தனது மனம் கவர்ந்தவர்களுக்கு
ஒரு வலிமைமிக்க குதிரையினைக் கொடுத்து
மாலைக்குள் உன்னால் எவ்வளவு தூரம்
சவாரி செய்து போக முடியுமோ
அவ்வளவு தூரம் போய் அந்தப் பகுதி
முழுவதையும்எனது கொடையாக
உனக்கு எடுத்துக் கொள் என
பண்டை மன்னர்கள் சொல்வார்கள் என
கேள்விப்பட்டிருக்கிறேன்
அதைப்போல
தமிழ் மண நிர்வாகிகள் என்னையும்
ஒரு பொருட்டாக மதித்து ஒரு வாரம்
நட்சத்திரப் பதிவராக இருக்கப் பணித்ததையும்
அதன் காரணமாக எனக்குக் கிடைத்த
நான்கு முத்தான நண்பர்களையும்
600 புதிய பார்வையாளர்களையும்
ஏறக்குறைய 3500 பக்கப் பார்வைகளைப்
பெற்றதையும் நான் பெரும் பேறாகக்
கருதுகிறேன் அதற்குக் காரணமாக இருந்த
.தமிழ்மண நிர்வாகிகளுக்கு எனது
மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன்
நட்சத்திரப் பதிவராகத் தேர்ந்தெடுக்கப்
-பட்டவுடன் எப்படிச் செய்தால் சரியாக
சிறப்பாகச் செய்யமுடியும் என மூத்த பதிவர்
திரு.கோவி. கண்ணன் அவர்களைத் தொடர்பு
கொண்டபோது ஒரு சரியான வழியைச் சொன்னார்
அது எனக்கு மிக்க பயனுள்ளதாய் இருந்தது
அவருக்கும் எனது பணிவான நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன்
தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிட்டும்
வாக்களித்தும் என்னை உற்சாகப்படுத்திக்-
-கொண்டிருக்கும் சக பதிவர்கள் அனைவருக்கும்
என மனமார்ந்த நன்/றியைத் தெரிவித்து
எனது நட்சத்திர வாரத்தை நிறைவு
செய்கிறேன்
தொடர்ந்து வழக்கம்போல் பதிவில்
நம் அனபான உறவினைத் தொடர்வோம்
பதிவர்களாகிய நாம்
இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
நமக்கு
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.
சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
நமக்கு
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.
விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
ந ம்
வெற்றிக்கு தடையேதும்
ஒரு வலிமைமிக்க குதிரையினைக் கொடுத்து
மாலைக்குள் உன்னால் எவ்வளவு தூரம்
சவாரி செய்து போக முடியுமோ
அவ்வளவு தூரம் போய் அந்தப் பகுதி
முழுவதையும்எனது கொடையாக
உனக்கு எடுத்துக் கொள் என
பண்டை மன்னர்கள் சொல்வார்கள் என
கேள்விப்பட்டிருக்கிறேன்
அதைப்போல
தமிழ் மண நிர்வாகிகள் என்னையும்
ஒரு பொருட்டாக மதித்து ஒரு வாரம்
நட்சத்திரப் பதிவராக இருக்கப் பணித்ததையும்
அதன் காரணமாக எனக்குக் கிடைத்த
நான்கு முத்தான நண்பர்களையும்
600 புதிய பார்வையாளர்களையும்
ஏறக்குறைய 3500 பக்கப் பார்வைகளைப்
பெற்றதையும் நான் பெரும் பேறாகக்
கருதுகிறேன் அதற்குக் காரணமாக இருந்த
.தமிழ்மண நிர்வாகிகளுக்கு எனது
மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன்
நட்சத்திரப் பதிவராகத் தேர்ந்தெடுக்கப்
-பட்டவுடன் எப்படிச் செய்தால் சரியாக
சிறப்பாகச் செய்யமுடியும் என மூத்த பதிவர்
திரு.கோவி. கண்ணன் அவர்களைத் தொடர்பு
கொண்டபோது ஒரு சரியான வழியைச் சொன்னார்
அது எனக்கு மிக்க பயனுள்ளதாய் இருந்தது
அவருக்கும் எனது பணிவான நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன்
தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிட்டும்
வாக்களித்தும் என்னை உற்சாகப்படுத்திக்-
-கொண்டிருக்கும் சக பதிவர்கள் அனைவருக்கும்
என மனமார்ந்த நன்/றியைத் தெரிவித்து
எனது நட்சத்திர வாரத்தை நிறைவு
செய்கிறேன்
தொடர்ந்து வழக்கம்போல் பதிவில்
நம் அனபான உறவினைத் தொடர்வோம்
பதிவர்களாகிய நாம்
இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
நமக்கு
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.
சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
நமக்கு
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.
விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
ந ம்
வெற்றிக்கு தடையேதும்
வருவ தில்லை எப்போதும்.
30 comments:
வாழ்த்துக்கள் ஐயா! தொடர்ந்து பல சிகரம் தொட வாழ்த்துக்கள்!
அருமை. இந்த வாரம் நீங்கள் உங்கள் அனுபவம் பகிர்ந்தது போல் தொடர்ந்து செய்யுங்கள் நன்றி
அருமையாகச் சொல்ல வேண்டியவைகளைச் சொல்லி சுருக்கமாக இத்துடன் இன்று முடித்து விட்டீர்கள். அதிலும் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன. வெற்றிகரமாக தங்கள் பணியினை மிகச்சிறப்பாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். vgk
சிறப்பாக முடித்தீர்கள்...
வாழ்த்துக்கள் சார் !
த.ம. 3)
ஒருவாரம் உங்கள் நட்சத்திர பதிவுகள் சிறப்பாக அமைந்தது, பொறுப்புணர்ந்து நல்ல ஆக்கங்களை அளித்துள்ளீர்கள், தொடர்ந்து பின்னூட்டம் அளிக்க வாய்ப்பில்லாத நிலையில் மொபைல் வழியாகவே அனைத்துப் பதிவுகளையும் அவ்வப்போது படித்துவந்தேன்.
தொடர்ந்து சிறப்பாக எழுதிவர நல்வாழ்த்துகள்,
தமிழ்மணத்தில் மட்டும் நட்சத்திரமாக இல்லாமல் வலையுலகத்திலும் தொடர்ந்து நட்சத்திரமாக உங்களின் எண்ணங்களும் எழுத்துக்களும் இருக்க எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வாழ்க வளமுடன்
என்ன... அதற்குள் ஒரு வாரம் ஓடிவிட்டதா...?
ஆச்சர்யமாக இருக்கிறது ஐயா.
உங்களின் நட்சத்திர பதிவுகள் அனைத்தும்
எங்களின் மனம் தொட்டவை!
அதிலும் கடைசியாக நீங்கள் முடித்தவிதம்...அருமைங்க ரமணி ஐயா.
நேரமின்மை காரணமாக தங்களுடைய அனைத்துப் பதிவுகளையும் படித்துக் கருத்திட இயலவில்லை. மன்னிக்க வேண்டும் ரமணி சார். கிடைக்கும் பொழுதுகளில் படித்தேன். நட்சத்திரப் பதிவராயிருந்தும் ஒருநாளில் பல பதிவுகள் இட்டுக்கொண்டு, பிறருடைய தளங்களுக்கும் வருகை புரிந்து கருத்திட்ட உங்களுடைய திறன் கண்டு வியக்கிறேன். நேரப்பங்கீடு பற்றி நான் நிறைய அறியவேண்டியுள்ளது. இனிய வாழ்க்கையின் சூட்சுமங்களோடு, பதிவர்களின் பொறுப்பையும் சுட்டிக்காட்டிய உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பாராட்டுக்குரியவை. தங்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும் ரமணி சார்.
அருமையான பல்சுவை வாரம்! நாங்க உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
வாழ்த்துகள் குரு.....மென்மேலும் உங்கள் பாதைகள் விரிவடைய வாழ்த்துகிறேன்...!
உங்கள் பதிவுகளை மிகவும் ரசித்துப் படித்தேன்.
ayya!
azhakaana kavithai !
layiththu vitten!
விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
ந ம்
வெற்றிக்கு தடையேதும்
வருவ தில்லை எப்போதும்.
வாழ்த்துக்கள் ஐயா இனியவை கூறிச்
செல்லும் தங்கள் பகிர்வுக்கு .
வாழ்த்துக்கள்! நன்றி! மீண்டும் தமிழ் மணம் நட்சத்திரமாய் வருக! வலைப்பதிவு உலகில் சந்திப்போம்!
திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் நிச்சயம் தேடி வரும். உங்கள் பணியை சிறப்பாகவே செய்துள்ளீர்கள்.
சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
நமக்கு
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.
ரொம்ப சரியான வார்த்தைகளில் சொல்லி இருக்கீங்க.
...விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
ந ம்
வெற்றிக்கு தடையேதும்
வருவ தில்லை எப்போதும்....
சரியாச் சொல்லியிருக்கறீங்க அண்ணே...
செய்த பணி சிறந்தமைக்கு வாழ்த்துக்கள் ரமணி சார்
என்றுமே தாங்கள் எங்களுக்கு நட்சத்திர பதிவர் தான் ஐயா.
மிகச் சிறப்பான நட்சத்திரமாக ஜொலித்தீர்கள். அனுபவங்கள் அனைத்தும் அருமை. உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
''...கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை ....''
மிக நன்று சொன்னீர்....வாழ்க!..வளர்க!
வேதா. இலங்காதிலகம்.
வாழ்த்துக்கள் அண்ணே...
வாழ்த்துக்கள்
மன்னிக்கவும் ரமணி.ஒரு வாரமாக வலைப்பதிவு பக்கமே வரவில்லை.உங்கள் நட்சத்திரப் பதிவுகளை மிஸ் பண்ணிட்டேன்.சிறப்பான வாரம் என்பது முடிவில் தெரிகிறது.வாழ்த்துகள்
த.ம.9
//விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
ந ம்
வெற்றிக்கு தடையேதும்
வருவ தில்லை எப்போதும்.//
சரியாகச் சொன்னீர்கள் ஜி! மிகச் சிறப்பான வாரமாக இருந்தது... வாழ்த்துகள்.
த.ம. 10
பலவிடயத்தையும் சேர்த்து தந்தீர்கள் தொடர்ந்து பின்னூட்டம் போடமுடியாவிட்டாளும் தங்களின் முத்தான கீரீடங்களில் நாட்டமோ சரிவுகளில் பதற்றமோ அருமை கருத்துப்பகிர்வு!
சிறப்பாக ஒரு வாரத்தை முடித்தீர்கள். தொடர்ந்து கொடுத்துள்ள அழகிய கவிதை உற்சாகம் அளிக்கிறது.
உங்க வெற்றிக்குக் காரணத்தை அழகா சொல்லி இருக்கீங்க.ஒருவாரம் போனதே தெரியல.
வாழ்த்துக்கள் அன்பரே தொடருங்கள் உங்கள் அழகியலை !
Post a Comment