Saturday, December 20, 2014

ஆண்டவனே நீ அருள் புரி

மிக நெருங்கி வந்து
"அப்பா " என அன்புடன் அழைத்து
சொல்லவேண்டியதை
மிகப் பணிவாய்ச் சொல்லிப் போகிறாள்
முன்பின் நானறியா
அழகிய யுவதி

எனக்கு முன்வரை
கடுகடுத்தும்
வெறுப்பேற்றியுமே
பேசிவந்த நடத்துநர்
"ஐயா நீங்கள் எங்கு செல்ல வேண்டும் " என
அன்புடன் வினவி நிற்கிறார்

நேரில் பார்த்தறியாது
எழுத்தின் மூலம் அறிந்த
முகமறியா பதிவுலக நட்புகள் எல்லாம்
தவறாது பெயருக்குப் பின்
"ஐயாவை" இணைத்துவிடுகின்றனர்

இளமை கொடுத்த
வலுவும் திமுறும்
கொடுத்த மதிப்பினும்
நரையும் முதிர்ச்சிகொடுக்கும் மதிப்புத்தான்
எத்தனை உயர்வானது !

அதனை அனுபவிக்கவேண்டியேனும்
அனைவரும் நிச்சயம்
நீடுழி வாழ்வதோடு
முதிர்ச்சி அடைந்தும் வாழவேண்டும்
எனப் பிரார்த்திக்கிறேன்
ஆண்டவனே நீ அருள் புரி

21 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இலை, பூ, காய், கனி எல்லாமே அந்தந்த பருவத்திற்கு அழகு தான். இளமையில் நடையழகு. முதுமையில் நரையழகு.

மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்...... ஐயா ! :)

UmayalGayathri said...

ஆஹா..முதுமை அழகு.. நன்றாக சொல்லி உள்ளீர்கள்...ஐயா

தம. 2

Anonymous said...

ஆண்டவனே நீ அருள் புரி.....
Vetha.Langathilakam.

இராஜராஜேஸ்வரி said...

நரையும் முதிர்ச்சிகொடுக்கும் மதிப்புத்தான்
எத்தனை உயர்வானது !

கோமதி அரசு said...

நரையும் முதிர்ச்சிகொடுக்கும் மதிப்புத்தான்
எத்தனை உயர்வானது !//

உண்மை.
வாழ்த்துக்கள்.

விச்சு said...

முதுமை மதிப்பு வாய்ந்ததுதான். வாழ்த்துக்கள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களுக்காகவும், எங்களுக்காகவும் ஆன பிரார்த்தனை நிறைவேறட்டும். அறிவியல் வளர்ச்சி நம்மை படாத பாடு படுத்தும் சூழலில் இவ்வாறான எண்ணப்பகிர்வு தேவையே.

vimalanperali said...

முதிர்வின் அனுபவமும்,அதற்கு கிடைக்கிற மதிப்பும் வேறுதானே?

திண்டுக்கல் தனபாலன் said...

பிரார்த்திக்கிறேன்...

கோவி said...

தம. 5

கரந்தை ஜெயக்குமார் said...

முதுமை போற்றுவோம்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 6

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முதுமையின் சிறப்பை அழகாய் சொன்னிர்கள்.
த.ம.7

வெங்கட் நாகராஜ் said...

முதுமை தரும் பெருமை.....

நன்று.

த.ம.+1

மனோ சாமிநாதன் said...

முதிர்ச்சி என்றுமே அழகியது மட்டுமில்லை, ம‌திப்பிற்குரியதும் கூட! அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!!

Unknown said...

#முதிர்ச்சி அடைந்தும் வாழவேண்டும் #
வயதில் மட்டுமல்ல மன முதிர்ச்சியிலும் என்பதையும் சேர்த்துக் கொள்வது நல்லது ..ஊர்லே பல பெருசுங்க பார்வையே சரியில்லே :)
த ம +1

Yaathoramani.blogspot.com said...


Bagawanjee KA //

எதிலும் உள்ள நெகட்டிவை
மிகச் சரியாய் கண்டுபிடிக்கிறீர்கள்
அது எப்படி என ஆச்சரியமாய் இருக்கிறது

Thulasidharan V Thillaiakathu said...

நரையும் முதிர்ச்சிகொடுக்கும் மதிப்புத்தான்
எத்தனை உயர்வானது // பெருமையே! முதிர்ச்சி அடைந்தும் வாழ வேண்டும்.ஆம் மனப்பக்குவத்தோடு!

மிகவும் ரசித்தோம்!

Unknown said...

ஐயா இரமணி ! என்னைப் போலவா !

அருணா செல்வம் said...

முதுமை ஓர் வரம்! அது அனைவருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே

கிடைத்தால் அதற்கு மதிப்பதிகம் தான் என்பதை அழகாக சொன்னீர்கள் இரமணி ஐயா. நன்றி.

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம் said...
ஐயா இரமணி ! என்னைப் போலவா !//

மிகச் சரியாக யூகித்தது வியப்பளிக்கிறது
நிஜமாகவே உங்களை நினைத்தே எழுதினேன்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

Post a Comment