Monday, December 8, 2014

அழுது கொண்டிருப்பதற்குப் பதில் .......

புரியாது என புலம்பித் திரிந்ததைவிட
புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

15 comments:

இராஜராஜேஸ்வரி said...

பலன் தரும் வரிகள் அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

நம்பிக்கைதானே வாழ்க்கை
அருமை ஐயா
தம 2

ezhil said...

நல்ல நம்பிக்கை வரிகள்....

bandhu said...

படித்தால் புரியாது
என்று
கவிதைகளை தவிர்த்தே வந்தேன்..
முயன்று படித்ததில்
கொஞ்சம்
புரியத்தான் செய்கிறது!

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மைகள் ஐயா... உண்மைகள்...

கீதமஞ்சரி said...

நடக்கமுடியாது என்றபோதும் தவழ்வது இலக்கு நோக்கி இன்னும் கொஞ்சமேனும் நகர்த்தும். முயற்சிகளின் முழுப்பரிமாணம். அருமை ரமணி சார்.

சசிகலா said...

தங்கள் சிந்தை வியக்கவைக்கிறது. நம்பிக்கை விதைக்கும் வரிகள்.

ராமலக்ஷ்மி said...

உண்மை. நம்பிக்கையுடன் மனம் தளராது முயன்று வருவதே முக்கியம். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

அம்பாளடியாள் said...

மிகவும் சிறப்பான கருத்து வாழ்த்துக்கள் ஐயா !

Anonymous said...

Nalla sinthanai vatikal..
Vetha.Langathilakam.

G.M Balasubramaniam said...

எதிர் மறைகளை ஒப்பிட்டு கவிதை எழுதுவது உங்கள் பலம். வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

முயற்சியும் தேடுதலும் நம்பிக்கையும் உழைப்பும்தான் வாழ்க்கையை செம்மையாக்குகிறது என்று மிக அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!!

”தளிர் சுரேஷ்” said...

நம்பிக்கையின் சிறப்பை விளக்கும் கவிதை அருமை!

வெங்கட் நாகராஜ் said...

நம்பிக்கை தரும் கவிதை....

த.ம. +1

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கவிதை ! நம்பிக்கைதானே வாழ்க்கைக்கு வித்திடும்...

Post a Comment