Saturday, September 26, 2015

புதுகைப்பதிவர் திருவிழா ( 9 )) கால இயந்திரத்தின் தயவில் ( 3 )

நான் பதிவர் திரு விழாவுக்கு வருகிற
போதெல்லாம்நமது பதிவர்களின் நூல்களை
வாங்குவதற்கென்றேஒரு தொகையை
ஒதுக்கி வருவேன்

இம்முறை வெளியிடப்படுகிற நூல்கள் அல்லாது
பதிவுலகப் பிதாமகரின் சிறுகதைத் தொகுதிகளும்
கீத மஞ்சரி , கவிஞர் ரூபன் ,
வாத்தியாரின் ஜோதிட நூல்அவசியம் அனைவரின்
வீட்டுலும் இருக்கவேண்டிய  டாலர் தேசம் ,
தென்றல் சசிகலாவின் கவிதைகள்
புலவர் ராமானுஜம் அவர்களின் கவிதை நூல்
மற்றும் பல பதிவர்களின் புத்தகம் இருந்தது
 மகிழ்வளித்தது

கூடுமானவரையில் அனைத்துப் பதிவர்களின்
நூலிலும்ஒவ்வொன்றை வாங்கிக் கொண்டு
அந்த பிரமாண்டமானஅரங்கினுள் நுழைந்தேன்

அரங்கினுள் நுழைந்ததுமே அந்த
மேடை அமைப்பும்மேடையின் பின்புறம்
அமைக்கப்பட்டிருந்த
நமது லோகோ தாங்கிய ஃபிளக்ஸும்
ஒரு பிரமாண்டமான நிகழ்வுக்குத் தான்
வந்திருக்கிறோம் என்கிற உணர்வினை
உறுதி செய்தன

மேடை ஒலி வாங்கியின் முன் அழகாக
தொங்கவிடப்பட்டிருந்த போடியம்
பேனர் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது

ஒலிம்பிக் கொடியை எப்படி அடுத்து
எந்த நாட்டில் நடக்கப் போகிறதோ
அந்த நாட்டினரிடம் ஒப்படைத்தல் போல்
இந்த பேனரையும்அடுத்து பதிவர் சந்திப்பு
நடக்க இருக்கிற மாவட்டத்துக்காரரிடம்
ஒப்படைக்க இருப்பதாக அறிந்து மகிழ்வுற்றேன்

நான் ஏற்கெனவே வந்து அமர்ந்திருந்த
நான அறிந்தபதிவர்கள் அனைவரிடமும்
உரையாடிவிட்டு( வயதுக்கு ஏற்றார்ப்போல)
அரங்கின் முன் வரிசையில்அமர்ந்திருந்த
மூத்த பதிவர்களுடன் அமர்ந்து கொண்டேன்

பதிவர்கள் சந்திப்பின் நிர்வாகக் குழு
உறுப்பினர்களுடன் முத்து நிலவன் ஐயா அவர்கள்
மேடைக்கு முக்கியஸ்தர்களை
அழைக்கத் துவங்க விழா அற்புதமாய்த்  துவங்கியது

( தொடரும் )

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

இப்போதே பதிவர் சந்திப்பு களைகட்டத் துவங்கி விட்டது. நானும் அங்கே இருந்திருந்தால் உங்களுடன் உரையாடியிருப்பேன்.... சென்னை சந்திப்பில் நாம் பேசிக் கொண்டிருந்தது போல!

தி.தமிழ் இளங்கோ said...

உங்களது கால இயந்திரத்தை (TIME MACHINE ) வலைப்பதிவர் சந்திப்பு குழுவினரும் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதுபோல் தெரிகிறது. பார்ப்போம்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
எங்களுக்கெல்லாம் இந்த கால இயந்திரத்தில் பயணிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே
தம+1

vimalanperali said...

நல்ல வளமிக்க கற்பனை,,/கற்பனைகள்தானே மெய்ப்பித்தலுக்கு அழகாகிப்போகிறது.நன்றி வணக்கம்/

G.M Balasubramaniam said...

என்னென்ன ஹேஷ்யங்கள்.?

”தளிர் சுரேஷ்” said...

கற்பனை களை கட்டுகிறது!

கீதமஞ்சரி said...

என்னுடைய நூலும் பதிவர் சந்திப்பு விழாவில் இடம்பெற்றிருப்பதாகக் கண்ட காட்சியே மனத்தில் மிகவும் மகிழ்வளிக்கிறது. நானே விழாவில் இருப்பது போன்ற உணர்வைத்தருகிறது. மனமார்ந்த நன்றி ரமணி சார்.

Post a Comment