Sunday, September 13, 2015

ஸ்டாலினின் முன்நகர்வும் கலைஞரின் கோபமும்

மாணவர் மன்றம் "புதுயுக சிற்பிகள் "என்கிற பெயரில்
திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்திருந்த
கூட்டத்தில் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டதை
கலைஞர் விரும்பவில்லை என்கிற செய்தி
பத்திரிக்கையில்  வந்ததை
அனைவரும் பார்த்திருக்கக் கூடும்

ஏன் விரும்பவில்லை என்பதை பழைய
அரசியல் நிகழ்வுகள் அறிந்தவர்களுக்கு மட்டுமே
புரியக் கூடிய விஷயம்

அண்ணா அவர்கள் மறைந்து புதிய முதல்வரை
தேர்ந்தெடுக்கவேண்டிய சூழலில் சட்டசபைத்
 தலைவராக நெடுஞ்செழியன் அவர்களும்
மதியழகன் அவர்களும் கலைஞர் அவர்களும்
போட்டியிடுகிற சூழல்

அண்ணாவால் தனக்கு அடுத்தவர் என மக்களுக்கு
அறிமுகப்படுத்தப்பட்ட நெடுஞ்செழியன் அவர்களும்
கட்சியில் அதிக ஆதரவுடைய கலைஞர் அவர்களும்
அவருடன் போட்டியிடக்கூடிய  கட்சிச்செல்வாக்குடைய
மதியழகன் அவர்களும் போட்டி என அறிவிக்கப்பட
தமிழகமே அந்த சட்டசபை உறுப்பினர்களின்
கூட்டத்தின் முடிவை ஆவலுடன்
எதிர்பார்த்திருந்த சூழல்

கட்சிச் சம்பந்தம் இல்லாத அனைவரும்
அண்ணாவால் அதிகம் தனக்கு அடுத்தவர்
என்கிற முறையில் அதிகம் குறிப்பாக உணர்த்தப்பட்ட
நெடுஞ்செழியன் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப் படுவார்
என எதிர்பார்த்திருந்த சூழலில்.....

மூவரும் போட்டியிடுகிற பட்சத்தில் ஓட்டு
பிரிவதன் அடிப்படையில் மதியழகன் கூட
வெல்வதற்குவாய்ப்புள்ளது என சில
கட்சிக்காரர்கள் கற்பனை செய்ய

கூட்டத்தில் போட்டியாளர் என நினைத்துக்
 கொண்டிருந்தமதியழகன் அவர்கள் கலைஞரை
 முன்மொழிய புரட்சித்தலைவர் வழி மொழிய

கலைஞரின் ராஜ தந்திரம் கட்சியில் வென்ற விஷயம்
குறித்து எழுத நிறைய இருக்கிறது

(ஆயினும் கட்டுரைக்கான பிரதான விஷயம்
அது இல்லை என்பதால் அதை இப்போது விட்டுவிடுவோம் )

அவ்வாறு சட்டசபைக் கட்சித் தலைவராக கலைஞர்
அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டாலும் கட்சியில்
செல்வாக்குள்ள தலைவர்களில் ஒருவராக இருந்தாலும்
அண்ணாபோல் எம் ஜீ ஆர் அவர்களைப் போல
கட்சி சாராத பொதுமக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய
தலைவராக இல்லை

எனவே கட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
கட்சிப் பணிகளில் ஈடுபடமுடியாத சபா நாயகரின்
பதவியில் மதியழகனை நிறுத்தி ஓரம் கட்டி
அடிமட்டத்து கட்சிக்காரர்களிடம் அவ்வளவு நெருக்கம்
இல்லாத நெடுஞ்செழியனை வேறு ஒரு மாதிரியாக
டீல் செய்து கட்சியில் தன்னை முழுமையாக
நிலை நிறுத்திக் கொண்டார்

பொது ஜனமக்களிடம் தன்னை மக்கள் தலைவராக
நிலை நிறுத்திக் கொள்ள பதவியின் மூலம்
தன் சுய விளம்பரத்தை அதிகம் செய்து கொண்டார்

அப்போதுதான்  "நாம் இருவர் நமக்கு இருவர் " என்கிற
குடும்பக் கட்டுப்பாடு போஸ்டர் கலைஞரின்
முகம் போட்டு சமூக நலத் துறையினரால் பட்டி தொட்டி
யெல்லாம் ஒட்டப்பட்டது

அதை விமர்சித்துக் கூட அப்போதைய பழைய
காங்கிரஸ் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம்
"இந்தப் படத்தை ஒரு பெண் படித்தால்
என்ன அர்த்தம் கிடைக்கும் " என ஆபாசமாக
விமர்சித்தப் பேச்சு அப்போது அதிகப் பிரசித்தியம்

அரசின் சாதனைகளை விளக்குவதன் மூலம்
கலைஞரை பிரபலப்படுத்த அப்போது உருவாக்கப்
பட்டதுதான் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள்
( அதன்படி நுழைந்தவர்தான் சசிகலா நடராஜன்
என்பதுவும் கூடுதல் தகவல் )

எப்படி கட்சி தாண்டி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
வேண்டிய அவசியம் கலைஞருக்கு ஏற்பட்டதோ
அதே நிலை கனிமொழி மற்றும் அழகிரி அவர்களை
மீறி ஸ்டாலின் அவர்கள் தன்னை நிலை
நிறுத்திக் கொள்ளவேண்டிய அவசியம்
இன்று நேர்ந்துள்ளது

அதை மிகச் சரியாக ஸ்டாலின் அவர்கள் செய்கிறார்

அப்படி ஸ்டாலின் தேர்தலுக்குள் தன்னை நிலை
நிறுத்திக் கொள்வாரேயானால் நிச்சயம் கலைஞரால்
தம் இஷ்டம் போல் குடும்ப உறுப்பினர்கள் யாரையும்
கட்சியின் மிக உயர்ந்த பதவிகளில் நியமனம் செய்வது
சாத்தியப்படாது

அதற்கெனவே ஸ்டாலின் அவர்களின் முன்நகர்வை
கலைஞர் அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை
என்பதே என் வாதம்

தங்கள் விமர்சனம் எதிர்பார்த்து ....

வாழ்த்துக்களுடன்.....

7 comments:

Balaji said...

Thangalin karuthu Arumayanathu...evargal enna rajathandiram seidhalum makkaluku aethum ubayogam illai enbathe onnmai...pathavi veriyarkalin gorathandavum

திண்டுக்கல் தனபாலன் said...

இப்போது தானே ஆரம்பம்...

கவியாழி said...

குடும்பம் வேறு அரசியல் வேறோ?....

Unknown said...

தேர்தல் முடியும் வரை ஸ்டாலின் பொறுக்க வேண்டும் என்பதே கலைஞர் மற்றும் என் அவா...!

Avargal Unmaigal said...

கலைஞருக்கு அடுத்தது ஸ்டாலிந்தான் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் கலைஞரையும் கிழே தள்ளிவிட்டு அந்த இடத்தை பிடிக்க அவசரப்படும் நிலையில்தான் ஸ்டாலின் உள்ளார். அவரசரக் காரியம் சிதறிப் போகும் என்பதை அறியும் நிலையில் ஸ்டாலின் இப்போது இல்லை என்பது தற்போதைய நிலை

வெங்கட் நாகராஜ் said...

அரசியல் குடும்பத்திற்குள்ளும்..... :(

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

அய்யா வணக்கம். பதிவு போட்டீர்கள்..பணமும் தந்தீர்கள்.. விழா விட்ஜெட்டையும் தங்களின் பிரபலமான தளத்தில் எடுத்துப ்போட வேண்டுகிறோம். போடுவீர்கள் என்பதால் உங்களுக்கு எங்கள் முன்கூட்டிய நன்றி வணக்கம்

Post a Comment