Monday, December 15, 2014

மேற்கில் தோன்றும் உதயம்

பச்சை விளக்கைப் பார்க்கும் போதே
போதை ஏறுமோ -கால்கள்
இச்சை கொண்டு பாதை மாறி
போக ஏங்குமோ

மொத்த உடம்பும் பித்தம் ஏற
ஆட்டம் போடவே-மனசில்
மிச்சச் சொச்சக் கூச்சம் கூட
விலகி ஓடுமோ

வீடு போக எந்தப் பாதை
மாறிப் போயினும்- இந்தக்
கேடு கெட்ட" பாரு "அங்கே
இருந்து தொலைக்குமோ

தாறு மாறா விலையைக் கூட்டி
விற்கும் போதிலும்-காசை
வீசி எறிந்து வாங்கிக் குடிக்க
மனசு தாவுமோ


கடனைக் கேட்டு வட்டிக் காரன்
வந்து போனதும்-ரோட்டில்
கிடக்கப் பார்த்த மனிதர் எல்லாம்
முகத்தைச் சுளித்ததும்

நினைப்பில் வந்து தடுக்கப் பார்த்தும்
வெட்கம் இன்றியே-இந்த
வலையைக் கிழிக்கும் பலத்தை இழந்து
புலம்பித் தவிக்குமோ

செத்துக் காடு போன பிணமே
வீடு திரும்பினால் -பெண்
பித்துப் பிடித்துத் திரிவோன் மனசில்
இரக்கம் அரும்பினால்

போதைப் பாதைப் போன யாரும்
திருந்தக் கூடுமோ  ?-கதிரோன்
பாதை மாறி மேற்கில் கூட
உதிக்கக் கூடுமோ ?  

16 comments:

ஸ்ரீராம். said...

பாதை மாற்றும் போதை.

UmayalGayathri said...

நல்வழி மாறாதது...ஏனோ..

தம் 2

Thulasidharan V Thillaiakathu said...

ம்ம் என்ன சொன்னாலும் இந்த போதை மட்டும் ஏன் பாதையை விட்டு விலகுவதில்லையோ...நல்ல கவிதை..ரிதம் மிகவும் நன்றாக உள்ளது மட்டுமல்ல ராகம் போட்டு பாட ஏற்றதாகவும் உள்ளது அருமை! மிகவும் ரசித்தோம்....கருத்தையும் ரிதத்தையும்

”தளிர் சுரேஷ்” said...

விழிப்புணர்வூட்டி சிந்திக்க வைக்கும் கவிதை! அருமை!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!

\\போதைப் பாதைப் போன யாரும்
திருந்தக் கூடுமோ ?-கதிரோன்
பாதை மாறி மேற்கில் கூட
உதிக்கக் கூடுமோ ?//

சிந்திக்க வைக்கும் கவிதை வரிகள் அருமை.

மனிதர்கள் உணர்ந்து திருந்தினால், அவர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் நல்லது. அந்த
நல்லதே விரைவில் நடக்கட்டும்.!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

கரந்தை ஜெயக்குமார் said...

///போதைப் பாதைப் போன யாரும்
திருந்தக் கூடுமோ ?///
சிந்தனைமிகு வரிகள் ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 4

Unknown said...

போதை ஒரு வழிப் பாதை ,போகலாம் ,திரும்பி வர முடியாது :)
த ம 5

KILLERGEE Devakottai said...

நல்ல சிந்தனை கவிஞரே போதையின் பாதையில் போனவன் One Way தான்

கோவி said...

த ம 6..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
எழுதிச் சென்ற மொழி நடை சிறப்பாக உள்ளது யாவரையும் சிந்திக்க வைக்கும் வரிகள்...பகிர்வுக்கு நன்றி த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan said...

"போதைப் பாதைப் போன யாரும்
திருந்தக் கூடுமோ? - கதிரோன்
பாதை மாறி மேற்கில் கூட
உதிக்கக் கூடுமோ?" என நன்றாக
தொடுத்தீர் கேள்விகளை...
காலம் மாறுகிறது
நாளும் அறிவு வளருகிறது
ஆனாலும்
நம்மாளுகள் மாறவில்லைத் தான்...

விச்சு said...

போதை.. அரசும் ஒரு காரணம்.

திண்டுக்கல் தனபாலன் said...

பகவான்ஜி சொன்னது போல் தான்... ஆனாலும் முடியும்...

சசிகலா said...

நல்லதொரு பாதை காட்டும் பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.

ShankarG said...

'மேற்கில் தோன்றும் உதயம் '- நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல இலக்கணக் கவிதையைப் படித்தது திருப்தி அளிக்கிறது. நல்ல பதிவு.

Post a Comment