Sunday, August 25, 2013

பதிவர் சந்திப்பு- ( 3 )

பெண் :
வெத்தலைப் பாக்கு வச்சு உன்னை
அழைச்சாங்களா-இல்லை
வீடு வந்து  உனக்குத் தாக்கல்
சொன்னாங்களா
எதுக்கு நீயும் சென்னை போக
இப்படித் துடிக்கிறே-கேள்வி
கேட்டா மட்டும் என்னை எதுக்கு
இப்படி முறைக்கிறே

ஆண் :
காசு கொடுத்து கட்சி கூட்டும்
 கூட்டமில்லடி -இது
தலைவனாக நடிகன் கூட்டும்
கூட்டமில்லடி
காசு போட்டு நாம நடத்தும்
 நல்ல கூட்டமே-இதில
கலந்துக் காம நாம இருந்தா
நமக்கும் நட்டமே

செய்திக் குள்ளே கருத்தை நுழைச்சு
 குழப்பும் பேப்பரும்-தினமும்
தொடருக் குள்ளே விஷத்தை மறைச்சு
 பரப்பும் டி. வியும்
நல்ல வழியை நம்மை விட்டு
மறைக்கப் பார்ப்பதை-தினமும்
சொல்லிச் செல்லும் உறுதி இங்கே
யாருக்கி ருக்குது ?

இரத்தச் சூடு இருக்கும் வரையில்
கும்மாளம் போட்டு-பணத்தை
கறுப்பு வெள்ளை யென்று கணக்கில்
 மறைச்சுச் சேத்து
அரசுச் சின்ன மிரட்டல் போட
மக்களைப் பார்க்கும்-நடிகரின்
முகத்தி ரையினைக் கிழிக்கும் தெனவு
 யாருக்கி ருக்குது ?

விதியைச் சொல்லி மதியை மாற்றி
 பிழைக்கும் மனிதரை-அதையே
மாற்றிச் சொல்லி பிழைப்பை ஓட்டும்
தெளிந்த எத்தரை
சரிக்குச் சரியாய் கேள்வி கேட்டு
மடக்கும் தைரியம்-இங்கு
பதிவர் தவிர உலகில் வேறு
யாருக்கி ருக்குது ?

ஆண்கள் பெண்கள்  பாகுபாடு
ஏதும் இன்றியே-மயக்கும்
ஜாதி மதங்கள் பிரிக்க முடியா
 தனித்த வழியிலே
ஆண்டு இரண்டைக் கடக்கும் பதிவர்
அமைப்புப் போலவே
நல்ல அமைப்பு உலகில் வேறு
எங்கு இருக்குது ?

பெண்:
சொல்லிச் சொல்லி கேட்கக் கேட்க
இனிக்குது மச்சான்-இன்னும்
சொல்லச் சொன்னா நூறு சொல்வே
புரியுது மச்சான்
சட்டு புட்டுனு கிளம்பி நீயும்
போய்வா மச்சான் -வரும்போது
வாச  மல்லி நாலு முழமா
வாங்கிவா மச்சான்

42 comments:

கோவை நேரம் said...

நீங்க கிளம்புங்க மச்சான்...நாங்க அங்க சந்திக்கிறோம்..ஹிஹிஹி

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வரும்போது வாச மல்லி நாலு முழமா
வாங்கிவா மச்சான்//

ஆஹா, மல்லி வாசம் வீசும் படைப்பு. ;)

MANO நாஞ்சில் மனோ said...

எல்லா பூவும் கலந்து வீசும் வாசம் இந்த கவிதை....!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை. வலைப் பூ வாசம் என்றால் சும்மாவா?

RajalakshmiParamasivam said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.....

sury siva said...

பலே பலே

சபாஷ்

சுப்பு தாத்தா

அப்பாதுரை said...

வெகு சரளம... பாராட்டுக்கள்!

Unknown said...

வலைப் பூக்களை கவிதை கேமராவில் அருமையாய் படம் பிடித்துள்ளீர்கள் !

Unknown said...

த.ம .2

முத்தரசு said...

சந்திப்பை கருத்து எனும் பூக்களால் பிண்ணீட்டீங்க

பாராட்டுக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பரோ சூப்பர்...! வாழ்த்துக்கள் ஐயா...

Anonymous said...

யதார்த்தமான எசப்பாட்டு அமர்க்களம் !

சசிகலா said...

இது என்ன அவங்க போங்க மச்சான் போங்கனு பாடுவாங்க போல... சிறப்பு ஐயா. அருமையாகவும் அர்த்தத்துடனும் சொன்னிங்க. ஆண் பெண் பேதமின்றி ஜாத மதம் கூடாத ஒரு சங்கமம் .. பதிவர் சந்திப்பு தான்.

vetha (kovaikkavi) said...

''..காசு கொடுத்து கட்சி கூட்டும்
கூட்டமில்லடி -இது
தலைவனாக நடிகன் கூட்டும்
கூட்டமில்லடி..''
Nanru.....
Vetha.Elangathilakam.

உஷா அன்பரசு said...

பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்! சந்திக்க போகும் மகிழ்ச்சி கவிதையிலும் களை கட்டுகிறது.. அசத்துங்க!

MaduraiGovindaraj said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.....

Ranjani Narayanan said...

பதிவர் சந்திப்பின் அருமையை கவிதை வரிகளில் வெகு அழகாச் சொல்லிவிட்டீர்கள். சந்திக்கும் ஆவலில் நானுன் சென்னைக்குக் கிளம்பிட்டேன்!

கோமதி அரசு said...

ஆஹா! கவிதை வெகு அருமை .
பதிவர் சந்திப்பு வெகு குதுகலமாய் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

கவியாழி said...

ஜாதி மதங்கள் பிரிக்க முடியா
தனித்த வழியிலே//உங்களின் பதிவர் விழாவுக்கான பக்களிப்பு மிகச் சிறப்பு

Unknown said...

! நலமா! இரமணி!
தங்கள் கவிதை பதிவர் குழுமத்தின் கொள்கை விளக்கமாக அமைந்துள்ளது! மிகவும் நன்று!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமை அருமை. பதிவர் திருவிழா வரவேற்புக் கவிதை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 7

Yaathoramani.blogspot.com said...

கோவை நேரம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam /

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

sury Siva said...//
பலே பலே
சபாஷ்/

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை said...//
வெகு சரளம... பாராட்டுக்கள்!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA said...//
வலைப் பூக்களை கவிதை கேமராவில் அருமையாய் படம் பிடித்துள்ளீர்கள் !//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

முத்தரசு said...//
சந்திப்பை கருத்து எனும் பூக்களால் பிண்ணீட்டீங்க //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said..//.
சூப்பரோ சூப்பர்...! வாழ்த்துக்கள் ஐயா

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////


Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி said...
யதார்த்தமான எசப்பாட்டு அமர்க்களம் //

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////


Yaathoramani.blogspot.com said...

Sasi Kala said...//
இது என்ன அவங்க போங்க மச்சான் போங்கனு பாடுவாங்க போல... சிறப்பு ஐயா. அருமையாகவும் அர்த்தத்துடனும் சொன்னிங்க. ஆண் பெண் பேதமின்றி ஜாத மதம் கூடாத ஒரு சங்கமம் .. பதிவர் சந்திப்பு தான்.....


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////
.

Yaathoramani.blogspot.com said...

kavithai (kovaikkavi) said...//
''..காசு கொடுத்து கட்சி கூட்டும்
கூட்டமில்லடி -இது
தலைவனாக நடிகன் கூட்டும்
கூட்டமில்லடி..''
Nanru...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு said..//.
பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்! சந்திக்க போகும் மகிழ்ச்சி கவிதையிலும் களை கட்டுகிறது..


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///அசத்துங்க!//


Yaathoramani.blogspot.com said...

வா.கோவிந்தராஜ், said..//.
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்../

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

Ranjani Narayanan said...//
பதிவர் சந்திப்பின் அருமையை கவிதை வரிகளில் வெகு அழகாச் சொல்லிவிட்டீர்கள். சந்திக்கும் ஆவலில் நானுன் சென்னைக்குக் கிளம்பிட்டேன்///

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு said...//
ஆஹா! கவிதை வெகு அருமை .
பதிவர் சந்திப்பு வெகு குதுகலமாய் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/..


Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் said..//.
ஜாதி மதங்கள் பிரிக்க முடியா
தனித்த வழியிலே//உங்களின் பதிவர் விழாவுக்கான பக்களிப்பு மிகச் சிறப்பு/

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/./

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம் said...//
! நலமா! இரமணி!
தங்கள் கவிதை பதிவர் குழுமத்தின் கொள்கை விளக்கமாக அமைந்துள்ளது! மிகவும் நன்று!/

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/./


Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN said...//
அருமை அருமை. பதிவர் திருவிழா வரவேற்புக் கவிதை/

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/.///


Post a Comment