Saturday, July 26, 2014

துரோகம் ( 10 )

எதையும் குழப்பமின்றித் தெளிவாக அவசரப்படாது
சுவாரஸ்யமாகச் சொல்லுகிற நெளிவு சுழிவு
கொஞ்சமேனும் எனக்கு இருக்கிறது எனில்
அதற்கு முழுமையான காரணம் சுப்புப்பாட்டியும்
எனது தாயாரும்தான்.

நான் அடுத்து என்ன நடந்தது என அறிய
பதட்டப்பட்டபோது அம்மா இப்படிச் சொன்னாள்
"நூற்கண்டின் நுனி கிடைக்க தாமதமாகிறதுன்னு
அவசரமாக நூலை அறுத்தெடுப்பது நிச்சயம்
மேலும் சிக்கலைத்தாண்டா உருவாக்கும்.
கொஞ்சம் பொறுமையா நுனியை எடுத்துட்டா
பின் சிக்கல் வர வாய்ப்பேயில்லை.

முதலில் சுப்புப்பாட்டி மூலம் நான் மீனா மாமியை
அறிமுகம் செய்துக்கிறேன்.உனக்கும்
ராகவனை அறிமுகம் செய்து வைக்கிறேன்.
இன்றைய தேதிவரை அவசரப்படாது சுப்புமாமி
மூலமே நடந்ததைத் தெரிஞ்சுக்குவோம்.
பின் நாமா இவா மூலம் மேற்கொண்டு
விஷயங்களைத்தெரிஞ்சுக்கப் பார்ப்போம்
அதுதான் சரியா வரும்"என்றாள்

எனக்கும் அது சரியெனத்தான் பட்டது

அடுத்து பத்து நாளில் வந்த ஒரு ஞாயிறு அன்று
சுப்புப் பாட்டியையும் என்னையும் அழைத்துக் கொண்டு
மீனாப்பாட்டி வீட்டிற்கு என அம்மா அழைத்துப் போனார்

ஏற்கெனவே ஒரு வாரத்தில் சுப்புப்பாட்டி
மீனாப்பாட்டியை நான்கு ஐந்து முறை
சந்தித்திருப்பார் போல இருந்தது
ஆகையால் அந்தச் சந்திப்பு அவ்வளவு
.உணர்வு பூர்வமாக இல்லை.எங்கள் அம்மா கையோடு
கொண்டு வந்திருந்த பழக்கூடையை மீனாப்பாட்டியிடம்
கொடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
நானும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றேன்..

அப்போதுதான் குளித்து முடித்து வந்த ராகவனை
எங்களுக்குச் சுப்புப்பாட்டி அறிமுகம்
செய்துவைத்தாள்."அடிக்கடி வாங்கோ "என்கிற
சம்பிரதாயமானஅழைப்புடனும்"அவசியம்
வருகிறோம்" என்கிற சம்பிரதாயமான பதிலுடன்
அந்த முதல் சந்திப்பு எவ்வித சுவாரஸ்யம்
 ஏதுமின்றி முடிந்தது

அடுத்த வாரத்தில் காலேஜ் எதற்கோ விடுமுறை
அப்பா ஆபீஸ் போயிருந்தார்வீட்டில் அப்பள ஸ்டாக்
இருந்தும்அம்மா உளுந்து அப்பளம் வைக்க
ஏனோ ஏற்பாடு செய்திருந்தார்.

"எதற்கம்மா இவ்வளவு இருக்கும் போது திரும்பவும்.."
என்றேன்

"எல்லாம் ஒரு டெக்னிக்தான் இல்லையானா
சுப்புப்பாட்டியைஇரண்டு மணி நேரம் ஒரு இடத்தில
உட்கார வைக்க முடியாது.
இனியும் அரைக்கதையைக் கேட்டு வைச்சும்
அவஸ்தைப்படமுடியாது
அப்பளம் வைக்க ஆர்ம்பிச்சா போதும் அது முடிய
எப்படியும் இரண்டு மூணு மணி நேரமாச்சும் ஆகும்
சுப்புப் பாட்டியின் கைப் பக்குவம் சூப்பரா இருக்கும்
கதைக்கும் கதையாச்சு.அப்பளத்துக்கும்
அப்பளமாச்சு.என்னாலயும் முன்னப்போல இரும்பு
உலக்கையைத் தூக்கி இடிக்க முடியலை.உனக்கும்
ஒரு வேளை கொடுத்தமாதிரி ஆச்சு.
எப்படி என் ஐடியா"என்றாள்

அம்மா ஐடியா அற்புதமா ஒர்க் அவுட் ஆச்சு

மாவு இடித்து முடித்து பாம்பு போல்
ஒரே சமமாய்த் திரித்துமிக நேர்த்தியாய்
ஒரே அளவாய்ஒவ்வொன்றாய் சுப்புப்பாட்டி
கத்தியால் நறுக்கிப்போட்ட விதம்
அத்தனை அற்புதமாய் இருந்தது

அப்பளப்பலகையை எடுத்துப் போட்டு நான்கு ஐந்து
அப்பளம் இட்டு முடித்ததும் என் அம்மா மிகச் சரியாக
சுப்புப்பாட்டியைப் பார்த்து "என்ன மாமி சும்மா கிடந்த
தேரை இழுத்து தேரில் விட்ட மாதிரி சுவாரஸ்யமா
மீனாமாமிக் கதையைச் சொல்லி பாதியிலேயே
விட்டுவிட்டேளே அன்னைக்கு இருந்து   எனக்கு
அதே நினைப்புத்தான்.அப்புறம்என்னதான் ஆச்சு "
என்றாள்

"கதை கேட்கிறவாளுக்கு மட்டும் இல்லேடி.
சொல்றவாளுக்கும்பாதியில நிறுத்திப் போறது
அவஸ்தையாய்தாண்டி இருக்கும்
சரி சரி எதுல நிறுத்தினேன்" என்றாள்

நாங்கள் அந்த நகையைப் பார்த்து மூவரும்
 திகைச்சுநின்னதைச் சொல்லி "அடுத்து "என்றோம்
பாட்டி தொடர்ந்தாள்

"இவா மூணு பேரும் தொடர்ந்து தெகச்சிப்போய்
 நிக்கபிள்ளைவாள்தான் முதலில் நிதானத்திற்கு
வந்திருக்கார் ஏன்னா அவர் அரசியலிலும் இருந்தார்
 இல்லையோஅவாளுகெல்லாம் குயுக்தியா யோசிக்கச்
சொல்லியா தரணும்
சட்டென அவர் மேல் சால்வையை எடுத்து விரிச்சு
"அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிப்போம்
முதலில அந்த நகையையெல்லாம் எடுத்து இந்தத்
துண்டில் எடுத்து வைங்கோன்னு " எடுத்து
வைக்கச் சொல்லி இருக்கார்
,
திக் பிரமையிலும் ஆசையிலும் சிக்கித்
திணறிக் கொண்டிருந்த மூணு பேரும்
மறு பேச்சில்லாமல் அப்படியே இரண்டு
கையிலேயெலும் வாரியெடுத்து
அந்தச் சால்வையில் குவிச்சிருக்கா.
அவர் அதையெல்லாம் அப்படியே ஒரு
சோத்துப் பொட்டலம் போலச் சுருட்டி மீனா வோட
அப்பா கையில் கொடுத்து "இன்னும் கொஞ்ச நேரத்தில்
விடிய ஆரம்பிச்சுடும்,
இதை என்ன செய்யலாம்னு நாளைக்கு யோசிப்போம்
முதலில் இதை அப்படியே கொண்டு போய்
மடைப்பள்ளி விறகுக்கு உள்ளே மறச்சு வையுங்கோ.
மீனாம்மா நீயும் அப்பாக்கு  உதவியா
போடாக்கண்ணுன்னு சொல்லிஅனுப்பிச்சுட்டு.
ஊமையன வச்சு அவசரம் அவசரமா குழிய மூட
ஏற்பாடு பண்ணி இருக்கார்

பெட்டி இருந்த இடம் மண் போறாம கொஞ்சம்
பள்ளமாகவே இருக்க அப்படி இருந்தா சந்தேகம்
யாருக்கும் வரும்னு சட்டுனு ஊமையன் விட்டு
வீட்டில் இருந்து ஆறு ஏழு செண்டிரிங் பலகையைக்
கொண்டு வரச் சொல்லி மேலே அடுக்கி வச்சுப்புட்டு
அவசரம் அவசரமாய் வீட்டுக்குப் போய் ஒரு பெரிய
திண்டுக்கல் பூட்டையும் கொண்டு வந்து
மடைப்பள்ளியையும் பூட்டச் சொல்லி சாவியை
மீனாவோட அப்பாக்கிட்டயே கொடுத்திட்டு
ஊமையனையும் கூட்டிக்கிட்டு
"நீங்களும் வீட்டுக்குப் போயிட்டு வாங்கோன்னு
மீனாவோட அப்பாக்கிட்ட சொல்லிட்டு
பிள்ளைவாள் வீட்டுக்கு கிளம்பியிருக்கா ருடி

பொழுது மெல்ல வெளுக்கத் துவங்கிருக்குடி

மீனாவுக்கும் அவளோட அப்பாவுக்கும் உடல்
நடுங்க ஆரம்பிச்சுடுச்சிருக்கு..
ஏன் அவர் சொன்னாருன்னுபொட்டலம் கட்டினோம்
ஏன் நம்ம பொறுப்பிலே"அவளோட "சொத்தை
இப்படி திருட்டுத்தனமாஒளிச்சு வச்சிருக்கோம்
.நம்மளை அம்பாள்தான் சோதிக்கிறாளா
இல்லை பிள்ளைவாள்தான்சோதிக்கிறாரான்னு
குழம்பியபடி குளிச்சிட்டு சட்டுனு
கோவில் அதிகாலைப் பூசைக்கு வருவோன்னு
வாசலுக்கு வர மிகச் சரியா எதிரே சுப்பையர்
வந்திருக்காண்டி

அவரைப் பார்த்ததும் மீனாவோட அப்பாவுக்கு
கூடுதலா உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருக்குடி
ஏன்னா ஈரைப்பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிறதுல
இந்த சுந்தரம் ஐயர் வெகு கிள்ளாடிடி

இதுவரை தெருவில சுந்தரமையர் சம்பந்தம் இல்லாம
 நல்லதோ கெட்டதோ நடந்ததா சரித்திரம் இல்லையடி

அவர் சம்பந்தப்படாம ஒதுங்கிப் போனாலும்
விதியோ எதுவோ அவரைத் தானா கொண்டு வந்து
சம்பத்தப்படுத்திடும்டி

இப்பவும் அப்படித்தான் சம்பத்தப்படுத்துதுன்னு
அப்பவே புரிய ஆரம்பிக்க,இன்னும் பயம் கூட
அவரைக் கண்டும் காணாம மீனாவோட அப்பா
தெருவில் இறங்கி நடக்கத் துவங்கவும்

விதியோ  எதுவோ
அதுவரை வாக்கிங் போயிட்டு கோவில் வரலாம்னு
நினைச்சு வீட்டைவிட்டுக் கிளம்பிய சுந்தடரமையரின்
மனத்தை  மாற்றி   கோவிலுக்குப் போய்விட்டு பின்
வாக்கிங் போகலாம்னு முடிவெடுக்க வைத்து 
கோவிலுக்குள் நுழையவைக்கவும்
மிகச் சரியாக இருந்திருக்குடி

(தொடரும் )

22 comments:

ஸ்ரீராம். said...

விதி விளையாடுகிறது போலும்! :)))

இராஜராஜேஸ்வரி said...

விதியும் சதியும் கைகோர்த்து
நடத்திச்செல்லும் கதை சுவாரஸ்யம்..

Anonymous said...

விதியோ எதுவோ.....
Vetha.Elanagthilakam.

Unknown said...

காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த மாதிரி சுந்தரமய்யர் கோவிலுக்குள் கால் வைத்ததுவுடன் நடந்ததை அறிய ஆவலாய் உள்ளது !
த ம 3

vimalanperali said...

கைகொள்ளும் நிதானம் எப்பொழுதும் துனை நிற்பதாக/

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
கோயில் அருகில் நாங்களும் காத்திருக்கிறோம்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 4

கோமதி அரசு said...

எழுதி செல்லும் விதியின் விளையாட்டு.
அடுத்து என்ன? என்று அறிய ஆவல்.

RajalakshmiParamasivam said...

சுவாரஸ்யத்தைக் கூட்டிக் கொண்டே செல்கிறது கதை.....

அருணா செல்வம் said...

தொடருகிறேன் இரமணி ஐயா.

Thulasidharan V Thillaiakathu said...

"நூற்கண்டின் நுனி கிடைக்க தாமதமாகிறதுன்னு
அவசரமாக நூலை அறுத்தெடுப்பது நிச்சயம்
மேலும் சிக்கலைத்தாண்டா உருவாக்கும்.
கொஞ்சம் பொறுமையா நுனியை எடுத்துட்டா
பின் சிக்கல் வர வாய்ப்பேயில்லை.// அருமையான வார்த்தைகள்!

சுவாரஸ்யமாக இருக்கின்றது. தொடர்கின்றோம்!

திண்டுக்கல் தனபாலன் said...

/// சொல்றவாளுக்கும்பாதியில நிறுத்திப் போறது
அவஸ்தையாய் ///

ஆவலுடன்...

Yarlpavanan said...

"ஈரைப்பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிறதுல
இந்த சுந்தரம் ஐயர் வெகு கிள்ளாடிடி" என்றவாறு
கதையும் சுவைபட நகருகிறது.
தொடருங்கள் ஐயா!

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யம் அதிகரிக்கிறது! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தப்பதிவினில் சற்றே கூடுதலான வரிகள்.

அருமையாக கதையை நகர்த்திச் செல்கிறீர்கள்.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், அவசப்படாமல் மெதுவாகக் கொஞ்சம் கொஞ்சமாகவே தொடருங்கள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

அப்பளாக்கச்சேரி பற்றி மிகவும் சுவாரஸ்யமாகவும் இயற்கையாகவும் எழுதியுள்ளீர்கள். மிகவும் ரஸித்தேன்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"அடிக்கடி வாங்கோ "என்கிற
சம்பிரதாயமானஅழைப்புடனும்"அவசியம்
வருகிறோம்" என்கிற சம்பிரதாயமான பதிலுடன்
அந்த முதல் சந்திப்பு எவ்வித சுவாரஸ்யம்
ஏதுமின்றி முடிந்தது//

தங்கள் சந்திப்பில் தான் சுவாரஸ்யம் இல்லையே தவிர இதைத்தாங்கள் எடுத்து இங்கு எழுதியுள்ளதில் எனக்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது. மகிழ்ந்தேன்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//
இதுவரை தெருவில சுந்தரமையர் சம்பந்தம் இல்லாம
நல்லதோ கெட்டதோ நடந்ததா சரித்திரம் இல்லையடி

அவர் சம்பந்தப்படாம ஒதுங்கிப் போனாலும்
விதியோ எதுவோ அவரைத் தானா கொண்டு வந்து
சம்பத்தப்படுத்திடும்டி//

அதானே பார்த்தேன். தில்லானா மோகனாம்பாள் சவடால் வைத்தி போல ஒருவர் இந்தக்கதைக்கு மிகவும் அவசியமாச்சே என்று நினைத்தேன் ! வந்துவிட்டார்.

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இனி இன்னும் இந்தக்கதை சுவாரஸ்யமாகவே செல்லும். ;)

தி.தமிழ் இளங்கோ said...

கொஞ்சம் வேலையாக வெளியிடங்களுக்கு சென்றால் வலைப்பதிவில் தொடர் பதிவுகள் படிக்க முடியாமலேயே போய்விடுகின்றன. அடுத்து என்ன என்ற ஆவலில் படிக்கத் தொடங்கி விட்டேன்.
த.ம.9

வெங்கட் நாகராஜ் said...

அப்பளக் கச்சேரி - அத்தைப் பாட்டி செய்வார்கள் வீட்டில்.... நினைவுக்கு வந்தது....

அடுத்தது என்ன என்று ஆர்வத்தோடு தொடர்கிறேன்.

G.M Balasubramaniam said...

சுப்பையர்... சுந்தரம் ஐயர்....?

மாதேவி said...

கதைக்கும் கதையாச்சு.அப்பளத்துக்கும்
அப்பளமாச்சு. :))

நீங்கள் சொல்லும்கதையில் நாங்களும் மயங்கி நிற்கின்றோம்.

Post a Comment