Thursday, August 15, 2013

இழந்துபின் தேடுவதைத் தவிர்ப்போம்

சாலை கடக்கும் ஆடுகள்
கடித்துக் குதறிவிடாமல்
மரமாகி அது தன்னைத் தானே
காக்கும் சக்தி பெரும்வரை
அந்தச் செடிகளுக்கு
வேலியாக எப்போதும் இருப்போம்

தத்தித் தவழுதலன்றி
வாது சூது ஏதுமறியா
அந்தப் பச்சிளம் குழந்தை
தடுமாற்றம் ஏதுமின்றி
தன் காலில் தானாக நிற்கும்வரை
சோர்வில்லா பாதுகாவலனாய் இருப்போம்

நெடுந்தொலைவுப் பயணத்தில்
நடுவழித் தெருக்கூத்தில்
மனம் மயங்கித் தங்கிவிடாது
வாகனம் விடுத்து தேங்கிவிடாது
காத்திடும் துணையாக இருப்போம்
வழியறிந்த வழிகாட்டியாய் இருப்போம்

பருவ ஆற்றில் நீந்திக் களிக்கும்
பயமறியா பருவ  வயதினர்
உணர்வுச் சுழியினுள் சிக்கிவிடாது
காத்திடக்   கவனமாய்த் துடிப்போடு
கரையினில் எப்போதும் இருப்போம்
இழந்துபின் தேடுகின்ற வலியதனைத் தவிர்ப்போம்

45 comments:

ராஜி said...

காத்திட எப்போதும் கவனமாய்
துடிப்போடு கரையினில் எப்போதும் இருப்போம்
>>
கைக்கொடுக்க நானிருக்கிறேன் என்ற தைரியத்தை விட விட நாம நம்ம பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து என்ன பயன்?!

சசிகலா said...

தலைப்பும் அதனை தொடர்ந்த வழிகாட்டியாக அமைந்த வரிகளும் சிறப்பு ஐயா.

சக்தி கல்வி மையம் said...

இழந்துபின் தேடுகின்ற வலியதனைத் தவிர்ப்போம்// நிச்சயமாக..

வெற்றிவேல் said...

நல்ல கவிதை... இழக்கு முன் தடுத்திடுவோம்...

ரிஷபன் said...

வழியறிந்த வழிகாட்டியாய் இருப்போம்...

நல்ல கவிதை !

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இழந்துபின் தேடுகின்ற வலியதனைத் தவிர்ப்போம்//

அனைத்து வரிகளும் அருமையோ அருமை.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பிடித்தது:

//தத்தித் தவழுதலன்றி வாது சூது ஏதுமறியா அந்தப் பச்சிளம் குழந்தை தடுமாற்றம் ஏதுமின்றி தன் காலில் தானாக நிற்கும்வரை சோர்வில்லா பாதுகாவலனாய் இருப்போம்//

பாராட்டுக்கள், வாழ்த்துகள், தொடரட்டும் எங்களின் சிந்தனைக்கு தாக்கம் தரும் உங்கள் ஆக்கங்கள்.

சென்னை பித்தன் said...

நமது கடமை!

Ranjani Narayanan said...

நிச்சயம் நம் இளையதலைமுறையின் பாதுகாவலனாக, வழிகாட்டியாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

கதம்ப உணர்வுகள் said...

த.ம.5

முத்தான கவிதை…. சொத்துகளை எப்படிக்காப்போம் அதுபோல நம் சந்ததியினரை நல்வழியில் நடத்தி…. நல்லது கெட்டது எது என்று விளக்கி… நெருப்பென்றால் சுட்டுத்தான் நெருப்பென்று அறிந்து வலித்து விலகுவதாக இல்லாமல்… நெருப்பென்று காணும்போதே அறிந்து செயல்பட்டு விலகி நிற்பதால் நெருப்பின் சூடு கைவிரலை சுடுமுன்னரே காக்க நாம் முன் நிற்போம் என்று கருத்து சொல்ல வந்த கவிதை வரிகள் சிறப்பு ரமணி சார்..

உதாரணமாக ஒவ்வொன்றாக சொல்லிவிட்டு.. கடைசிப்பத்தியில் இன்றையக்காலத்து குழந்தைகளின் நிலையை… கத்திமேல் நடப்பது போன்ற நம் அறிவுரைகளை கவனமாக கையாள்வது எப்படி என்றுச்சொல்லி.. இழப்பது எத்தனை வேதனை என்றுச்சொல்லி… இழக்குமுன் அவர்களை காக்கும் வழிதனைச்சொன்னது அற்புதம் ரமணிசார்…

கதம்ப உணர்வுகள் said...

முன்பெல்லாம் சுதந்திர தினமென்றால் சாக்குலேட்டு கொடுப்பார்கள் குழந்தைகளுக்கு. இப்போதோ மரக்கன்று கொடுத்து நடச்சொல்கிறார்கள்.. எத்தனை ஆரோக்கியமான விஷயம்…. தந்த மரக்கன்றை நட்டுவைத்துவிட்டால் மட்டும் போதுமா?

மென்மையான அதன் இலையை… அதன் கொடியை ஆடோ மாடோ கடித்து கொன்றுவிடாமல் இருக்க.. தின்றுவிடாமல் இருக்க வேலி அமைத்து அது போஷாக்குடன் வளர… நீர் விட்டு… செடி கொடி மலர் இலை கூட உணர்வுகளை உள்ளடக்கியது தான்.. அதனுடன் அன்பாய் பேசி…. மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டு ஒரு குழந்தையைப்போன்று பாதுகாத்து அது வளர்ந்து தன்னைத்தானே கடினமாகி காத்துக்கொள்ளும் வரை பாதுகாக்கும் வழிகளை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும்போது… பிள்ளைகள் தன்னையும் பாதுகாக்கும் வழிகளை அதன் வழியே அறியும் வாய்ப்பை கற்கின்றனர்.. எத்தனை அற்புதம் எளிய உதாரணத்தில் ஆழ்ந்த கருத்து…

சின்னக்குழந்தைக்கு தெரிவதில்லை.. யார் நல்லவர் யார் கெட்டவர் என்று.. பொக்கைவாயை அழகாய் திறந்துக்கொண்டு மலர்ந்த சிரிப்பை கண்ணில் கொண்டு எல்லோரிடமும் தாவிவிடும் குழந்தை… பெற்றோருக்கும் நல்லோருக்கும் குழந்தையாவே தெரியும் குழந்தை காமக்கொடூரன்களின் கண்களுக்கும், கொடுமைப்புரியும் ராட்சர்களின் கண்களுக்கும் குழந்தை தன் விருப்பப்பொருளாக… தான் போகிக்கும் ஒரு உயிரற்ற பொருளாகமட்டுமே தெரிகிறது… எல்லோரின் கண்ணுக்கு அழகிய கோகுலக்கிருஷ்ணனாய் தெரிந்த குழந்தை ஏன் கம்சனின் கண்ணுக்கு எமனாய் தெரியவேண்டும்?

நான்கு வயது ஐந்து வயது பெண்குழந்தைகள் ஏழைகள் வறுமைக்காரணமாக பெற்றோர் இருவருமே வேலைக்குச்செல்ல தனியாய் இருக்கும் குழந்தைக்கு தெரிவதில்லை காமக்கொடூரன் கண்களுக்கு தான் பலியாகப்போகிறோம் என்று தெரியாமலேயே பலியாகிவிடுகின்றன 

கதம்ப உணர்வுகள் said...

அப்படி ஏதும் நடந்துவிடாமல் குழந்தைகளைக்காக்கும் பொறுப்பு பன்மடங்கு ஆகிறது…. காப்பது மட்டுமல்லாது குழந்தைகளுக்கு தைரியத்தையும்… பிரச்சனை என்றால் சமாளிக்கும் விதத்தையும்… தனக்குள் இருக்கும் சக்தியை பெருக்கும் அற்புதத்தையும் சொல்லித்தருகிறார்கள்…

டீன் ஏஜ் என்ற பருவம் எல்லா ஆண்பெண் குழந்தைகள் தாண்டியே பக்குவப்படுகிறோம்.. நமக்கே ஏற்படும் அனுபவித்தினாலேயோ அல்லது ஏதாவது அடுத்து நிகழும் நிகழ்வினைக்கண்டோ….நம் குழந்தைகளுக்கு நல்லதைச்சொல்லி அல்லது தடுக்கவே முயல்கிறோம், அறிவுரை செய்தாலோ அல்லது கண்டித்தாலோ ஒன்று எதிர்க்கிறார்கள்.. அல்லது தற்கொலைக்கு முயல்கிறார்கள்..

இதில் இருந்தெல்லாம் காத்து சக்தியாக இருந்து பத்திரமாக அரவணைத்து…. கவனமாக செயல்பட்டு மனதினை அமைதிப்படுத்தி காக்கிறோம்..


எத்தனையோ குடும்பங்களில் தினம் தினம் நடந்துக்கொண்டே தான் இருக்கிறது இப்போதும்… குழந்தைகளை பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், வளர்த்து ஆளாக்குவது ஒரு கடமையாக மட்டும் செயல்படாமல் குழந்தையின் மனதை அறிந்து அவர்கள் தானே சுயமாய் சிந்தித்து செயல்படும் வயது வரும்வரை , மனம் உறுதியாய் வைரமாய் ஆகும் வரை கவசமாய் காக்கவேண்டும் பிள்ளைகளை என்றுச்சொன்ன கருத்து அற்புதம் ரமணிசார்…


இழந்துவிட்டு அழுது புலம்புவதை விட… முன்னெச்செரிக்கையாய் செயல்பட்டு பாதுகாத்து நற்குணங்களை விதைத்து… நல்லவை செல்லும் பாதையில் கைப்பிடித்து நடக்கவேண்டும் என்று சொன்ன கவிதை வரிகள் சிறப்பு ரமணிசார்…

கருத்துள்ள கவிதை வரிகள்…. வசப்படுத்தத்தான் செய்கிறது மனதை… கருத்தை உள்ளடக்கி…

எளிமையான வார்த்தைகளில் தகுந்த உதாரணத்துடன் சொல்லிய அசத்தல் கவிதை ரமணிசார்…

கோமதி அரசு said...

காத்திடக் கவனமாய்த் துடிப்போடு
கரையினில் எப்போதும் இருப்போம்
இழந்துபின் தேடுகின்ற வலியதனைத் தவிர்ப்போம்//

அருமையான வழிகாட்டும் கவிதை.
குழந்தைகளுக்கு, அன்பும், பாதுகாப்பும், உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையும் கொடுத்துவிட்டால் குழந்தைகள் நலமாக வாழ்வார்கள்.
அற்புதமான கவிதை வழங்கியதற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான வரிகள்! வழிகாட்டியாக இருப்போம்! வளரும் தலைமுறையினை உருவாக்குவோம்! நன்றி!

இளமதி said...

மனந்தொட்ட கவிதை.
எம் உணர்வினையும் தட்டிச் செல்கிறது.

மிகமிக அருமை ஐயா!
வாழ்த்துக்கள்!

Anonymous said...

உண்மைதான் . வழிகாட்டுதல் , அதைப் பின்பற்று கிறார்களா என மேற்பார்வை செய்வதும் அவசியமே .
நல்ல கருத்துள்ள பதிவு நல் உவமைகளுடன்.

K said...

யார் யாரை எப்படிக் காத்திடல் வேண்டும் என்பதை அழகுற விளக்கிய கவிதை! பெண்களுக்கும் அவசியம் பாதுகாப்பு கொடுத்தே ஆகவேண்டும்!! வித்தியாசமான கவிதையாக இருந்தது சார்!!!!!!

மகேந்திரன் said...

இனிய வணக்கம் ஐயா ..
நலம் தானே..

அருமையான ஆக்கம் ஐயா...
பருத்து வெடிக்கும் தருணங்களில்
படர்வேலியாய் இருப்பது
நம் கடமை என உணர்த்தும்
அருமையான ஆழமான கருத்து
கொண்ட ஆக்கம்...

கீதமஞ்சரி said...

சிறப்பான வரிகள். ஆபத்து வரும்போது அசட்டையாயிருந்துவிட்டு பிறகு குய்யோ முறையோ என்று அழுதுபுரள்வதில் லாபமென்ன? A stitch in time saves nine என்று சொல்வார்கள். காலத்தே செய்யவேண்டிய கடமையை நினைவுறுத்தும் நேர்த்தியான கருவும் கவியும். பாராட்டுகள் ரமணி சார்.

மாதேவி said...

"இழந்தபின் தேடுகின்ற வழியதனை தவிர்ப்போம்" காத்தல் பற்றிய அருமையான கவிதை.

MANO நாஞ்சில் மனோ said...

காத்தல் பற்றி மிக அருமையாக சொல்லி விட்டீர்கள் குரு....!

Anonymous said...

வேலியாக, பாதுகாவலனாய், வழிகாட்டியாய் இருப்போம்.
vatikal mikka nanry
Vetha.Elangathilakam

கரந்தை ஜெயக்குமார் said...

இழந்துபின் தேடுகின்ற வலியதனைத் தவிர்ப்போம்// நிச்சயமாக..

G.M Balasubramaniam said...


நீங்கள் குறிப்பிட்டுள்ள இருப்போம்கள் பலரது இழப்புகளைத் தடுக்க உதவலாம். நாம் இழக்கும்போது இருக்கும் வலியை பிறர் நமக்கு உதவி தடுக்க எதிர்பார்ப்போமா.?

Yaathoramani.blogspot.com said...

ராஜி said...//
>>
கைக்கொடுக்க நானிருக்கிறேன் என்ற தைரியத்தை விட விட நாம நம்ம பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து என்ன பயன்?

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala said...//
தலைப்பும் அதனை தொடர்ந்த வழிகாட்டியாக அமைந்த வரிகளும் சிறப்பு ஐயா

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

//


.

Yaathoramani.blogspot.com said...

வேடந்தாங்கல் - கருண் said...//
இழந்துபின் தேடுகின்ற வலியதனைத் தவிர்ப்போம்// நிச்சயமாக//

.தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////

.

Yaathoramani.blogspot.com said...

வெற்றிவேல் said...
நல்ல கவிதை... இழக்கு முன் தடுத்திடுவோம்.../

/
.தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

ரிஷபன் said...//
வழியறிந்த வழிகாட்டியாய் இருப்போம்...
நல்ல கவிதை


.தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


//


Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இழந்துபின் தேடுகின்ற வலியதனைத் தவிர்ப்போம்//
அனைத்து வரிகளும் அருமையோ அருமை.//


.தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் said..//.
நமது கடமை!.//

தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...

Ranjani Narayanan said...
நிச்சயம் நம் இளையதலைமுறையின் பாதுகாவலனாக, வழிகாட்டியாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்//.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


.

Yaathoramani.blogspot.com said...

Manjubashini Sampathkumar //

நான் தாங்கள் விரிவாகக் குறிப்பிடுகிற
அனைத்து விஷயங்களையும் யோசித்து
கவிதைக்கென சுருக்கி சொல்லிப் போவேன்
நீங்கள் மிகச் சரியாக நான்
யோசித்தவைகளையெல்லாம் ஒரு விஷயம்விடாது
அப்படியே விளக்கிச் சொல்லி பின்னூட்டமிடுவது
எப்படி என எனக்கு உண்மையில்
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது

இந்தப் படைப்பும் தங்கள் பின்னூட்டத்தால்தான்
சிறப்புப் பெறுகிறது
விரிவான அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...







கோமதி அரசு said...//
அருமையான வழிகாட்டும் கவிதை.
குழந்தைகளுக்கு, அன்பும், பாதுகாப்பும், உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையும் கொடுத்துவிட்டால் குழந்தைகள் நலமாக வாழ்வார்கள்.
அற்புதமான கவிதை வழங்கியதற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////



Yaathoramani.blogspot.com said...

s suresh said...//
அருமையான வரிகள்! வழிகாட்டியாக இருப்போம்! வளரும் தலைமுறையினை உருவாக்குவோம்! நன்றி//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//////

!

Yaathoramani.blogspot.com said...

இளமதி said...
மனந்தொட்ட கவிதை.
எம் உணர்வினையும் தட்டிச் செல்கிறது.
மிகமிக அருமை ஐயா!
வாழ்த்துக்கள்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////////

!

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி said..//.
உண்மைதான் . வழிகாட்டுதல் , அதைப் பின்பற்று கிறார்களா என மேற்பார்வை செய்வதும் அவசியமே .
நல்ல கருத்துள்ள பதிவு நல் உவமைகளுடன்//

.தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...

மாத்தியோசி மணி மணி said...//
யார் யாரை எப்படிக் காத்திடல் வேண்டும் என்பதை அழகுற விளக்கிய கவிதை! பெண்களுக்கும் அவசியம் பாதுகாப்பு கொடுத்தே ஆகவேண்டும்!! வித்தியாசமான கவிதையாக இருந்தது சார்!!!!!!.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் said...
..
...பருத்து வெடிக்கும் தருணங்களில்
படர்வேலியாய் இருப்பது
நம் கடமை என உணர்த்தும்
அருமையான ஆழமான கருத்து
கொண்ட ஆக்கம்../
/
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...

கீத மஞ்சரி said...//

கடமையை நினைவுறுத்தும் நேர்த்தியான கருவும் கவியும். பாராட்டுகள் ரமணி//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//



Yaathoramani.blogspot.com said...

மாதேவி said...//
"இழந்தபின் தேடுகின்ற வழியதனை தவிர்ப்போம்" காத்தல் பற்றிய அருமையான கவிதை./

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


/

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ said..//.
காத்தல் பற்றி மிக அருமையாக சொல்லி விட்டீர்கள் குரு....//!

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

kovaikkavi said...
வேலியாக, பாதுகாவலனாய், வழிகாட்டியாய் இருப்போம். /

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் said...//
இழந்துபின் தேடுகின்ற வலியதனைத் தவிர்ப்போம்// நிச்சயமாக..

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள இருப்போம்கள் பலரது இழப்புகளைத் தடுக்க உதவலாம். நாம் இழக்கும்போது இருக்கும் வலியை பிறர் நமக்கு உதவி தடுக்க எதிர்பார்ப்போமா.///

தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////

Post a Comment