Wednesday, July 2, 2014

துரோகம் ?

செல்போன் மணியடிக்க சட்டென விழித்தேன்
இரவு மணி பதினொன்றாகி இருந்தது.

முன்பு கிராமத்திற்கு தந்தி அலுவலர் வந்தால்
ஏற்படும் கலக்கம் இப்போது அகால நேரத்தில்
செல் போன் மணி அடித்தால் ஏற்படத்தான் செய்கிறது

கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்க்க
அழைப்பு கிருஷ்ணனிடம் எனத் தெரிந்தது.
கிருஷ்ணனும் தேவையில்லாமல் போன்
பேசுகிறவன் இல்லை,என்வே நிச்சயம் ஏதோ
ஒரு அவசர காரியம் எனப் புரிந்தது

" என்ன நல்ல தூக்கத்தில் எழுப்பிவிட்டேனா ?"
போனை ஆன் செய்ய கிருஷ்ணனே பேசினான்

"இல்லையில்லை  சொல்லு சொல்லு
இப்பத்தான் அசந்தேன்எதுவும் அவசரமா.இல்லையேல்
நீயே பேசமாட்டாயே "என்றேன் சம்பிரதாயமாக

"ஒன்றுமில்லை இன்று காலையில் ஆபீஸ்
வேலையாக ராஜபாளையம் வரை
போக வேண்டி இருந்தது.அங்கு  நம் உறவினர்
சொல்லித்தான் ராகவன் உடம்பு சௌகரியம்
இல்லாமல் இருக்கிறார் எனத் தெரிந்தது
அவரைப் பார்த்தும் ரொம்ப நாளாகிவிட்டதால்
இந்தச் சாக்கில்பார்த்துத் திரும்பலாமே எனப் போனேன்
போய்ப் பார்த்ததும் ரொம்பச் சங்கடமாகிவிட்டது"
எனச் சொல்லிவிட்டு சிறிது அமைதியாய் இருந்தான்

பின் அவனே தொடர்ந்தார் "உடம்பு சௌகரியம்
இல்லையெனச் சொன்னவர்,இவ்வளவு
சீரியஸாக இருக்கும்எனச் சொல்லாததால்
அவரைப் பார்த்ததும்அதிர்ந்து போனேன்.
இரண்டு நாளாய் சிறுநீர் சரியாகப் போகாததால்
சிரிஞ்ச் வைத்துத்தான்எடுக்கிறார்களாம்.
வயிறும் கொஞ்சம் வீங்கி இருந்தது
ரொம்பப் பாவமாய் இருந்ததுடா.என்னைப்பார்த்ததும்
ரொம்பச் சந்தோஸப்பட்டார்,அவரே  அவரைப் பற்றி
ஒருமுடிவுக்கு வந்திருப்பது அவர் பேச்சில் தெளிவாய்த்
தெரிந்தது.அடிக்கடி உன்னைத்தான் விசாரித்தார்
முடிந்தால் பார்க்கவேண்டும் எனச் சொல் என்றார்
அரை மணி நேரத்திற்குள் உன்னை விசாரித்தது
ஏழு எட்டுத் தடவைக்கு மேல் இருக்கும்
தப்பா நினைக்காதே.அவர் பேசியது மரணப்பினாத்தல்
போலத்தான் எனக்குப் படுகிறது " என சொல்லி
நிறுத்தினான்

"என்னடா அவ்வளவு சீரியஸாகவா இருக்கிறது
மூன்று மாதத்திற்கு முன்னால் கூட அவருடைய
தங்கை பையனை ஒரு கல்யாணத்தில் பார்த்து
விசாரித்தேனே.நன்றாக இருப்பதாகத்தானே
சொன்னான்"என்றேன்

"அவன் கதை பெரிய கதை.அவன் அவரை
 விட்டுப்போய் இரண்டு வருஷத்துக்கு
 மேலாகி விட்டதாம்
அதைப்பத்தியெல்லாம் நேரடியாகப்
 பேசிக்கொள்ளலாம் நீ நாளைக் காலையில்
முதல் பஸ்ஸைப் பிடித்து அவரைப் போய்ப்
பார்க்கிற வேலையைப் பார்
அவரைக் குறைமனத்துடன் சாகவிட்டால்
உனக்குத்தான் பாவம் " என்றான்

நிச்சயம் பார்க்கவேண்டும்தான்.போனால் திரும்ப
இரவாகிவிடும்.நாளை இளையவள்  பள்ளியில்
பேரண்ட்ஸ் மீட். இந்த முறை அவசியம் அப்பாவையும்
கூட்டி வரச் சொல்லி இருக்கிறார்கள் என என் மனைவி
ஏற்கெனவே முன் தகவல் கொடுத்திருந்தாள்

"சரிடா நாளை போகப் பார்க்கிறேன்.இல்லையேல்
நாளை மறுநாள் அவசியம் போய்பார்த்துவிட்டு
வந்து விடுகிறேன் "என்றேன்

நான் இதைச் சொல்லி முடிப்பதற்குள் சட்டென
இடைமறித்த கிருஷ்ணா "வேண்டாம்டா
தாமதம் பண்ணாமல் நாளைக் காலையிலேயே போ
மறுநாள் போய் அவரைப் பார்க்கமுடியாது போனால்
பின்னால் நீ அதிகம் வருத்தப்படவேண்டி இருக்கும்
அறிந்தோ அறியாமலோ அவருக்கு நீ ஒரு பெரிய
துரோகம் செய்த்து விட்டாய்..இந்தக் குறையும்
சேர்ந்தால்உன்னால் நிம்மதியாய் இருக்க முடியாது.
அவ்வளவுதான் சொல்வேன்" எனச் சொல்லிவிட்டு
சட்டென போனை கட் செய்துவிட்டான்

எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது

ஆறு மாதங்களுக்கு முன்பு
ராகவன் குறித்த ஏதோ ஒரு பேச்சு வருகையில்
"நம்பினவனுக்கு கெடுதி செய்வது மட்டும்
துரோகமில்லை.நம்பினவனுக்கு
செய்ய வேண்டியதைச்செய்யாமல் விடுவதும்
நிச்சயம் துரோகம்தான் "எனச்
சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும்
நினைவுக்கு வர மனம் மிகச் சோர்ந்து சோபாவில்
மெல்லச் சாய்ந்தேன்.

அந்தச் சொல்லாமல் விட்டத் துரோகம்
என்னுள் தீயாய்ப் பரவி என்னை எரிக்கத் துவங்கியது

(தொடரும் )

28 comments:

ஸ்ரீராம். said...

துரோகமா... அது என்ன?

கரந்தை ஜெயக்குமார் said...

சிறுகதையாகவே எடுத்துக் கொண்டேன்.
//நம்பினவனுக்கு கெடுதி செய்வது மட்டும்
துரோகமில்லை.நம்பினவனுக்கு
செய்ய வேண்டியதைச்செய்யாமல் விடுவதும்
நிச்சயம் துரோகம்தான் "//
எளிமையான வரிகளில் எவ்வளவு வலிமையான வார்த்தைகள் ஐயா
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

தம 3

இராஜராஜேஸ்வரி said...

கனக்கவைக்கும் சம்பவங்கள்...

Bagawanjee KA said...

அவனுக்கு என்ன நம்பிக்கைக் கொடுத்து செய்யாமல் விட்டீர்கள் ?தெரிந்து கொள்ளும் (மரண )அவஸ்தையில் நானும் உள்ளேன் ,உடனே தொடருங்கள் !
த ம 4

திண்டுக்கல் தனபாலன் said...

/// நம்பினவனுக்கு செய்ய வேண்டியதைச்செய்யாமல் விடுவதும் நிச்சயம் துரோகம்தான் /// அப்படி என்ன துரோகம்...?

காத்திருக்கிறேன்...

ஜெ.பாண்டியன் said...

அடுத்த பதிவிற்காக காத்திருப்பு..

கோமதி அரசு said...

நம்பினவனுக்கு கெடுதி செய்வது மட்டும்
துரோகமில்லை.நம்பினவனுக்கு
செய்ய வேண்டியதைச்செய்யாமல் விடுவதும்
நிச்சயம் துரோகம்தான்//

நன்றாக சொன்னீர்கள்?
தொடர்கிறேன்.

Jeevalingam Kasirajalingam said...

அடுத்த பதிவைப் படிக்க வேண்டிய தேவை என்னுள் அதிகரிக்க இந்தப் பதிவின் முடிவு எப்படி என்பதே தூண்டுகிறது.
தொடருங்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

"நம்பினவனுக்கு கெடுதி செய்வது மட்டும்
துரோகமில்லை.நம்பினவனுக்கு
செய்ய வேண்டியதைச்செய்யாமல் விடுவதும்
நிச்சயம் துரோகம்தான் "//
அது என்ன துரோகம் என்பதை அறிய அடுத்த பதிவை எதிர்நோக்கி உள்ளோம்!

தொடர்கின்றோம்!

rajalakshmi paramasivam said...

நீங்கள் சொல்வது போல் அகால நேரத்தில் போன் மணியடித்தால் மனதில் கிளி அடிக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் சரியான கட்டத்தில் தொடரும் போட்டு விட்டீர்களே

PARITHI MUTHURASAN said...

பொதுவாக தூங்கும் போது நான் செல் போனை ஆப் செய்துவிடுவேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அந்தச் சொல்லாமல் விட்டத் துரோகம்
என்னுள் தீயாய்ப் பரவி என்னை எரிக்கத் துவங்கியது//

அடடா, அதை உடனே அறியாவிட்டால் என் மண்டையே வெடித்துவிடும் போல உள்ளதே !

இயல்பான சம்பவங்களை சுவாரஸ்யமாக ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள்.

ADHI VENKAT said...

சரியான கட்டத்தில் தொடரும் போட்டுட்டீங்களே சார்.....என்ன துரோகமோ? தொடர்கிறேன்.

மூடுபனி தொடரை முடித்தீர்களா? 6 பகுதி படித்தேன் என்று நினைக்கிறேன்...

த.ம. 8

ரூபன் said...

வணக்கம்
ஐயா
மிகவும் சுறுசுறுப்பாக செல்கிறது நல்ல கருத்தை வைத்து பின்னியுள்ளீர்கள் அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன் நன்றி ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

என்ன எழுதுவது எனப் புரியவில்லை.
வாசித்தேன். என்ன நடந்தது என்று ஆவலுடன்..
வேதா. இலங்காதிலகம்.

‘தளிர்’ சுரேஷ் said...

ஆரம்பம் அசத்தல்! தொடர்கிறேன்!

G.M Balasubramaniam said...

தொடர்கிறேன்

சீராளன் said...

தொடரும் பதிவில் ஏதோ உண்மை பொதிந்து இருக்கு போல தொடரட்டும் பார்க்கிறோம் !

வாழ்த்துக்கள்
த ம 9

வெங்கட் நாகராஜ் said...

என்ன துரோகம்..... தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

புலவர் இராமாநுசம் said...

காத்திருக்கிறேன்

Seeni said...

சொல்லுங்கள் அய்யா..

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!
அருமையான பதிவைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். உண்மை சம்பவமா? அல்லது கற்பனையா? என்ற கேள்வி எழுந்தாலும், சுவாரஸ்யமான பதிவாக இருக்கிறது. தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.

தி.தமிழ் இளங்கோ said...

விட்டுப்போன இந்த தொடரை படிக்கத் தொடங்கி இருக்கிறேன்.
த.ம.12

Mythily kasthuri rengan said...

வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி!

ரூபன் said...

வணக்கம்


இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்


அறிமுகம் செய்தவர்-மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன்


பார்வையிடமுகவரி-வலைச்சரம்


அறிமுகம்செய்த திகதி-18.07.2014

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-

Dr B Jambulingam said...

மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படித்துவருகிறேன்.வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

ravi lingam said...

Sir,sattam puthakathil ullathupol ullathu. Indian pinal code prakaram sattapadi cheiyakudatha thai cheithalum, cheiya vendiyathai cheiyamal irunthalum kutram. arumai

Post a Comment