Sunday, December 21, 2014

விந்தையிலும் விந்தைதான்

யானைகளைக் கட்டி
பலசமயம்
இழுக்க இயலாதுப்  போனக்
கவிதைத் தேரது

ஒரு சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை

குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது

ஒரு சிறு சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது  விந்தை

படித்து
அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு

மனமளக்க
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை

விதம் விதமாய்
வேடிக்கைகள் காட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை

எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது

நிச்சயம் ........

 அதிசயமே அசந்து போகும்
அதிசயம் போலவே
 விந்தையதே வியக்கும் விந்தைதான்

12 comments:

ஸ்ரீராம். said...

அருமை.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

கருத்தாடல் மிக்க வரிகள் நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
த.ம 3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது

நிச்சயம் ........

அசந்து போகும் அதிசயமே ! :)

அருமை !!

ADHI VENKAT said...

அழகான வரிகள்.
விந்தையிலும் விந்தை தான் எல்லாமே... த.ம +

Anonymous said...

ரசித்தேன்.
வேதா. இலங்காதிலகம்.

சசிகலா said...

கவிக்குழந்தை உங்களுக்கு மட்டுமே கட்டுப்படுகிறது.

அருணா செல்வம் said...

உங்களைப் பேன்ற கவிஞர்கள் நினைப்பதெல்லாம் கவியாகி வலம் வருதல் எனக்கு விந்தையாகப் படவில்லை.
வணங்குகிறேன் இரமணி ஐயா.

கரந்தை ஜெயக்குமார் said...

கவி
தானே பொங்குகிறது
தங்களிடம்
நன்றி ஐயா
தம 7

Unknown said...

இப்படியும் கவிதைக்கு கரு கிடைத்து இருப்பதும் விந்தையிலும் விந்தைதான் :)
த ம 8

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான, அழகான வரிகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் ஐயா...

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை.....

த.ம. +1

Post a Comment