ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்ய இருப்பவர்
தன்னைத் தயார் செய்வதுபோல சுப்புப்பாட்டியும்
நன்றாக சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு
தொண்டை யை இறுமிச் சரிசெய்து கொண்டு தயாரானாள்
நானும் குப்புற படுத்துக் கொண்டு தலையணையை
மார்பில் முட்டுக் கொடுத்துக் கொண்டு
ஆவலுடன் கேட்கத்தயாரானேன்.
"எனக்குப் பின்னால இந்த ஊருக்கு வாக்குப் பட்டு
வந்தவ நீ.உனக்கு இது தெரிஞ்சும் இருக்கலாம்
தெரியாமலும் இருக்கலாம்.தெரியாட்டி
தெரிஞ்சுக்கிட்டாநல்லது.
மதுரைக்கு ஆதிகாலத்தில இருந்து படைஎடுப்பு ஆபத்து
அது இதுன்னா வடக்கே இருந்துதான். தெக்கே இருந்து
பிரச்சனையே இல்லை.அதனாலதான்
கோட்டை கொத்தளம்எ ல்லாம் வடக்கேயும்
கிழக்கேயும் மேற்கேயும் இருக்கும்
நம்ம தெக்குப் பக்கம் அது கொஞ்சம் கம்மி
ஆனா தெக்குப் பக்கம்தான் முக்கியமான பகுதி
இது இயல்பாகவே பாதுகாப்பான பகுதிங்கிறதனாலே
அந்தப்புரம்,அரண்மணைப் பெண்கள் புழக்கம் எல்லாம்
இந்தப் பக்கம்தான் இருந்ததாகத்தான் சொல்லுவா.
மதுரை மீனாட்சி குழந்தையா இருக்கறச்சே
இங்கேதான் இருந்து வளர்ந்ததாச் சொல்லுவா
அதனாலதான் இங்கே பால மீனாம்பிகைக் கோவிலே
இருக்குத் தெரியுமோ
பின்னால நாயக்கர் காலத்திலே பாளையம் பாளையமா
பிரிச்சப்பக்கூட நம்ம ஊருக்கு
முக்கியத்துவம் கொடுத்து முதல் பாளையமா
இருக்கட்டும்னு நம்ம ஊருக்கு
பிள்ளையார் பாளையம்னு பேரு வைச்சா
அப்புறம் தான் இந்த ஆரப்பாளையம் கோரிப்பாளையம்
மகபூப்பாளையம்,கட்றாப்பாளையம் இன்னும்
என்ன என்னவோ பாளையம் எல்லாம்
இந்த ஊரு சரித்திரம் தெரியாதவா நாகரீகமா ஊரை
மாத்திறதா நினைச்சு இப்போ அவனியாபுரம்னு
பேரை வைச்சுத் தொலைச்சிருக்கா.
அதுக்கு என்ன அர்த்தம்டான்னு நானும் அந்த
கணக்குப்பிள்ளைக் கிட்டே கேட்டேன்
மாமி மரமும் சோலையுமா இருந்ததாலே
அவன்யூ புரம்னும் இருக்கட்டும்னும்வைச்சதாகவும்
அதுவே அவனியாபுரம்னு ஆனதாகவும் சொன்னான்
என்ன எழவோ போ பேரை மாத்தி ஊரு
பெருமையையும் மாத்தி இப்ப இதை ஆயிரம்
ஊரிலே ஒரு ஊருன்னு ஆக்கிப் புட்டா " எனச் சொல்லி
நிறுத்தினார்
நான் எதிர்பார்த்திருந்த கதைக்கு இவையெல்லாம்
சம்பந்தமில்லாமல் இருப்பது போலப் பட்டதால்
எனக்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைய
அதிகம் பசிப்பதுபோலப் பட்டது
"அம்மா சாப்பாடு போடும்மா பசிக்க ஆரம்பிச்சுடுச்சு
அப்பா வருகிற நேரமாகியும் போச்சு " என
அனத்தத் துவங்கினேன்
"கொஞ்சம் அப்பா வருகிற வரை பொறுடா
சுப்புப்பாட்டிக்கு கதை மூடு வருவதே கஷ்டம்
இதை விட்டா கஷ்டம்டா "என்றாள்
"என்ன உன் பையனுக்கு கதை போறடிச்சுடுச்சா
போய் சாதத்தைப் போட்டுவிட்டு வா " என்றாள்
"இல்லை மாமி நீங்க சொல்லுங்கோ.அவங்க
அப்பா வந்தவுடன் சேர்ந்து சாப்பிட்டாப் போச்சு"
என மாமியைத் தூண்டினாள் அம்மா
"இல்லப் பாட்டி கதை போரடிக்குது
நீங்க மீனாட்சி கதையச் சொல்லச் சொன்னா
ஊர் கதையைச் சொல்றேள்."என்றேன் எரிச்சலுடன்
"டேய் லூசு சும்மா இருடா.சுப்புமாமி மட்டும்
புத்தகத்திலே கதை எழுத ஆரம்பிச்சிருந்தா
கல்கிக்கு மேலயே பிரபல்யம் ஆகியிருப்பா
மாமிக்கு மூடு இருக்கு நீ கெடுத்துப்பிடாத
அப்புறம் அமையறது கஷ்டம் ,நீங்க
சொல்லுங்கோ மாமி " எனச் சுப்புப்பாட்டிக்கு
உசுப்பேத்தினாள் அம்மா
"எனக்கு இப்படி உன்னைப்போல ஆர்வமா
கேட்கிறவங்க்களைக் கேட்டா சந்தோஷம்டி
வாய் வழியா பரம்பரையா சொன்னதெல்லாம்
யாரும் மிகச் சரியா கவனிக்காம பதிவு செய்யாம
எத்தனை விஷயம் ஊரு உலகுக்குத் தெரியாம
போச்சுத் தெரியுமா.நம்மை ஊருக் கதையும்
போயிரப்படாதுன்னு என பாட்டி எனக்குச் சொன்னதை
எல்லாம் இப்படி சமயம் கிடைக்கிறப்போ நான்
சொல்லிவைக்கிறேன்.எவனாவது அதை எழுதி
ரிகார்ட் பண்ணாமலா போயிடுவான் " என
நிறுத்தி கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்
தெருவில் அவரவர்கள் வீட்டு வாசலில் நின்று
கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக வீட்டினுள்
போக வம்பு தேடி அலையும் பாலுமாமா மட்டும்
சுந்தரம்மாமா வீட்டை நோட்டம் விட்டபடி மெதுவாக
அந்த வீட்டைக் கடந்து கொண்டிருந்தார்
பாட்டி மெல்ல குரலைக் குறைத்தபடி
"நான் விஸ்தாரமா ஊரைப் பத்தியும் கோவிலைப்
பத்தியும் சொன்னதுக்கு காரணம் இருக்குடி
ஏன்னா இந்த மீனாட்சி வாழ்க்கைக்கும் அந்தக்
கோவிலுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்குடி"
எனச் சொல்லி நிறுத்தினாள்
நான் எழுந்து உட்கார்ந்து ஆவலுடன் கேட்கத்
தயாரானேன்
( தொடரும் )

20 comments:
//சுப்புமாமி மட்டும்
புத்தகத்திலே கதை எழுத ஆரம்பிச்சிருந்தா
கல்கிக்கு மேலயே பிரபல்யம் ஆகியிருப்பா//
:))))
சுவாரஸ்யமாகப் போகிறது... தொடர்கிறேன்!
கதை கொஞ்சம் வேறு பக்கமாக செல்கிறதே என்று யோசித்தேன்! சரியான விளக்கம் சொல்லி திரும்பி வந்துவிட்டீர்கள்! தொடர்கிறேன்!
"இந்த மீனாட்சி வாழ்க்கைக்கும்
அந்தக் கோவிலுக்கும்
நெருங்கிய சம்பந்தம் இருக்குடி" என்றால்
கதையின் முக்கிய பகுதி
அடுத்து வரும் போல - அதை
நானும் அறியாமல் விடமாட்டேன்!
//நான் எழுந்து உட்கார்ந்து ஆவலுடன் கேட்கத்
தயாரானேன்.//
நானும் தான். ;)
கதை கேட்கும் ஆர்வம் எங்களிடமும் தொற்றிக் கொண்டது.....
தொடர்கிறேன்.
சுப்புபாட்டி சொல்லும் கதையை கேட்க ஆவலாக இருக்கிறேன்.
நாங்களும் தயாராக இருக்கின்றோம்! கேட்க!
த.ம.
#எவனாவது அதை எழுதி
ரிகார்ட் பண்ணாமலா போயிடுவான்#
பாட்டியின் வார்த்தையைக் காப்பாற்றி விட்டீர்கள் ..பிள்ளையார் பாளையம் பெயர் வந்த காரணத்தைக் கூறி !
த ம 6
தொடர்கிறேன் இரமணி ஐயா.
தொடர்ந்து வருகிறோம், ஆவலோடு.
/// யாரும் மிகச் சரியா கவனிக்காம பதிவு செய்யாம எத்தனை விஷயம் ஊரு உலகுக்குத் தெரியாம போச்சுத் தெரியுமா....? ///
உண்மை தான்... ஆவலுடன் தொடர்கிறேன்...
கதை கேட்க உட்காரும்போது கதைஅல்லாததையும் கேட்கத்தானே வேண்டும் இருந்தாலும் அன்றைய நிலவரம் தெரிய மிகவும் உதவுகிறது. தொடர்கிறேன்
மேலும் ஆவலுடன் காத்திருக்கிறேன்...தொடரட்டும் கதை பயணம்.
சுப்பு மாமி சிறந்த கதை சொல்லியோ இல்லையோ. நீங்கள் சிறந்த கதை சொல்லி என்பதில் ஐயம் இல்லை. நான்கு பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன்.சிறிதும் சுவாரசியம் குறையாமல் செல்கிறது
த.ம. 9
கதை கேட்கும் ஆர்வம் எங்களுக்கும் அதிகமாகிக் கொண்டே வருகிறது
தொடருங்கள் ஐயா
தம 10
சுப்பு பாட்டி சொல்லப் போகும் கதையை கேட்க ஆர்வமாக உள்ளோம். .
என்ன சம்பந்தமென அறியும் ஆவலுடன் நான்
மதுரை அவனியாபுரம் பெயர்க் காரணம் தெரிந்து கொண்டேன். இத்தனை நாட்களாக ஏதோ ஒரு முஸ்லிம் வரலாற்றுப் பெயர் என்றே நினைத்து இருந்தேன்.
த.ம.11
சுவாரஸ்யம். தொடர்கிறேன்.
Post a Comment