ஏன் எல்லா இறைத் தூதர்களும்
ஞானமடைதலுக்கு முன்னால்
மனிதர்களை விட்டு
முற்றிலுமாக விலகிப் போனார்கள் ?
காடு மலை
விலங்குகளை அண்டிப் போனார்கள் ?
மனிதன் மேல் கொண்ட
அவ நம்பிக்கையினாலா ?
இயற்கை மற்றும்
விலங்குகளின் மேல் கொண்ட
அதீத நம்பிக்கையினாலா ?
ஆட்டுடன் கூடிய ஏசுவும்
மாடு கன்றுகளுடன் கூடிய கண்ணனும்
மலை அடிவாரங்களில் திரிந்த முகமதுவும்
இருப்பிடமே அறியாதிருந்த புத்தனும்
எதையோ சூட்சுமமாய்
சொல்லிப் போகிறார்கள்
என் மட மண்டைக்குத்தான்
ஏதும் புரியவில்லை
உங்களுக்கேதும் புரிகிறதா ?
புரிந்தவர்கள் சொல்லுங்களேன் பிளீஸ்
ஞானமடைதலுக்கு முன்னால்
மனிதர்களை விட்டு
முற்றிலுமாக விலகிப் போனார்கள் ?
காடு மலை
விலங்குகளை அண்டிப் போனார்கள் ?
மனிதன் மேல் கொண்ட
அவ நம்பிக்கையினாலா ?
இயற்கை மற்றும்
விலங்குகளின் மேல் கொண்ட
அதீத நம்பிக்கையினாலா ?
ஆட்டுடன் கூடிய ஏசுவும்
மாடு கன்றுகளுடன் கூடிய கண்ணனும்
மலை அடிவாரங்களில் திரிந்த முகமதுவும்
இருப்பிடமே அறியாதிருந்த புத்தனும்
எதையோ சூட்சுமமாய்
சொல்லிப் போகிறார்கள்
என் மட மண்டைக்குத்தான்
ஏதும் புரியவில்லை
உங்களுக்கேதும் புரிகிறதா ?
புரிந்தவர்கள் சொல்லுங்களேன் பிளீஸ்
15 comments:
மனிதர்களுடன் இருந்தால் மிண்டும் மனதை மாற்றிவிடுவார்கள். அதனால் இருக்கலாம். மாறுதலுக்கு என்றாலும் அருமை.
வணக்கம்
“ஐயா
எல்லா வினாக்களும் மிக அருமையாக கேட்டுள்ளீர்கள் மற்றவர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் பகிர்வுக்கு நன்றி
இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள் த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான கேள்வி ஐயா
இதற்கானப் பதிலைத் தெரிந்து கொண்டால்
நாமும் இறைத் தூதர்தான்
தம +1
போதுமென்ற மனம் - எதுவுமே...!
த ம மூன்று..
புரிந்த வுடன் பகிருங்கள்..
Click here.. My Wishes!
நல்ல கேள்வி... நல்ல சந்தேகம்... யோசிக்க வைத்து விட்டீர்கள்!
//உங்களுக்கேதும் புரிகிறதா ?//
இதில் புரிவதற்கு என்ன கஷ்டம்? பிறந்தவர்கள் எல்லோரும் செத்துப்போவார்கள். இவ்வளவுதானே!
பழனி. கந்தசாமி //
இதில் புரிவதற்கு என்ன கஷ்டம்? பிறந்தவர்கள் எல்லோரும் செத்துப்போவார்கள். இவ்வளவுதானே!
ஆம் அதுவும் சரிதான்
பதில் தெரிந்திருந்தால் நாமும் அவ்வரிசையில் சென்றிருப்போம்.
ஏசுவும், கண்ணனும் போல் சிவனும் பசுக்களை மேய்த்தவர். அதனால் பசுபதி என்று பெயர் பெற்றார்.
பசு ஆன்மா, பதி இறைவன் என்பார்கள்.
அமதியான இடம் என்பதால் காடுகளுக்கு சென்று இருப்பார்கள்.
கவிதை அருமை.
அமைதியான இடம்.
நல்ல கேள்வி! பதில் யோசித்துக்கொண்டிருக்கிறேன்!
"ஆட்டுடன் கூடிய ஏசுவும்
மாடு கன்றுகளுடன் கூடிய கண்ணனும்
மலை அடிவாரங்களில் திரிந்த முகமதுவும்
இருப்பிடமே அறியாதிருந்த புத்தனும்
எதையோ சூட்சுமமாய்
சொல்லிப் போகிறார்கள் "
- ஆம் நண்பரே!
சூட்சுமத்தை சொல்லுவதுதான் சூத்திரம்
ஆத்திரம் கொள்ளாது அதை நாம் உணர்ந்தால்
குலம்/கோத்திரம் யாவும் காணாமல் போகும்!
இலவம் பஞ்சில் மஞ்சம் கொள்ளும் மனிதருக்கு
சூட்சும சூத்திரத்திற்கான விடை காண்பது என்பது
காணல் நீர் போல்தான் தெரியும்!
நட்புடன்,
புதுவை வேலு
"ஆட்டுடன் கூடிய ஏசுவும்
மாடு கன்றுகளுடன் கூடிய கண்ணனும்
மலை அடிவாரங்களில் திரிந்த முகமதுவும்
இருப்பிடமே அறியாதிருந்த புத்தனும்
எதையோ சூட்சுமமாய்
சொல்லிப் போகிறார்கள் "
- ஆம் நண்பரே!
சூட்சுமத்தை சொல்லுவதுதான் சூத்திரம்
ஆத்திரம் கொள்ளாது அதை நாம் உணர்ந்தால்
குலம்/கோத்திரம் யாவும் காணாமல் போகும்!
இலவம் பஞ்சில் மஞ்சம் கொள்ளும் மனிதருக்கு
சூட்சும சூத்திரத்திற்கான விடை காண்பது என்பது
காணல் நீர் போல்தான் தெரியும்!
நட்புடன்,
புதுவை வேலு
யோசிக்க வைத்தது. எங்களின் புரிந்து கொண்ட ஒரு பதில் என்பது அமைதி, புரிதல், உணர்தல் என்பது எங்கிருந்தாலும் கிடைக்கும் மலையடிவாரத்திற்குச் சென்று அங்கும் மனம் அலைபாயவும் நேரிடலாமே......இது எங்களுக்கும் எழுந்தது உண்டு...இப்போது உங்கள் இந்தக் கேள்வி மீண்டும் அதை உயிர்ப்பித்துள்ளது....இருப்பிடம் வேங்கடம் வைகுண்டம் என்று சொன்ன ஆழ்வாரும் உண்டு.....
நல்ல பதிவு!
Post a Comment