பிரிதலுக்கும்
பிரித்தலுக்கும் இடையில்
இணைதலுக்கும்
இணைத்தலுக்கும்
ஓரெழுத்து மட்டும் வித்தியாசமில்லை
ஒரு நூறு வித்தியாசமிருக்கிறது
பிரிதல் இணைதல்
சோகமானதாகவோ
சுகமானதோ
இதில் வன்முறையில்லை
இதில் கொள்கை திணிப்பில்லை
அடுத்தவர் தலையீடில்லை
பிரித்தல் இணைத்தல்
சோகமானதோ சுகமானதோ
இதில் வன்முறையுண்டு
கொள்கைத் திணிப்புண்டு
அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு
ஜாதி மதத்தில் இருந்து பிரித்து
இனத்தில் சேர்த்தவனாயினும்
இனத்திலிருந்து பிரித்து
தேசீயத்தில் சேர்த்தவனாயினும்
தேசீயத்திலிருந்து பிரித்து
வர்க்கத்தில் இணைத்தவனாயினும்...
அப்பத்தைப் பங்கிட்ட குரங்காய்
அதிகப் பங்குகொண்டவன்
அவனாகத்தான் இருக்கிறான்
நிகழ்வில்
பங்கேற்பவனாக மட்டுமே நாமிருக்கிறோம்
பலனடைபவன் அவனாயிருக்கிறான்
இழப்பதற்கு கோவணம் தவிர
ஏதுமில்லையாயினும்
பிரிதலோ இணைதலோ
முடிவெடுப்பதில் இனியேனும்
சுயமாய் இருப்போம்
சுய நலப் பிண்டங்களை
இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்
பிரித்தலுக்கும் இடையில்
இணைதலுக்கும்
இணைத்தலுக்கும்
ஓரெழுத்து மட்டும் வித்தியாசமில்லை
ஒரு நூறு வித்தியாசமிருக்கிறது
பிரிதல் இணைதல்
சோகமானதாகவோ
சுகமானதோ
இதில் வன்முறையில்லை
இதில் கொள்கை திணிப்பில்லை
அடுத்தவர் தலையீடில்லை
பிரித்தல் இணைத்தல்
சோகமானதோ சுகமானதோ
இதில் வன்முறையுண்டு
கொள்கைத் திணிப்புண்டு
அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு
ஜாதி மதத்தில் இருந்து பிரித்து
இனத்தில் சேர்த்தவனாயினும்
இனத்திலிருந்து பிரித்து
தேசீயத்தில் சேர்த்தவனாயினும்
தேசீயத்திலிருந்து பிரித்து
வர்க்கத்தில் இணைத்தவனாயினும்...
அப்பத்தைப் பங்கிட்ட குரங்காய்
அதிகப் பங்குகொண்டவன்
அவனாகத்தான் இருக்கிறான்
நிகழ்வில்
பங்கேற்பவனாக மட்டுமே நாமிருக்கிறோம்
பலனடைபவன் அவனாயிருக்கிறான்
இழப்பதற்கு கோவணம் தவிர
ஏதுமில்லையாயினும்
பிரிதலோ இணைதலோ
முடிவெடுப்பதில் இனியேனும்
சுயமாய் இருப்போம்
சுய நலப் பிண்டங்களை
இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்
75 comments:
சார் யார் மேலே கோபம்?
மிகமிக உண்மை. முடிவெடுப்பதில் சுயமாய் இருத்தலே நலம். அருமையாக உண்மையை உரைத்து மனம் கவர்ந்தது கவிதை.(3)
கவிதை பலவற்றை யோசிக்க வைக்குது ! நன்றி சார் ! (4)
பிரிதலோ இணைதலோ
முடிவெடுப்பதில் இனியேனும்
சுயமாய் இருப்போம்//
நன்றாகச் சொன்னீர்கள்; நயமாகவும்!
மோகன் குமார்//
சார் யார் மேலே கோபம்?//
புதிய மின் கட்டண ரீடிங் இன்றுதான் எடுத்தார்கள்
அதுவாக இருக்கும் என நினைக்கிறேன்
தங்கள் முதல் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பா.கணேஷ் //
மிகமிக உண்மை. முடிவெடுப்பதில் சுயமாய் இருத்தலே நலம். அருமையாக உண்மையை உரைத்து மனம் கவர்ந்தது கவிதை//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
கவிதை பலவற்றை யோசிக்க வைக்குது ! நன்றி சார்//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி!
உண்மை! திணிகப்படும் கருத்துகள், அயல் ஆக்கங்களின் தாக்கங்கள் வலிகளையே பரிசாகத் தரும்!
நிலாமகள் //
நன்றாகச் சொன்னீர்கள்; நயமாகவும்!//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி!
ரமேஷ் வெங்கடபதி //
உண்மை! திணிகப்படும் கருத்துகள், அயல் ஆக்கங்களின் தாக்கங்கள் வலிகளையே பரிசாகத் தரும்//!
நான் பதிவில் சொல்ல முயன்றது அதுவே
அதை மிக மிக அழகாகவும் சுருக்கமாகவும்
நேர்த்தியாகவும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தியமைக்கு
மனமார்ந்த நன்றி
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பத்தை பங்கிடும் குரங்குகளின் அப்பட்டமான பக்கங்களையும் திணித்தல்களுக்கு ஆளாகி சுயத்தை இழக்கும் முகங்களையும் ஓரெழுத்து வித்தியாசம் கொண்ட வார்த்தைகளைப் பின்னி வெளிச்சப் படுத்தியமை நன்று
இழப்பதற்கு ஏதுமில்லாத கோவணாண்டியாக இருக்கும்போதுதான் சுயமாய் சிந்திக்க வேண்டுமா.?
இழப்பதற்கு கோவணம் தவிர
ஏதுமில்லையாயினும்
பிரிதலோ இணைதலோ
முடிவெடுப்பதில் இனியேனும்
சுயமாய் இருப்போம்
சுய நலப் பிண்டங்களை
இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்
அர்த்தமுள்ளவரிகள்.
raji //
ஓரெழுத்து வித்தியாசம் கொண்ட வார்த்தைகளைப் பின்னி வெளிச்சப் படுத்தியமை நன்று//
மிகச் சரியாக படைப்பறிந்து பின்னூட்டமிட்டமைக்கு
மனமார்ந்த நன்றி.எப்போதும் ஒரு நிகழ்வு ஒரு உணர்வு
அல்லது ஒரு சொல் என்னப் பாதிக்க அதனை
நுனியாகக் கொண்டு யோசிக்கத் துவங்குவேன்
பிரிதலும் பிரித்தலிலும் உள்ள ஒரெழுத்து மாற
அதன்அர்த்தம் அடியோடு மாறுவது ஆச்சரியமளித்தது
அதன் தொடர்சியாகப் போக இது பிறந்தது
தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
இழப்பதற்கு ஏதுமில்லாத கோவணாண்டியாக இருக்கும்போதுதான் சுயமாய் சிந்திக்க வேண்டுமா.?
ஞான்ம் பிறந்ததும் அனைத்தையும் தூர எறிந்து
கோவணாண்டியாக வேண்டும் அல்லது
அனைத்தையும் இழந்து கோவணாண்டியாக ஆனபின்
ஞானம் பெறவேண்டும்
இங்கு இந்த் இரண்டு சாத்தியங்கள் தானே இருக்கிறது
தங்கள் வரவுக்கும் சிந்திக்கச் செய்யும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Lakshmi //
அர்த்தமுள்ளவரிகள்.//
தங்கள் வரவுக்கும் உற்சாக்மூட்டிப் போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
சூப்பரா இருக்கு.
//புதிய மின் கட்டண ரீடிங் இன்றுதான் எடுத்தார்கள்
அதுவாக இருக்கும் என நினைக்கிறேன்//
ஓ அது தான் காரணமா?!
வித்தியாசமாக இருக்கிறது
tha.ma 6
பிரிதல் பிரித்தல் வித்தியாசப் படுத்திய விதம் அருமை
ஆஹா.....என்னா ஒரு கவி...
த ம ஓ.....7
தலைப்பு போட மறந்துட்டீங்களோ....இல்லை தெரிந்து தான் விட்டீர்களோ....
பிரித்தல் இணைத்தல்
சோகமானதோ சுகமானதோ
இதில் வன்முறையுண்டு
கொள்கைத் திணிப்புண்டு
அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு
சுயம் உணர்த்தும் உன்னத கவிதை ! பாராட்டுக்கள் !
//இழப்பதற்கு கோவணம் தவிர
ஏதுமில்லையாயினும்
பிரிதலோ இணைதலோ
முடிவெடுப்பதில் இனியேனும்
சுயமாய் இருப்போம்
சுய நலப் பிண்டங்களை
இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்//
நல்ல வரிகள்.... மோகன் குமார் கேட்ட கேள்வியே என் மனதிலும் இருந்தது.... அவருக்குச் சொன்ன பதில் படித்தேன். அதனால் கேட்கவில்லை....
எல்லாமே அந்த “த்“ செய்யிற வேலை என்பதை நன்றாகவே புரிய வைத்தீர்கள் ரமணி ஐயா.
பிரிதல் இணைதல் என்று இரண்டிருக்குறதா ?? இல்லை இரண்டில் ஒன்றின் இல்லாமைதான் இன்னொன்றா ??
பெயர்தான் ஜனநாயக நாடு. பெரும்பாலும் 'எல்லாம்' ஜனங்கள் மேல் திணிக்கப் படுபவையாகவே இருக்கின்றன.
பிரிதலும் பிரித்தலும் இனைதலும் இணைத்தலும் சுய லாபத்திற்காகவே செய்யப்படுகின்றன.நல்ல ஒப்பீடு.
இழப்பதற்கு கோவணம் தவிர ஏதுமில்லை/
ரமணி ஐய்யா,
எப்போதும் போல் சமூக விழிப்புணர்வு ததும்பும் கருத்துக்களுடன் சிறப்பான ஆக்கம்.
nalla kavithai ayya!
நல்ல ஆழமா கருத்துகளை தாங்கி நிற்கும் கவிதை.
வாழ்த்துக்கள்
தன் வினை பிற வினை வேறுபாடு வைத்து மிகவும் அருமையான, ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு!நன்று
த ம ஓ 10
சா இராமாநுசம்
அருமை சார்
vanathy //
சூப்பரா இருக்கு.//
தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வரலாற்று சுவடுகள் //
வித்தியாசமாக இருக்கிறது //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
சீனு //
பிரிதல் பிரித்தல் வித்தியாசப் படுத்திய விதம் அருமை//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சிட்டுக்குருவி //
.
தலைப்பு போட மறந்துட்டீங்களோ....இல்லை தெரிந்து தான் விட்டீர்களோ...//
மறந்துதான் போனேன்
தங்கள் பதிவு பார்த்து இப்போது
சரி செய்துவிட்டேன் நன்றி
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
சுயம் உணர்த்தும் உன்னத கவிதை
! பாராட்டுக்கள் !//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இழப்பதற்கு கோவணம் தவிர
ஏதுமில்லையாயினும்
பிரிதலோ இணைதலோ
முடிவெடுப்பதில் இனியேனும்
சுயமாய் இருப்போம்
சுய நலப் பிண்டங்களை
இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்ஃஃஃஃஃஃஃஃஃஃ
உணர வைத்த கவிதை இது.வாழ்த்துக்கள் சொந்தமே...
பிரித்தல் இணைத்தல்
சோகமானதோ சுகமானதோ
இதில் வன்முறையுண்டு
கொள்கைத் திணிப்புண்டு
அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு//
வாவ் என்னே வார்த்தை பிரயோகம் மிகவும் ரசித்தேன் குரு....!!!
""பிரித்தல் இணைத்தல்
சோகமானதோ சுகமானதோ
இதில் வன்முறையுண்டு
கொள்கைத் திணிப்புண்டு
அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு""
முற்றிலும் உண்மை.பொருட்செறிவான கருத்து.
உங்கள் கோட்டையான கவிதைக்குவந்துவிட்டீர்கள்.
தூள் கிளப்புங்கள். மிக்க நன்றிசார்.
வரிகள் அனைத்தும் மிகவும் அர்த்தமுள்ளவையாக உள்ளன
வெங்கட் நாகராஜ்//
நல்ல வரிகள்.... மோகன் குமார் கேட்ட கேள்வியே என் மனதிலும் இருந்தது.... அவருக்குச் சொன்ன பதில் படித்தேன். அதனால் கேட்கவில்லை.//
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME //
.
எல்லாமே அந்த “த்“ செய்யிற வேலை என்பதை நன்றாகவே புரிய வைத்தீர்கள் ரமணி ஐயா.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
எல் கே //
பிரிதல் இணைதல் என்று இரண்டிருக்குறதா ?? இல்லை இரண்டில் ஒன்றின் இல்லாமைதான் இன்னொன்றா ??
பிரிந்து ஒன்றில் இணையாமலும் இருக்கலாமே
அப்போது அது வேறுதான் இல்லையா ?
அருமையான சிந்திக்கத் தூண்டிய பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
பெயர்தான் ஜனநாயக நாடு. பெரும்பாலும் 'எல்லாம்' ஜனங்கள் மேல் திணிக்கப் படுபவையாகவே இருக்கின்றன.//
மிகச் சரியான கருத்து
பல விசயங்களில் நாம் திணிக்கப் பட்ட்டதைத்தான்
ஏற்றுக் கொண்டிருக்கிறோம்
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN //
பிரிதலும் பிரித்தலும் இனைதலும் இணைத்தலும் சுய லாபத்திற்காகவே செய்யப்படுகின்றன.நல்ல ஒப்பீடு.//
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சின்னப்பயல் //
இழப்பதற்கு கோவணம் தவிர ஏதுமில்லை/
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சத்ரியன் //
.
ரமணி ஐய்யா,
எப்போதும் போல் சமூக விழிப்புணர்வு ததும்பும் கருத்துக்களுடன் சிறப்பான ஆக்கம்.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
.
nalla kavithai ayya!//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனசாட்சி™ //
நல்ல ஆழமா கருத்துகளை தாங்கி நிற்கும் கவிதை.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம்//
.
தன் வினை பிற வினை வேறுபாடு வைத்து மிகவும் அருமையான, ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு!நன்று//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
செய்தாலி //
.
அருமை சார் //
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Athisaya //
உணர வைத்த கவிதை இது.வாழ்த்துக்கள் சொந்தமே...//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //..
வாவ் என்னே வார்த்தை பிரயோகம் மிகவும் ரசித்தேன் குரு.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
radhakrishnan //
முற்றிலும் உண்மை.பொருட்செறிவான கருத்து.
உங்கள் கோட்டையான கவிதைக்குவந்துவிட்டீர்கள்.
தூள் கிளப்புங்கள்.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
வரிகள் அனைத்தும் மிகவும் அர்த்தமுள்ளவையாக உள்ளன//
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சுய சிந்தனையால் அல்லாது பிறரது விருப்பு வெறுப்புகளுக்குத் தன்னையே பலியிட்டுக் கொள்வதன் மூலம் சுயமிழக்கும் வலியையும் அதை மீட்கும் வழியையும் அழகாய் உணர்த்திய வரிகள். ஜி.எம்.பி. ஐயாவுக்கான பதிலில் வெளிப்பட்ட வாழ்க்கையின் இருநிலைகளுக்கான கோட்பாடு கண்டு வியந்தேன். இதுவரை உணராதவர்களும் உடனடியாய் உணரும் வகையில் கவியாக்கம் வெகு நன்று. பாராட்டுகள் ரமணி சார்.
பிரிதலுக்கும்
பிரித்தலுக்கும் இடையில்
இணைதலுக்கும்
இணைத்தலுக்கும்
ஓரெழுத்து மட்டும் வித்தியாசமில்லை
ஒரு நூறு வித்தியாசமிருக்கிறது//
உண்மைதான் அய்யா அதை உணர்ந்தால் உள்ளத்தால் உணர்ந்தால் உண்மை விளங்கும்..
மிக அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்
தொடர்ந்துவருகிறோம்..
இழப்பதற்கு கோவணம் தவிர
ஏதுமில்லையாயினும்
பிரிதலோ இணைதலோ
முடிவெடுப்பதில் இனியேனும்
சுயமாய் இருப்போம்// தெளிவாகச் சொன்னீர்கள் ஐயா.
நல்ல சிந்தனை.
உங்களுக்கு இங்கே ஒரு பரிசு காத்திருக்கிறது. வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அப்பத்தைப் பங்கிட்டக் குரங்கு - ரசித்தேன். இது ஒரு வட்டம் என்று நினைக்கிறேன். எல்லாருமே இந்த வட்டத்துக்குள் வந்து போகிறோமோ?
பிரிதல் பிரித்தல் வித்தியாசப் படுத்திய விதம் அருமை ரமணி சார்....
பிரிதல், இணைதல் தன்வினை.
பிரித்தல், இணைத்தல் பிறர் வினை
விளக்கங்களும் சிறப்பு.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
கீதமஞ்சரி //
ஜி.எம்.பி. ஐயாவுக்கான பதிலில் வெளிப்பட்ட வாழ்க்கையின் இருநிலைகளுக்கான கோட்பாடு கண்டு வியந்தேன். இதுவரை உணராதவர்களும் உடனடியாய் உணரும் வகையில் கவியாக்கம் வெகு நன்று. பாராட்டுகள் ரமணி சார். //
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அன்புடன் மலிக்கா
மிக அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்
தொடர்ந்துவருகிறோம்.. //
தங்கள் வரவுக்கும்உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Sasi Kala //
சுயமாய் இருப்போம்// தெளிவாகச் சொன்னீர்கள் ஐயா.//
தங்கள் வரவுக்கும்உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவிநயா //
உங்களுக்கு இங்கே ஒரு பரிசு காத்திருக்கிறது. வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.//
எதிர்பாரா இன்ப அதிர்ச்சி தந்து மகிழ்வித்தமைக்கு
மனமார்ந்த நன்றி.மகிழ்வுடன்
ஏற்றுக் கொள்கிறேன்
அப்பாதுரை ..//
அப்பத்தைப் பங்கிட்டக் குரங்கு - ரசித்தேன்.//
தங்கள் வரவுக்கும்உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
பிரிதல் பிரித்தல் வித்தியாசப் படுத்திய விதம் அருமை ரமணி சார்...//
தங்கள் வரவுக்கும்உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
பிரிதல், இணைதல் தன்வினை.
பிரித்தல், இணைத்தல் பிறர் வினை
விளக்கங்களும் சிறப்பு.
நல்வாழ்த்து.//
தங்கள் வரவுக்கும்உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
ஒரு வட்டம் என்று நினைக்கிறேன். எல்லாருமே இந்த வட்டத்துக்குள் வந்து போகிறோமோ? //
வட்டம் கொஞ்சம் யோசிக்கச் செய்து போனது
வரவுக்கும் சிந்திக்கச் செய்துபோகும் அருமையான
பின்னூட்டங்களுக்கும் மனமார்ந்த நன்றி
விழிப்புணர்வுக் கவி.
"அப்பத்தைப் பங்கிட்ட குரங்காய்"
இதுதானே நடந்துகொண்டு இருக்கின்றது.
மாதேவி //
விழிப்புணர்வுக் கவி//.
"அப்பத்தைப் பங்கிட்ட குரங்காய்"
இதுதானே நடந்துகொண்டு இருக்கின்றது.//
தங்கள் வரவுக்கும்உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment