்
உன் சக்தியை
மிகச் சரியாய்ப் புரிந்து கொண்டோம்
எங்கள் ஜீவனே
எங்கள் காலமே
எங்கள் காலனே
உன் அருள் வேண்டி நின்றோம்
எம்மை ரட்சிப்பாயே !
அனைத்து இயக்கங்களுக்கும்
அச்சாணியாய் இருக்கும் அற்புதமே
நீதானே பிரம்மன்
நீதானே விஷ்ணு
நீதானே ருத்ரன்
தொப்புள் கொடி அறுபட
எம்முள் பிராண ஜீவனை ஏற்றி
எம்மை இயக்கத் துவங்கும்
நீதானே பிரம்மன்
ஒரு சிறு துளிக்கும்
பேரண்டப்பெருங்கடலுக்கும்
ஒரு இணைப்புப் பாலமாய் இருந்து
எம்மை தொடர்ந்து இயக்கும்
நீதானே விஷ்ணு
ஜீவ ராசிகளை
தோற்றுவித்தும் வளர்த்தும்
ஒரு நொடியில்வெளியேறி
ஏதுமற்றதாக்கியும்
களி நடனம் புரியும்
கருணையற்ற அரூபமே
நீதானே ருத்ரன்
உன் கருணையற்றுப் போயின்
உன் சகோதர்கள் நால்வரின்
வீரியமும் ஆகிருதியும்
ஒரு நொடியில்
அர்த்தமற்றதாகித்தானே போகிறது
காலதாமதமாயினும்
உன் சக்தியை
மிகச் சரியாய்ப் புரிந்து கொண்டோம்
எங்கள் ஜீவனே
எங்கள் காலமே
எங்கள் காலனே
உன் அருள் வேண்டி நின்றோம்
எம்மை ரட்சிப்பாயே !
54 comments:
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தையும் ஆக்கல், காத்தல், அழித்தல் பணிகளைச் செய்யும் முத்தேவர்களோடு ஒப்புமைப்படுத்தியதுபோல் தோன்றுகிறது. நான்கு சகோதரர்களெனப் படுவோர் யாரென்று புரிந்துகொள்ள இயலவில்லை. எனினும் அரூபமாய் விளங்கும் கால தேவனுக்கு கருணைமனு போல வரையப்பட்ட கவிதை மனம் ஈர்க்கிறது. பாராட்டுகள் ரமணி சார்.
என் புரிதலில் தவறிருந்தால் பொறுத்தருளித் திருத்தவும்.
உயிர் மூச்சான காற்றைப் பற்றிப் பாடியிருக்கிறீர்கள் என்று பொருள் கொண்டால் நன்றாக ரசிக்க முடிந்தது. ஆனால் சகோதரர்கள் நால்வர் என்கிற இடம் இடிக்கிறது. அந்த நால்வர் யாராய் இருக்கும் என்றே யோசித்துக் கொண்டிருக்கிறேன் இன்னும். (3)
பஞ்சபூதங்களின் வாழ்த்துப்பாடல் என்று நினைக்கிறேன்!
கவிதைவரிகள் நன்று..வாழ்த்துக்கள்!
கொஞ்சம் புரியுது கொஞ்சம் புரியவில்லை....இதற்கு கோனார் நோட்ஸ் தேவை..
// எங்கள் காலனே
உன் அருள் வேண்டி நின்றோம்
எம்மை ரட்சிப்பாயே !//
அனைத்தும் இவ்வரிகளில் அடங்கி விட்டது!
த ம ஓ 6
சா இராமாநுசம்
கடவுள் வாழ்த்து
யாதுமாகி....ம்ம்
காற்றே, மூச்சுக் காற்றே யாதுமாகி நிற்கிறாய் நீ. மற்ற நால்வருடன் சேர்ந்து ஐந்தாகி நானாகிறாய் .நீதான் உயிர், நீ போனபின் எல்லாம் மண்ணாகி மக்க வேண்டியது தான்.
காலதாமதமாயினும்
உன் சக்தியை
மிகச் சரியாய்ப் புரிந்து கொண்டோம்
எங்கள் ஜீவனே
எங்கள் காலமே
எங்கள் காலனே
உன் அருள் வேண்டி நின்றோம்
எம்மை ரட்சிப்பாயே !
மிகவும் ரசிக்கவைத்தவரிகள்.
யாதுமாகி ஐம்பூதங்களைப் பற்றி என நினைக்கிறேன் . சரியா ஐயா .
Tha.ma.7
nice sir
ரமணி ஐயா....
யாதுமாகி நின்றதோ.... காற்று!!
அருமைங்க.
நிலம்,நீர்,நெருப்பு,ஆகாயம் ஆகிய நான்கும் காற்றின்றி அர்த்தமற்றதாகும் எனப் பொருள் கொள்ளலாமா?
த.ம.8
GOOD POST
Interesting thought! :)
அருமை.... த.ம. ஒன்பது.....
இன்று எனது பக்கத்தில் ஜபல்பூர் - பாந்தவ்கர் பயணக்கட்டுரையின் ஒன்பதாம் பகுதி. நேரமிருக்கும் போது படித்து கருத்திட்டால் மகிழ்ச்சி....
காலதாமதமாயினும்
உன் சக்தியை
மிகச் சரியாய்ப் புரிந்து கொண்டோம்
அருமை.
மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியை புரிய வைக்கும் கவிதை.
மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியை புரிய வைக்கும் கவிதை.
யாதுமாகி....//
வாழ்வியல் கவிதை...பாடம்...ரமணி சார்...
//அனைத்து இயக்கங்களுக்கும்
அச்சாணியாய் இருக்கும் அற்புதமே///
///தொப்புள் கொடி அறுபட
எம்முள் பிராண ஜீவனை ஏற்றி
எம்மை இயக்கத் துவங்கும்
நீதானே பிரம்மன்////
முதல் சில வரிகளில் இருந்த சிறு சந்தேகம் இந்த வரிகளில் நிவர்த்தியானது சார்!இந்த வரிகளை கொண்டு தாங்கள் காற்று, சுவாசம் பற்றி சொல்வதாக தெரிகிறது சார்!
/////
ஜீவ ராசிகளை
தோற்றுவித்தும் வளர்த்தும்
ஒரு நொடியில்வெளியேறி
ஏதுமற்றதாக்கியும்////
மேலும் நான்கு சகோதரர்கள் என்பது (சுவாசம்) காற்றின்றி ஐம்பூதங்களில் மற்ற நான்கையும் குறிப்பிடுவதாக நான் நினைப்பது எனது புரிதல் Sir!
//எங்கள் ஜீவனே
எங்கள் காலமே
எங்கள் காலனே
உன் அருள் வேண்டி நின்றோம்
எம்மை ரட்சிப்பாயே !//
வாயுவை பிரம்மா சிவன் விஷ்ணுவுடன் ஒப்பிட்டு பா எழுதியிருப்பது அருமை. அதிலும் வரிக்கு வரி வாயுவின் பெருமை பாடுவது அற்புதம்
படித்துப் பாருங்கள்
சென்னையில் ஓர் ஆன்மீக உலா
வி'வேகமாக' வீசுகிறது தங்கள் கவிதைக் காற்று!
''..கருணையற்ற அரூபமே...''
கண்டு கொண்டேன்...கண்டுகொண்டேன்...காற்று..
ஐம்பூதங்கள்...அருமை.! எங்கேயோ போய்விட்டீர்கள்!
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
எனக்குப் புரியவில்லை. ஆங்கிலக் கவிதை எழுத்தை அழுத்த புளோக்கிற்குப் போகிறது. இந்த ஒழுங்கை நான் செய்யவில்லை. புனோக் தானியங்கியாக இப்படி செய்துள்ளது. எனக்கு தமிழ் வண்ணம் திரட்டி என ஒன்று இல்லவே இல்லை. (வேட்பிறெஸ் அழுத்த மறந்திடடேனோ தெரியவில்லை). மறுபடி இதை எழுதி முயற்சிக்கிறேன்.
அருமையான கவிதை ரமணி சார்.!
கடைசிக்கு முந்தைய பத்தியை தவிர்த்து பார்த்தால் காலம். சேர்த்துப் பார்த்தால் காற்று. நமக்குள் காற்று வருவதற்கு முன் "இறந்த காலம்". நம்முள் காற்று ஓடும் வரை "நிகழ் காலம்". நம்மிடமிருந்து காற்று போன பின் "எதிர் காலம்" (!?) என காலத்துக்கும் மூன்று காலம் காற்றின் மூலம் உண்டு என்கிறாரோ ரமணி?
கீதமஞ்சரி //
.
தங்கள் முதல் வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
பாரதியின்வசன கவிதைகளில் காற்று குறித்தான்
கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்
அந்த தாக்கத்தில் இதை எழுதினேன்
பஞ்ச பூதங்களில் காற்று
நீங்கலாக மீத்ம் இருப்பது நான்குதானே ?
பா.கணேஷ் //
உயிர் மூச்சான காற்றைப் பற்றிப் பாடியிருக்கிறீர்கள் என்று பொருள் கொண்டால் நன்றாக ரசிக்க முடிந்தது. ஆனால் சகோதரர்கள் நால்வர் என்கிற இடம் இடிக்கிறது. அந்த நால்வர் யாராய் இருக்கும் என்றே யோசித்துக் கொண்டிருக்கிறேன் இன்னும்//
தங்கள் வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
பாரதியின்வசன கவிதைகளில் காற்று குறித்தான்
கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்
அந்த தாக்கத்தில் இதை எழுதினேன்
பஞ்ச பூதங்களில் காற்று
நீங்கலாக மீத்ம் இருப்பது நான்குதானே ?
ரமேஷ் வெங்கடபதி //
i
கவிதைவரிகள் நன்று..வாழ்த்துக்கள்!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
காற்று என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல்
காற்று குறித்து எழுதி இருக்கிறேன்
தங்கள் வர்வுக்கும் மனம் திற்ந்த பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம் //
..
அனைத்தும் இவ்வரிகளில் அடங்கி விட்டது!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சின்னப்பயல் //
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனசாட்சி™ //
யாதுமாகி....ம்ம்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam ////
காற்றே, மூச்சுக் காற்றே யாதுமாகி நிற்கிறாய் நீ. மற்ற நால்வருடன் சேர்ந்து ஐந்தாகி நானாகிறாய் .நீதான் உயிர், நீ போனபின் எல்லாம் மண்ணாகி மக்க வேண்டியது தான்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
மிகவும் ரசிக்கவைத்தவரிகள்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Sasi Kala //
யாதுமாகி ஐம்பூதங்களைப் பற்றி என நினைக்கிறேன் . சரியா ஐயா ./
மிகச் சரி
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
செய்தாலி //
nice sir //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சென்னை பித்தன் //
.
நிலம்,நீர்,நெருப்பு,ஆகாயம் ஆகிய நான்கும் காற்றின்றி அர்த்தமற்றதாகும் எனப் பொருள் கொள்ளலாமா?//
மிகச் சரி
ஹாரி பாட்டர் //
.
GOOD POST //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Matangi Mawley //
Interesting thought! :)//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சிட்டுக்குருவி //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
அருமை...//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரிஷபன் //
அருமை...//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.
T.N.MURALIDHARAN //
மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியை புரிய வைக்கும் கவிதை.//
தங்கள் புரிதலுடன் கூடிய அருமையான
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி
ரெவெரி //
வாழ்வியல் கவிதை...பாடம்...ரமணி சார்...//
தங்கள் புரிதலுடன் கூடிய அருமையான
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி
யுவராணி தமிழரசன்
முதல் சில வரிகளில் இருந்த சிறு சந்தேகம் இந்த வரிகளில் நிவர்த்தியானது சார்!இந்த வரிகளை கொண்டு தாங்கள் காற்று, சுவாசம் பற்றி சொல்வதாக தெரிகிறது சார்!
மேலும் நான்கு சகோதரர்கள் என்பது (சுவாசம்) காற்றின்றி ஐம்பூதங்களில் மற்ற நான்கையும் குறிப்பிடுவதாக நான் நினைப்பது எனது புரிதல் Sir!
தங்கள் புரிதலுடன் கூடிய அருமையான
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி
சீனு //
வரிக்கு வரி வாயுவின் பெருமை பாடுவது அற்புதம் //
தங்கள் புரிதலுடன் கூடிய அருமையான
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி
கே. பி. ஜனா... //
வி'வேகமாக' வீசுகிறது தங்கள் கவிதைக் காற்று!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kavithai (kovaikkavi) //
கண்டு கொண்டேன்...கண்டுகொண்டேன்...காற்று..
ஐம்பூதங்கள்...அருமை.! எங்கேயோ போய்விட்டீர்கள்!
நல்வாழ்த்து.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வரலாற்று சுவடுகள் /
அருமையான கவிதை ரமணி சார்.//!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Kumaran //
காலத்துக்கும் மூன்று காலம் காற்றின் மூலம் உண்டு என்கிறாரோ ரமணி//
தங்கள் புரிதலுடன் கூடிய அருமையான
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி
Post a Comment