மண்ணைக் கீறி
ஆழமாய் விதைக்கப் பட்ட
வீரிய மிக்க விதை மட்டுமல்ல
நெஞ்சைக் கீறி
ஆழமாய் விதைக்கப்பட்ட
அதீத வெறுப்பும் கூட
நிச்சயம் அதற்கான காலத்தில்
தடைகள் தகர்த்து
வெளிக் கிளம்பவே செய்யும்
"நிர்கதி " என்ற
சொல்லின் பொருள்
அனுபத்தில் விளங்கும்படியாய்
நாங்கள் நின்ற அந்த ஒரு வார காலம்
"நித்சலன் " எனும்
வழக்கொழிந்த சொல்லுக்கு
நேரடி விளக்கமாய்
நீங்கள் கழித்த அந்த ஒரு வாரம்..
பெருங்கனவினிலும்
நீங்காத நினைவாய்
பெரும் மகிழ்விலும்
உறுத்தும் துயராய்
நீறி பூத்த நெருப்பாய்
ஆழப்பதிந்தே கிடக்கிறது...
சோதனைக்காலங்களில்
உங்கள் மனங்களை
உங்கள் செயலற்ற தன்மையால்
நிர்வாணமாகவே கண்டுவிட்டோம்
இனி உங்கள்
எந்த முகமூடிக்கும்
எந்தப் பித்தலாட்டப் பார்முலாக்களுக்கும்
நாங்கள் ஏமாறத் தயாராயில்லை
மொத்தத்தில்
சுருங்கச் சொன்னால்
நாங்கள் தயாராகிவிட்டோம்
நீங்கள் தாயாராகிக் கொள்ளுங்கள்
அதுவே ஏமாற்றம் தவிர்க்க எளிய வழி ..
ஆழமாய் விதைக்கப் பட்ட
வீரிய மிக்க விதை மட்டுமல்ல
நெஞ்சைக் கீறி
ஆழமாய் விதைக்கப்பட்ட
அதீத வெறுப்பும் கூட
நிச்சயம் அதற்கான காலத்தில்
தடைகள் தகர்த்து
வெளிக் கிளம்பவே செய்யும்
"நிர்கதி " என்ற
சொல்லின் பொருள்
அனுபத்தில் விளங்கும்படியாய்
நாங்கள் நின்ற அந்த ஒரு வார காலம்
"நித்சலன் " எனும்
வழக்கொழிந்த சொல்லுக்கு
நேரடி விளக்கமாய்
நீங்கள் கழித்த அந்த ஒரு வாரம்..
பெருங்கனவினிலும்
நீங்காத நினைவாய்
பெரும் மகிழ்விலும்
உறுத்தும் துயராய்
நீறி பூத்த நெருப்பாய்
ஆழப்பதிந்தே கிடக்கிறது...
சோதனைக்காலங்களில்
உங்கள் மனங்களை
உங்கள் செயலற்ற தன்மையால்
நிர்வாணமாகவே கண்டுவிட்டோம்
இனி உங்கள்
எந்த முகமூடிக்கும்
எந்தப் பித்தலாட்டப் பார்முலாக்களுக்கும்
நாங்கள் ஏமாறத் தயாராயில்லை
மொத்தத்தில்
சுருங்கச் சொன்னால்
நாங்கள் தயாராகிவிட்டோம்
நீங்கள் தாயாராகிக் கொள்ளுங்கள்
அதுவே ஏமாற்றம் தவிர்க்க எளிய வழி ..
11 comments:
இனி உங்கள்
எந்த முகமூடிக்கும்
எந்தப் பித்தலாட்டப் பார்முலாக்களுக்கும் சுருங்கச் சொன்னால்
நாங்கள் ஏமாறத் தயாராயில்லை
நாங்கள் தயாராகிவிட்டோம் nalla karuththu...
வேதாவின் வலை
ஆம் தயாராகிவிட்டோம்
தம +1
அழகான சொற்கோவைகள். விரக்தியின் பாதிப்பு வரிகளில் தெரிகிறது ரசித்தேன் வாழ்த்துக்கள்.
arumaiyaana pathivu..
வீரியமிக்க வரிகள் கவிஞரே
தமிழ் மணம் 3
உறுபொழுது வரும்வரை உள்ளெரியும் தணலை அணையாமல் பாதுகாக்கவேண்டும்.. அதுதான் மிகவும் முக்கியம்.
நீங்கள் தாயாராகிக் கொள்ளுங்கள்
அதுவே ஏமாற்றம் தவிர்க்க எளிய வழி ..---நன்றி! அய்யா........
அனைவரும் தயாராகட்டும்.....
நல்ல மாற்றத்திற்கு வழி வகுக்கட்டும்....
துணிந்தபின் மனமே துயரங் கொள்ளாதே.இப்பாடல் ஞாபகம் வருகின்றது
வணக்கம்
ஐயா
நாங்களும் தயாராகி விட்டேன்...சொல்லிய விதம் சிறப்பு ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆதங்கம்..விரக்தி வெளிப்படும் வார்த்தைகள் அருமை. நல்லதொரு மாற்றம் ஏற்பட வேண்டும்... "நீறு" பூத்த நெருப்பாய்..நீறு? நீறிக்குப் பதில்??
Post a Comment