Tuesday, August 6, 2013

இன்றைய நாளை நாமே கணிப்போம் ( தொடர்ச்சி ) அவல் 2 ( 3 )

என் நண்பன் வருவதற்கு முன்பாகவே  
மொட்டை மாடியில் தனியாக அமர்ந்து அதுவரை
நண்பன் சொல்லிய விஷயங்களை ஒருமுறை
சொல்லிப்பார்த்துக் கொண்டேன்

நிலவின் தேய்மானம் கிழக்கு நோக்கி இருப்பின் வளர்பிறை
அதுவே மேற்கு நோக்கி இருப்பின் தேய்பிறை
முழு வட்டத்திற்கான கோணம் 360 டிகிரி
நாம் நம் பூமியின் அரை வட்டத்தைத்தான் பார்க்கிறோம்
அதன் டிகிரி 180
சூரியன் ஒரு நாள் 1 டிகிரி வீதம் நகர்ந்து 30 டிகிரியை
ஒரு மாதத்தில் கடக்க
நிலாவோ ஒரு நாள் 12 டிகிரிவீதம் நகர்ந்து 30 நாளில்
360 டிகிரியையும்  கடந்துவிடும்

இதனை நான் முழுவதுமாக மனதில்
ஏற்றிக் கொள்ளவும் என் நண்பன் வரவும்
 மிகச் சரியாக இருந்தது

"நேற்று நான் சொல்லியவரையில்  எந்தக் குழப்பமும்
இல்லையே தொடரலாமா " எனச் சொல்ல
 நான் ஆர்வத்தில் வேகமாகத் தலையாட்டினேன்.
நண்பன் தொடர்ந்தான்

"வட்டத்தின் துவக்கப்புள்ளியும் முடிவுப் புள்ளியும்
ஒன்றுதானே.அப்போதுதானே அது வட்டமாக
 இருக்கமுடியும்

அதன்படி 0 டிகிரியும் 360 டிகிரியும் ஒரு புள்ளிதானே

இந்தப் புள்ளியில் அதாவது சந்திரனும் சூரியனும்
குறிப்பிட்ட இந்த புள்ளியில் அல்லது கோணத்தில்
இருப்பதை நாம் அமாவாசை என்கிறோம்

பின் சந்திரன்  0 லிருந்து ஒரு நாள் நகர்வதை
அதாவது சூரியனை விட்டு12 டிகிரி நகர்வதை
முதல் நாள் என்கிறோம்.இதை சமஸ்கிருதத்தில்
பிரதமை என்கின்றனர்

இப்படியே இரண்டாம் நாளை துவிதியை எனவும்
மூன்றாம் நாளை திரிதியை எனவும்
நாளாம் நாளை சதுர்த்தி எனவும்
ஐந்தாம் நாளை பஞ்சமி எனவும்
ஆறாம் நாளை சஷ்டி  எனவும்
ஏழாம் நாளை சப்தமி எனவும்
எட்டாம் நாளை அட்டமி எனவும்
ஒன்பதாம் நாளை நவமி எனவும்
பத்தாம் நாளை தசமி எனவும்

பதினோராம் நாளை ஏக் பிளஸ் தஸ்
என்பதுவாய் ஏகாதஸி எனவும்
பன்னிரண்டாம் நாளை தோ பிள்ஸ் தஸ்
என்பதுவாய் துவாதஸி எனவும்
பதிமூன்றாம் நாளை திரி பிளஸ் தஸ்
என்பதுவாய் திரியோதஸி எனவும்
பதி நான்காம் நாளை சதுர் பிளஸ் தஸ்
என்பதுவாய் சதுர்தஸி எனவும் குறிப்பிடுகிறார்கள்

பதினைந்தாம் நாள் பௌர்ணமி ஆகிவிடும்
இது வளர்பிறை

பின் இங்கிருந்து மீண்டும் ஒவ்வொரு நாளாக
வந்து பதினைந்தாம்  நாளில் மீண்டும்
அமாவாசை வந்துவிடும்
இது தேய்பிறை

இதை மட்டும் நாம் சரியாகப் புரிந்து கொண்டால்
அன்றைய தின் நட்சத்திரத்தைக் கண்டுபிடிப்பது
மிக மிக எளிது

மிகச் சுருக்கமாகச் சொன்னால்
சூரியனிடம் இருந்து சந்திரன் இருக்கும் தூரம்
திதி எனச் சொன்னால்
சந்திரன்  மிகச் சரியாக இருக்குமிடம் நட்சத்திரம்
அவ்வளவே

இன்னும் விளக்கமாகச் சொன்னால்
மதுரையிலிருந்து வடக்கே 100 கிலோமீட்டரில் இருக்கிறேன்
எனச் சொல்வதும் நான் திருச்சியில் இருக்கிறேன் எனச்
சொல்வதும் ஒன்றுதானே
அது மாதிரிதான் இது " எனச் சொல்லி நிறுத்தினான்

எனக்கு புரிந்தது போலத்தான் இருந்தது

(தொடரும் )

22 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தஸ் என்றால் ஹிந்தியில் பத்து.

தஸமி என்பது பத்தாவது திதி.

ஏகாதஸி முதல் சதுர்தஸி வரை அந்த 10 என்கிற தஸ்ஸுடன் ஏகம், துவா, திர்யோ, சதுர் என்ப்தைச் சேர்த்து 11, 12, 13, 14ம் நாட்களுக்குச் சொல்கிறோம் என்ற் விளக்கம் அருமை.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மிகச் சுருக்கமாகச் சொன்னால், சூரியனிடம் இருந்து சந்திரன் இருக்கும் தூரம் திதி எனச் சொன்னால்
சந்திரன் மிகச் சரியாக இருக்குமிடம் நட்சத்திரம்
அவ்வளவே//

மிகச்சுலபமாகச் சொல்லி விட்டார் உங்கள் நண்பர். ஆனால் சூரியனிட்மிருந்து மிகச்சரியாக சந்திரன் இருக்குமிடத்தை எப்படி நம்மால் சரியாக கணித்துச்சொல்ல முடியும்?

அதற்கும் ஏதாவது சுலபமான வழி வைத்திருப்பார், அதைப்பற்றி இனிவரும் பகுதிகளில் புரியும்படியாகச் சொல்வார் என எதிர்பார்க்கிறேன்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

பதிவு மிகுந்த சுவாரஸ்யமாகவே செல்கிறது.

எங்கோ தொலவில் மிகத்தொலைவில் இருக்கும் சூரியனையும், சந்திரனையும், நம் வீட்டு மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு, பக்ஷம், திதி, ந்க்ஷத்திரம் கணிப்பது என்பது வியப்பாகவே உள்ளது,

தொடருங்கள் ....... வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தத்தொடரில் பலருக்கும் பலவித சந்தேகங்கள் ஏற்படக்கூடும். அவர்களுக்கு அதைப்பற்றி கேட்டு தெளிய ஏதோ ஒரு தயக்கம் இருக்கக்கூடும்.

யாருக்கு எந்த ஒரு சிறிய சந்தேகம் ஏற்பட்டாலும், உடனடியாக அதை பின்னூட்டப்பெட்டியில் அவர்கள் தெரிவிக்க வேண்டும். அதற்கு தாங்கள் பின்னூட்டப்பெட்டியிலேயே விளக்கம் அளிக்க வேண்டும், என கேட்டுக்கொள்கிறேன்.

G.M Balasubramaniam said...


கோபாலகிருஷ்ணனின் கேள்விகள் என் மனதிலும். தொடர்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

சூரியனிடம் இருந்து சந்திரன் இருக்கும் தூரம்
திதி எனச் சொன்னால்
சந்திரன் மிகச் சரியாக இருக்குமிடம் நட்சத்திரம்
அவ்வளவே

புரிகிறது ஐயா. எளிமையான வரிகளில் அருமையான விளக்கம் . நன்றி ஐயா. தொடருங்கள் தொடர்கிறேன்

வெங்கட் நாகராஜ் said...

எளிமையான விளக்கம்.....

தொடர்கிறேன்....

த.ம. 2

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எளிதில் புரியும் வண்ணம் விளக்கம் அளித்துள்ளீர்கள்
நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 3

சக்தி கல்வி மையம் said...

பதிவு சுவாரஸ்யமாகவும், எளிமையாகவும் இருக்கிறது...

இளமதி said...

மிகவும் அருமைதான் விளக்கம் ஐயா!
ஆனால்... எப்படித் தாளும் எழுதுகோலும் இல்லாமல் வெறும் வானமண்டலத்தை மட்டும் பார்த்து திதி நட்சத்திரம் கணிப்பது?...

தூரத்தை வைத்துக் கணிப்பதற்குக் கணக்குப் பார்ப்பது வான மண்டலத்திலல்லவா?
ஹும்!.. எனக்குத்தான் புரியவில்லைப் போலும். தொடருங்கள் ஐயா... போகப்போகப் புரியும்...:).

த ம.5

MANO நாஞ்சில் மனோ said...

இப்பதான் எனக்கும் லேசா புரியுராப்ல இருக்கு குரு.

ஏகாதசி ஏக் தஸ்......வாவ்......ஹிந்தியா !!!!

கீதமஞ்சரி said...

குழந்தைக்குக் கற்றுத்தருவது போல் மிக எளிமையான முறையில் இன்றைய நாளை வானைக்கொண்டு கணிக்கக் கற்றுத்தரும் தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி ரமணி சார். ஆவல் மாறாது, வியப்பு விலகாது தொடர்ந்துவருகிறேன்.

ADHI VENKAT said...

அருமையான விளக்கங்கள். தொடர்கிறேன்.

த.ம 6

Avargal Unmaigal said...

எனது இன்றைய வலைப்பதிவில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடுத்து எனது பதிவிற்கு நல்ல கருத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் அதற்கான பதிலை தருமாறு உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்,

உங்களை நான் தொந்தரவு செய்வதாக நினைத்தால் மன்னிக்கவும்

http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html
நன்றி

அன்புடன்
மதுரைத்தமிழன்

கோமதி அரசு said...

மிக எளிமையாக சொல்லி வருகிறீர்கள் நன்றி.

vimalanperali said...

நல்ல அறிவியல் பதிவு/

RajalakshmiParamasivam said...

நன்றாக விளங்கும்படியாக இருக்கிறது பதிவு. ஒவ்வொரு திதிக்கும் சொல்லும் காரணங்கள் அருமை.

அப்பாதுரை said...

தலை சுத்துது என்றாலும் படிக்கத் தோணுது.

Ranjani Narayanan said...

எளிய விளக்கங்கள் - எங்களுக்கும் புரிவது போலத்தான் இருக்கிறது.
தொடருங்கள், படிக்கக் காத்திருக்கிறேன்.

Anonymous said...

அடடே , வானியில் எளிய நடையில் ...
இது ஜோதிடத்தில் முடியுமோ ?
எது எப்படி இருப்பினும் எமக்கு விருந்து தானே !


மாதேவி said...

எளிமையான விளக்கம்.

Post a Comment