Sunday, February 16, 2014

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வு  பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அற்புதக்  குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாலியே

தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பான மே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை மிகச் சரியாய் விளக்கவோ

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல் ?
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்

25 comments:

கவியாழி கண்ணதாசன் said...

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல் ?எனக்கும் நாதுயில்லை

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான அருமையான ரசிக்க வைக்கும் வரிகள்... மேலும் மேலும் இன்னும் உங்களுக்கு அருளை வாரி வழங்கட்டும் ஐயா... வாழ்த்துக்கள்...

ரூபன் said...

வணக்கம்
ஐயா.
உயிரோட்டம் உள்ள வரிகள் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.

த.ம 3வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அம்பாளடியாள் வலைத்தளம் said...

மிகச் சரியான கண்ணோட்டம் .ஆழ ஊடுருவி அழகழகாய் நற் கருத்துக்களை
உணர்த்த யாரால் முடியும் கவிதைப் பெண்ணைத் தவிர ? !!வாழ்த்துக்கள் ஐயா
என்றென்றும் அவளின் ஆசி தங்களுக்கும் எங்களுக்குமே கிட்டட்டும் .

Anonymous said...

''..கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல் ?...'''
எனக்கும் இது தான்.
மிக நன்று.
இனிய வாழ்த்து.
வேதா.இலங்காதிலகம்.

Thulasidharan V Thillaiakathu said...

அற்புதமான வரிகள்!

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல் ?
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்

இப்படி அருமையாக எழுதினால் எப்படி கவிதைப் பெண் அருளை வாரி வழங்காமல் இருப்பாள்?!!! தங்களை இன்னும் வாழ்த்தி அருளுவாள்!!

த.ம.

கே. பி. ஜனா... said...

கவிதைப் பெண்ணுக்கு இதைவிட அலங்காரமான மாலை இருக்க முடியாது! பிரமாதம்!

Anonymous said...

கவிதைப் பெண் அழகாக மிளிர்கிறாள்
தங்கள் ஒப்பனைகளில் [ ஒப்புமைகளில் ]......

s suresh said...

மனதில் படிவதை கருத்தில் வடிக்கும் அற்புத சாதனம் கவிதை! அழகாக உணர்த்திய கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

Mythily kasthuri rengan said...

நல்ல வரம் தான் கேட்டிருக்கிறீகள்
கவிதை பெண்ணிடம் !

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

குட்டன் said...

வாரி வழங்கித்தானே இருக்கிறாள்!

குட்டன் said...

த.ம.8

ADHI VENKAT said...

அருமையான வரிகள்.

Iniya said...

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச் தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை மிகச் சரியாய் விளக்கவோ

வஞ்சனையின்றி வாரித் தானே வழங்குகிறாள்.
அத்தனையும் உண்மை உண்மை அருமையான வரிகள்
நன்றி தொடர வாழ்த்துக்கள்....!
புதிய முயற்சி ஒன்று என் வலைதளத்தில் முடிந்தால் பாருங்கள்

King Raj said...

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே.....
நாமெல்லாம் பயணிகள்...கவிதை வாகனத்தில். நல்லது ஐயா.

rajalakshmi paramasivam said...

அருமையான கவிதை வரிகள். நம் சுமைகளை ஏற்றி செல்லும் வாகனம் தான் கவிதை என்பதை அழகாய் கவிதையாய் உணர்த்தி விட்டீர்கள். நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல் ?
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்


கவிதைப்பெண்ணை வார்த்தைகளால் அலங்கரித்து உபசரித்த அழகான
ஆக்கம் ..பாராட்டுக்கள்..!

ஸாதிகா said...

அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்.

புலவர் இராமாநுசம் said...

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அற்புதக் குழந்தையே

சிறப்பான வரிகள்! அருமை!

சந்திரகௌரி said...
This comment has been removed by the author.
சந்திரகௌரி said...

கவிதைப் பெண்ணோடு வாழ்ந்த அநுபவம் தித்திக்கின்றது.

முட்டா நைனா said...

//குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு பான மே//

அருமையான சொல்லாடல் ஐயா...!

Jeevalingam Kasirajalingam said...


"கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அற்புதக் குழந்தையே" என்ற
ஒப்பீட்டை விரும்புகிறேன்!

தங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

கவிதைப் பெண்ணின் அருள் உங்களுக்கு நிறையவே உண்டு.... இன்னும் அளித்து எங்களையும் கவிதை மழையில் திளைக்கச் செய்யட்டும்.......

த.ம. +1

Post a Comment