Tuesday, July 5, 2016

அடுத்தப் பதிவர் சந்திப்பு

ஒவ்வொரு முறை ஒலிம்பிக் போட்டி
முடிவுறும்போதும் , அடுத்துப் போட்டி
 நடக்க இருக்கிற நாட்டை முடிவு செய்து
அறிவித்து விடுகிற மாதிரியே....

சென்னையில் பதிவர் சந்திப்பு முடிந்த
நாளில்  அடுத்த சந்திப்பு நடத்த விரும்புகிற
மாவட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட
சென்னை மாவட்டப் பதிவர்கள் அனைத்து
மாவட்டப் பதிவர்களையும் அணுகி முடிவெடுக்க
முயன்றார்கள்

அப்போது ஈரோடு மாவட்டப் பதிவர்களும்
மதுரை மாவட்டப் பதிவர்களும் தங்கள்
மாவட்டத்தில்தான் நடத்த வேண்டும் என்கிற
முனைப்புடன் இருந்தார்கள்

முடிவாக அடுத்த பதிவர் சந்திப்பு ஈரோட்டில்
நடத்த முடிவெடுத்து அது குறித்து மேடையிலும்
அறிவிப்பு வெளியிடப்பட்டது

சந்தர்ப்ப சூழ் நிலை காரணமாக ஈரோட்டில்
நடத்த முடியாமல் போனதால் அந்த வாய்ப்பைப்
பயன்படுத்தி மதுரை மாவட்டப் பதிவர்கள்
அடுத்த பதிவர் சந்திப்பினை மிகச் சிறப்பாக
நடத்தி முடித்தார்கள்

மதுரை மாவட்டப் பதிவர்கள் சந்திப்பில்
பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட
புதுகைப்  பதிவர்கள் அடுத்த சந்திப்பு தங்கள்
மாவட்டத்தில்தான் நடத்த வேண்டும் என்கிற
கோரிக்கையை முன்வைத்து அந்த சந்திப்பில்
ஒப்புதல் பெற்று மிகச் சிறப்பான ஒரு பதிவர்
சந்திப்பை புதுகையில் நடத்தினார்கள்

சந்திப்பின் சுவாரஸ்யம்,கூடுதல்
 தொடர் நிகழ்வுகள் மற்றும் சந்திப்பு ஏற்படுத்திய
மலைப்பின் காரணமாகவோ என்னவோ
புதுகைச் சந்திப்பில் எந்த மாவட்டத்தைச்
சார்ந்தவர்களும் அடுத்த சந்திப்புக் குறித்து
விருப்பம் தெரிவிக்கவில்லை

அடுத்த பதிவர் சந்திப்பு நடக்கும் மாவட்டம்
குறித்து முடிவெடுக்கவும் முடியவில்லை

இந்த நிலையில் புதுகைச் சந்திப்பின்
ஒருங்கிணைப்பாளராக இருந்து தன் பங்கினை
 மிகச் சிறப்பாகச் செய்த முத்து நிலவன் ஐயா அவர்கள்
பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் அடுத்த
சந்திப்பிற்கான ஆலோசனைகள் வ்ழங்குமாறுக்
கோரி இருந்தார்

அந்த வகையில் பதிவர் சந்திப்புக்கான கால
அவகாசம் குறைந்த பட்சம் ஐந்து அல்லது
ஆறுமாத காலம் இருக்கும்படியாக தேதியையும்

ஈரோடு  பதிவர்களுக்கு முன்னுரிமை அளித்து
அவர்களால் இயலவில்லை எனில் விருப்பமுள்ள
பிற மாவட்டத்துப் பதிவர்களை
அணுகலாம் என்பதை எனது தனிப்பட்ட
ஆலோசனையாகப் பதிவு செய்கிறேன்

வாழ்த்துக்களுடன்...

14 comments:

Yarlpavanan said...

தங்கள் மதியுரையைத் தான் ஐயா
நானும் விரும்புகிறேன்

ஸ்ரீராம். said...

ஓ... இன்னும் முடிவாகவில்லையோ...

ஸ்ரீமலையப்பன் said...

சீக்கிரம் ...

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நானும் இதே ஆலோசனையை அய்யா முத்துநிலவன் அவர்கள் பதிவில் தெரிவித்து இருக்கிறேன் !

KILLERGEE Devakottai said...

எமது வாழ்த்துகள், என்னால் இயன்ற உதவிகள் தயார்.....
த.ம. 3

ananthako said...

நல்ல முறையில் விழா நடக்க இறைவன் அருள் கிட்டட்டும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எங்கு நடந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே. அனைவரையும் சந்திக்க ஒரு நல்வாய்ப்பு அல்லவா?

G.M Balasubramaniam said...

முத்து நிலவன் சாருக்கு பதில் அஞ்சல் எழுதி இருக்கிறேன் இதுவரை நடந்த பதிவர் சந்திப்புகளின் முன்னோடிகள் முதலில் சேர்ந்து ஒரு கருத்து முடிவெடுக்க வேண்டும் எப்படி இருந்தாலும் வருகிறேன் என்று சொல்பவர் வராமல் இருப்பது தவிர்க்க வேண்டும் என் கருத்துகளைப் பதிவுகளில் எழுதி இருக்கிறேன் மைய அமைப்பு வேண்டும் என்று கூறியவர்களே மௌனமாக இருக்கின்றனர்

Thulasidharan V Thillaiakathu said...

எங்கு நடந்தாலும் நல்லதே

'பரிவை' சே.குமார் said...

ஈரோடு இல்லை என்றால் தஞ்சாவூர்..
இந்த இரண்டு இடத்தில் ஏதோ ஒன்றில் ஏற்பாடு செய்யலாம்... எங்கு நடந்தாலும் எங்கள் உதவிகள் கண்டிப்பாக இருக்கும் ஐயா...

வெங்கட் நாகராஜ் said...

எங்கே நடந்தாலும், எங்களது வாழ்த்துகள் நிச்சயம் உண்டு. முன்னரே இடமும் தேதியும் தெரிந்தால் வருவது பற்றி யோசிக்க முடியும்.

இராய செல்லப்பா said...

ஈரோடு அல்லது தஞ்சை சரியாக இருக்கும்.-இராய செல்லப்பா

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஈரோடு அல்லது தஞ்சையில் நடத்த உரிய நண்பர்கள் முடிவெடுக்க வேண்டும்...
வருகிற சந்திப்பிற்கு மிக ஆவலாய்...

Post a Comment