Saturday, July 12, 2014

துரோகம் ( 5 )

அம்மா கொடுத்த உற்சாக டானிக்
சுப்புப்பாட்டியை அதிக உற்சாகப்படுத்தியது
மிகத் தெளிவாகத் தெரிந்தது.இதுவரை தெருவைப்
பார்த்தபடி யாரிடமோ கதை சொல்வது போல்
சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது என் அம்மாவின்
பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டு பேச ஆரம்பித்தார்

"என்னடி மணி எட்டாகப் போகிற மாதிரித் தெரியுதே
உன் ஆம்படையானை இன்னும் காணோமேடி "
என்றாள்

" இல்லை மாமி ஏழு மணி பஸ்ஸை விட்டிருப்பார்
இனி அடுத்த பஸ் பிடித்து வர ஒன்பதுக்கு
மேலாகிவிடும் நீங்க சொல்லுங்கோ மாமி "
என்றாள் என் அம்மா

பாட்டித் தொடர்ந்தாள் "உனக்கு இன்னும் கொஞ்சம்
விவரம் சொல்லி இவள் கதைக்கு வரவேண்டி இருக்கு
அப்பத்தான் உனக்கு மிகச் சரியாக கதைக்குள்
இருக்கும்சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளமுடியும்

பொம்மனாட்டிகளுக்கு எல்லாம் பிறந்த ஊரும்
வேறு வேறயா இருக்கும்.எனக்கு என்னவோ
முறைப்பையனே ஆம்படையானதாலே எனக்கு
கொண்டதும் இந்த ஊருதான்.கொடுத்ததும்
இந்த ஊராகவே ஆகிப் போச்சு.ஆகையாலே
எல்லோரையும் விட எனக்கு இந்த ஊரைப் பத்தி
ரொம்ப நல்லாத் தெரியுமடி

இப்போ பிள்ளைமார் தெரிவிலே இடிஞ்சபடி
ஒரு பெரிய மாடி வீடு இருக்குதே .அதில
கடைசியா இருந்தது பால சுப்ரமணிய பிள்ளை
அவங்க குடும்பந்தான் மூணு நாளு தலைமுறையா
இந்தபால மீனாம்பிகைக் கோவிலுக்கு தர்மகர்த்தா
மீனாவோட குடும்பம்தான் மூணு நாளு தலைமுறையா
கோவிலுக்கு பரம்பரைப் பூசாரி.கோவிலுக்கு
நிலபுலம் ரொம்ப ஜாஸ்திடி.மேற்கே ஊரணியத் தாண்டி
அந்த கல்பாலம்வரை இருக்கிற நெலமெல்லாம்
அப்போகோவில் நிலம்தாண்டி.

கல்யாணசுந்தரேஸ்வரரா சிவன்
அருள் பாலிக்கிறதாலேமுகூர்த்த நாள் வேண்டுதல்
 கட்டளை அதுஇதுன்னு எல்லா நாளும் கோவில்
 எப்போதும் ஜே ஜேன்னு இருக்கும்

கோவில் சிறப்பா இருந்தா பூசாரிக்கும் சிறப்புதானே
மீனாவோட அப்பாவுக்கும் ஊரில் நல்ல மரியாதை
 செல்வாக்குமீனா பிறக்கறதுக்கு முன்னாடி
எப்படியோ தெரியாது

மீனா பிறந்த பின்னாலே அவர் பேரே
மீனாவோ அப்பான்னே ஆகிப்போச்சு.
அவர் பேரு காசின்னு பழைய மனிஷா
கொஞ்சபேருக்குத்தான் தெரியும்.
அதுக்கும் காரணம் இருந்தது

மீனாவுக்கு ஒரு அண்ணன் உண்டுடி.
அவன் இப்போ இல்லை
அவனுக்கு விச்சுன்னு பேரு.அவன் பிறந்து
ஏழுவருஷம்கழிஞ்சுதான் இந்த மீனாப் பிறந்திருக்கா,
."ஒரு பேச்சுக்கு சொல்ற மாதிரி இல்லேடி.நிஜமாகவே
மீனா பிறக்கும் போதே தங்க விக்ரமாதிரித்தாண்டி
அதுவும் பூர நட்சத்திரப் பிறப்பு வேற
கேட்கவா வேணும்னு".எங்க அம்மா இருக்கிறவரை
அடிக்கடிச் சொல்லுவா

படிக்கிற காலத்தில் கூட நாங்க பத்துபேர்
எப்படித்தான்அல்ங்காரம் பண்ணிக்கிட்டு
மினுமினுக்கப்பார்த்தாலும்அவ கால் தூசி பெறமாட்டோம்
.வெள்ளிக்கிழமை அதுவுமாஅவ பட்டுப் பாவாடை
பட்டுச்சட்டை போட்டுக்கிட்டு பூ வைச்சு
 நெத்திச் சூடி வைச்சு கோவிலுக்கு
வந்தா அந்த பால மீனாம்பிகையே எதிரே வர்றமாதிரி
இருக்கும்டி.நிஜமாவே எங்களுக்கெல்லாம் ரொம்பப்
பொறாமையா இருக்கும்டி.அதுவும் அவங்க அப்பா
 "வாடாபாலமீனாம்பிகைன்னு "செல்லமா
கூப்பிடறப்போஎங்க எல்லாரோட மனசிலேயும்
பொறாமைகொழுந்துவிட்டு எரியும்.
எங்களுக்கே அப்ப்டின்னா ஊர்ல கேட்கவா வேணும்

அவங்க அப்பா எல்லோரும் பொறாமையா
எல்லோரும்பார்க்கிறதை ரொம்ப்த் திமிரா ரசிச்சாலும்
அவங்கஅம்மாதான் ரொம்பப் பயப்படுவா

வெள்ளிக்கிழமைத் தவறினாலும் அவளுக்கு
திருஷ்டி கழிக்கிறதை மட்டும் மறக்கவே மாட்டா
ஆனா அவளுக்கு இருந்த திருஷ்டிக்கு இந்த திருஷ்டிக்
கழிப்பெல்லாம்  தூசிங்கிறது போகப் போகத்தான் புரிஞ்சது

(தொடரும் )

26 comments:

Unknown said...

என்னாச்சு மீனாவுக்கு ?தெரிஞ்சிக்க ஆவலாய் இருக்கே !
த ம 2

Anonymous said...

''...இந்த திருஷ்டிக்
கழிப்பெல்லாம் தூசிங்கிறது போகப் போகத்தான் புரிஞ்சது''...Eppady?
இந்த திருஷ்டிக்
கழிப்பெல்லாம் தூசிங்கிறது போகப் போகத்தான் புரிஞ்சது....'''.....Eppady?....
Vetha.Elangathilakam.
.....

இராய செல்லப்பா said...

அழகான கதையாயிருக்கிறதே! எப்படி முடிப்பீர்கள் என்று பார்க்கவேண்டும்...

இராஜராஜேஸ்வரி said...

கல்லடி பட்டாலும்
கண்ணடி படலாமோ?
அடி பலமோ??!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவங்க அப்பா "வாடாபாலமீனாம்பிகைன்னு "செல்லமா கூப்பிடறப்போஎங்க எல்லாரோட மனசிலேயும் பொறாமைகொழுந்துவிட்டு எரியும்.//

சுவாரஸ்யமாக அழகாகத் தேர்போல மெதுவாக நகர்கிறது இந்த உண்மைச்சம்பவங்களும் சம்பாஷணைகளும். தேர் நிலையை அடைவதற்குள்
100 பதிவுகளாவது தேரிவிடும் என நினைக்கத் தோன்றுகிறது. இருப்பினும் இதுவே நன்று. இது போலவே சிறுசிறு பகுதிகளாகவே தொடரவும். அதில் தான் நல்ல சுவாரஸ்யம் இருக்கும்.vgk

திண்டுக்கல் தனபாலன் said...

"அடுத்து என்னாச்சி...?" என்பதை ஆவலுடன் தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

மீனாட்சிக்கு என்னதான் ஆச்சு என்று அறிய நானும் ஆவலாய்!

”தளிர் சுரேஷ்” said...

அழகாய் வர்ணித்து மீனாட்சியை கண் முன் நிறுத்திவிட்டீர்கள்! அவளுக்கு என்ன ஆச்சு? தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்! நன்றி!

கோமதி அரசு said...

கதையை தொடர மாட்டீர்களா என்று ஆவல் அதிகமாகிறது. சுப்புப்பாட்டி கதை சொல்வது அழகு.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
தம 7

கீதமஞ்சரி said...

சுப்புப்பாட்டியின் கதை சொல்லும் அழகு நேரில் உட்கார்ந்து நாங்களும் கதை கேட்பதைப் போல் வெகு இயல்பு. என்றாவது ஒருநாள் தன் வாய் வார்த்தைகள் யாவும் ஆவணங்களாகிவிடுமென்ற சுப்புப்பாட்டியின் நம்பிக்கை இதோ இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறதே... ஆவலுடன் அடுத்ததறியக் காத்திருக்கிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுப்புப் பாட்டியின் கதை சொல்லும் நேர்த்தி அருமை.
மீனாவின் அருமை பெருமைகளை அறிய ஆவல்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
பாட்டியின் கதை மிக அருமையாக உள்ளது. அடுத்த பகுதியில் என்ன நடக்கப்போகிறது காத்திருக்கேன்.... பகிர்வுக்கு நன்றி ஐயா
த.ம9வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

அவளுக்கு இருந்த திருஷ்டிக்கு இந்த திருஷ்டிக்
கழிப்பெல்லாம் தூசிங்கிறது போகப் போகத்தான் புரிஞ்சது//

அதுதான் என்னன்றோம்!? நாங்களும் புரிஞ்சுக்க ஆவலாக உள்ளோம்! சுப்புப் பாட்டி சொல்லும் கதையின் முடிவைத் தெரிந்து கொள்ள ஆர்வம் கூடுகின்றது!

த.ம.

RajalakshmiParamasivam said...

சுப்பு பாட்டியின் கதை சொல்லும் விதமே அசத்தல் . மீனாவிற்கு என்ன ஆயிற்று?

அருணா செல்வம் said...

தொடர்கிறேன் இரமணி ஐயா.

Yarlpavanan said...

மீனாப் பிறந்திருக்கா என
மீனா பற்றிய கதை
தொடங்கிடுச்சு...
அடுத்தது அறிய ஆவல்

G.M Balasubramaniam said...

ஒரேயடியாக இப்படித் தொடரும் என்று போடுகிறீர்களே. பொறுமை சோதிக்கப் படுகிறது.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

வலையில் நீளமும் முக்கியம் என்பதால்
கூடுதலாகச் சொல்ல முயல்வதில்லை
நீங்கள் தனித்தனியாகப் படிப்பதை விடுத்து
சேர்த்துக் கூடப் படிக்கலாம் என்பது எனது
தாழ்மையான அபிப்பிராயம்
தங்கள் வருகைக்கும் மனந்திறந்த பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ந்து படித்துவருகிறேன், மிகுந்த எதிர்பார்ப்போடு. நன்றி.

மகிழ்நிறை said...

மீனாக்கு என்னாச்சு ??
தம 11

kingraj said...

தொடருங்கள்...... நாங்களும் தொடர்கிறோம்.

தி.தமிழ் இளங்கோ said...

சஸ்பென்ஸ்தான்! ம்.. ம்.. தொடர்கிறேன்!
த.ம.12

மாதேவி said...

அவளுக்கு இருந்த திருஷ்டிக்கு இந்த திருஷ்டிக்
கழிப்பெல்லாம் தூசிங்கிறது போகப் போகத்தான் புரிஞ்சது//
அடடா ! ? தொடர்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

தொடரும் சஸ்பென்ஸ்...... மீனாட்சிக்கு என்ன ஆச்சு என்று பார்க்க அடுத்த பகுதிக்கு இப்போதே செல்கிறேன்....

சிகரம் பாரதி said...

arumai. aarambam mudhal vaasikkiren.

Post a Comment