Thursday, July 28, 2016

பதிவர் சந்திப்புப் பல்லவி

 சுவையான கனிகளை
இரசித்து உண்ட பின்
அது உண்டான மரம் பார்க்கும் ஆசை

வெக்கைப் போக
அந்த இதமான சூழலைத் தந்த
கருமேகங்களைக்  காண ஆசை

நல்ல விருந்தினை
இரசித்துப் புசித்தப்  பின்
அதைச் சமைத்தவனைப் பார்க்கும் ஆசை

மணக்கும் மல்லிகையைப்
நுகர்ந்ததும்
மதுரையைப் பார்க்கும் ஆசை

மொறுமொறு முறுக்கினை
கடித்து முடித்ததும்
மணப்பாறைப் பார்க்கும் ஆசை

நாவைக் குளமாக்கும் அல்வாவை
உண்டு முடித்ததும்
நெல்லையைக் காணும் ஆசை

விடாது தொடருதல் போல

சிறந்தப் பதிவுகளைப் படித்ததும்
அதைப் படைத்தவனைப்
பார்க்கும் ஆசை

விடாது தொடருதல் என்னுள்

நடந்து முடிந்த சந்திப்புக்கள்
தொடர்ந்து ஓடுது கண்ணுள்

என்று ?
எங்கு ?
எப்போது ?
என்னும் கேள்விகளோடு

வழக்கம்போல்
ஊதுகிற சங்கை ஊதிவைக்கிறேன்

விதைக்கிற விதையை விதைத்து வைக்கிறேன்

சரணங்களும்
அனுசரணங்களும்
பல்லவியைத் தொடரும்
என்கிற அதீத நம்பிக்கையுடன்  

8 comments:

G.M Balasubramaniam said...

கேள்வியை எழுப்பி பதிலை எதிர்நோக்கும் உங்கள் பாணி அலாதியானது வாழ்த்துகள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
தங்களைப் போலதான் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் ......சொல்லிய விதம் சிறப்பு.

நன்றி
அன்புடன்
ரூபன்ரூபன்

KILLERGEE Devakottai said...

கோரஷில் எனது பல்லவியும் உண்டு கவிஞரே...

Thulasidharan V Thillaiakathu said...

பார்ப்போம் நண்பரே கேள்வி வந்துவிட்டது...பொருத்திருப்போம்...

sury siva said...

இருநூறு பேர் கூடினும் மனம்
இணையாது பிரிந்து போதல்
இல்லை.
இரு மூன்று நாலு ஐந்து
ஒருமித்த நோக்குண்டோர்
இதமாக செவி மடுத்தல்
பரிவுடனே கருத்துக்கள்
பரிமாறி க்கொள்ளுவதும்
பாயசம் போல் இருக்குமன்றோ !
ஆயசங்கள் தீர்க்குமன்றோ !!

அண்மையில் ஜி.எம். பி. அவர்கள்
அழைத்திருந்தார். என்னால் தான்
செல்ல இயலவில்லை.
உடல் ஒத்துழைக்கவில்லை.

சுப்பு தாத்தா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களின் ஆவல் பிறருக்கு ஆவலை ஏற்படுத்திவிடும்போலுள்ளது.

தி.தமிழ் இளங்கோ said...

பல்லவன் பல்லவி பாடட்டுமே ... பார்த்திபன் காதலி ஆடட்டுமே ... - என்று பாடத் தோன்றியது.

வெங்கட் நாகராஜ் said...

விரைவில் நடக்கட்டும்.... திட்டமிட்டு விட்டால், வெளி இடங்களிலிருந்து வருபவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

Post a Comment