Monday, August 19, 2013

விஷத்தில் ஏதன்னே உள்ளுர் வெளியூர்

உன்னதமானதை
ஊருக்கும் உலகுக்கும் பயனுள்ளதை
நகர் நடுவில் நாற்சந்தி மத்தியில்
ஒளிவு மறைவின்றி
சகாய விலையில் கொடுக்க முயலுகையில்
கண்டு முகம்சுளித்து விலகும் உலகு

பயனற்றதை
மனதிற்கும் உடலுக்கும் நலமற்றதை
அரண்மனையாய் உயர்ந்த மால்களில்
அலங்கார ஆடையிட்டு மறைத்து
கூடுதல் விலைவைத்துக் கொடுக்கையில்
துள்ளி ஓடி வரும் அள்ளிப் பெருமை கொள்ளும்

அமுதம் விற்பதாயினும்
கொஞ்சம் விளம்பரக் கஞ்சா கலக்கி
ஆர்கானிக் உணவாயினும்
கொஞ்சம் அகினோமோட்டோ சுவை கூட்டி
சந்தையும் விலையும் விளம்பரமுமே
நம் தேவைகளை முடிவு செய்ய விட்டபின்
இதில் உள்ளூர் விஷமென்ன
பன்னாட்டு பகாசுர விஷமென்ன ?

24 comments:

ராஜி said...

ம்ம் நாம எதை சாப்பிடனும், எதை உடுத்தனும்ன்னு விளம்பரப்க்கள்தான் தீர்மானிக்கின்றது. சரியான அலசல். பகிர்வுக்கு நன்றிப்பா!!

Anonymous said...

போலிகளோடு சேர்ந்து வாழும் போலி உலகு இது....
Vetha.Elanagthilakam.

திண்டுக்கல் தனபாலன் said...

/// விளம்பரக் கஞ்சா /// இதில் தான் மயங்கி விடுகிறோமே...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அமுதம் விற்பதாயினும் கொஞ்சம் விளம்பரக் கஞ்சா கலக்கி//

விளம்பரம் இல்லையேல் வியாபாரமும் இல்லை.i

//இதில் உள்ளூர் விஷமென்ன பன்னாட்டு பகாசுர விஷமென்ன ?//

கரெக்ட்.

Unknown said...

அது சரி விஷத்தை கட்டிக்கிட்ட மனைவி கொடுக்கிறான்னு கூலா குடிக்கவா முடியும் ?
த .ம .4

அகலிக‌ன் said...

பன்னாட்டு விஷம் தின்றால்பகட்டாய் சாகலாமோ என்னமோ?

G.M Balasubramaniam said...


விஷம் என்று தெரிந்தாலும் பன்னாட்டு விஷம் என்றால் அதன் மவுசே தனி என்று நினைக்கிறார்களோ. ,பாராட்டுக்கள்.

கவியாழி said...

நாடக உலகில் எல்லாமே விளம்பரம்.வியாபாரம் .சரியாச் சொன்னீங்க

Ranjani Narayanan said...

இன்றைக்கு மால்கள் என்ற பெயரில் நடக்கும் கொள்ளைகளை நன்றாகச் சொன்னீர்கள். விஷத்தில் எல்லாம் ஒன்றே.
உள்ளத்தை தொடும் வரிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

இன்றைய வியாபார உலகில்,கண்னைக் கவரும் விளம்பரங்களுக்கே மதிப்பு

தி.தமிழ் இளங்கோ said...

// சந்தையும் விலையும் விளம்பரமுமே
நம் தேவைகளை முடிவு செய்ய விட்டபின் //

நன்றாகத்தான் சொன்னீர்கள்! ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குள் நுழைந்தவுடன், நமது மனதில் முதலில் வந்து நிழலாடுவது தேர்ந்தெடுக்க வைப்பது அங்கே பார்க்கும் பொருளைப் பற்றிய விளம்பரம்தான்.

ஜோதிஜி said...

அமுதம் விற்பதாயினும்
கொஞ்சம் விளம்பரக் கஞ்சா கலக்கி
ஆர்கானிக் உணவாயினும்
கொஞ்சம் அகினோமோட்டோ சுவை கூட்டி
சந்தையும் விலையும் விளம்பரமுமே
நம் தேவைகளை முடிவு செய்ய விட்டபின்

நானும் இதேபோல யோசித்ததுண்டு. ரொம்ப சிறப்பான வரிகள்.

Yaathoramani.blogspot.com said...

ராஜி said...//
ம்ம் நாம எதை சாப்பிடனும், எதை உடுத்தனும்ன்னு விளம்பரப்க்கள்தான் தீர்மானிக்கின்றது. சரியான அலசல். பகிர்வுக்கு நன்றிப்பா!!

தங்கள் உடன் முதல் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi said...//

போலிகளோடு சேர்ந்து வாழும் போலி உலகு இது.../

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

/

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said...//
/// விளம்பரக் கஞ்சா /// இதில் தான் மயங்கி விடுகிறோமே.

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...//
//அமுதம் விற்பதாயினும் கொஞ்சம் விளம்பரக் கஞ்சா கலக்கி//
விளம்பரம் இல்லையேல் வியாபாரமும் இல்லை.i
//இதில் உள்ளூர் விஷமென்ன பன்னாட்டு பகாசுர விஷமென்ன ?//
கரெக்ட்.//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA said...//
அது சரி விஷத்தை கட்டிக்கிட்ட மனைவி கொடுக்கிறான்னு கூலா குடிக்கவா முடியும்

நீங்கள் சொல்வது மிகச் சரி
குடித்துத்தான் ஆகவேண்டும்
என்னைப் போலவும்...
அருமையான வித்தியாசமான
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி //


Yaathoramani.blogspot.com said...

அகலிக‌ன் said...//
பன்னாட்டு விஷம் தின்றால்பகட்டாய் சாகலாமோ என்னமோ

?ஓ அப்படியும் இருக்கலாமோ..
அருமையான வித்தியாசமான
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி//

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam said...//
விஷம் என்று தெரிந்தாலும் பன்னாட்டு விஷம் என்றால் அதன் மவுசே தனி என்று நினைக்கிறார்களோ. ,பாராட்டுக்கள்/

?ஓ அப்படியும் இருக்கலாமோ..
அருமையான வித்தியாசமான
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி///

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் said..//.
நாடக உலகில் எல்லாமே விளம்பரம்.வியாபாரம் .சரியாச் சொன்னீங்க//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

Ranjani Narayanan said...//
இன்றைக்கு மால்கள் என்ற பெயரில் நடக்கும் கொள்ளைகளை நன்றாகச் சொன்னீர்கள். விஷத்தில் எல்லாம் ஒன்றே.
உள்ளத்தை தொடும் வரிகள்.//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் said...//
இன்றைய வியாபார உலகில்,கண்னைக் கவரும் விளம்பரங்களுக்கே மதிப்பு//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ said...//
//நன்றாகத்தான் சொன்னீர்கள்! ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குள் நுழைந்தவுடன், நமது மனதில் முதலில் வந்து நிழலாடுவது தேர்ந்தெடுக்க வைப்பது அங்கே பார்க்கும் பொருளைப் பற்றிய விளம்பரம்தான். /

/தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

ஜோதிஜி திருப்பூர் said...//

நானும் இதேபோல யோசித்ததுண்டு. ரொம்ப சிறப்பான வரிகள்.//

/தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

Post a Comment