Monday, December 21, 2015

சிம்பென்னும் வம்பனை...

தீயவை எல்லாம் சாலை யோரங்களில்
மிக எளிதாய்க் கிடைக்க

தேவையானவைகள்
அவசியமானவைகள்
எல்லாம் கிடைக்காதும்
எங்கோ ஒளிக்கப்பட்டிருக்கும் சூழலில்,

கிடைப்பதே சரியானதென்றும்
எட்ட இருப்பவையெல்லாம்
தேவையற்றவை என்றும்

இளைய சமூகம்
குழம்பிக் கிடைக்கையில்

நரகலை காற்றில் வீசுபவனை
சகித்துக் கொள்ளாதீர்கள்

மக்களின் கவனத்தைத்  திருப்ப
இதுவும் ஒரு சதியென
இவனும் ஒரு கருவியென
புரிந்த போதிலும்...

கஞ்சா விற்பதும்
பயன்படுத்துவதும் மட்டுமன்று
மறைவாய் விளைவிப்பதும் குற்றமென்று
.அறியாததுபோல் நடிப்பினும்...

நரகலை காற்றில் வீசுபவனை
சகித்துக் கொள்ளாதீர்கள்

தவறுக்கு மண்டியிடாதவரை அவனை
மனிதனென்றே மதியாதீர்

9 comments:

KILLERGEE Devakottai said...

சவுக்கடியான வார்த்தைகள் கவிஞரே
தமிழ் மணம் 2

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிஞரே.....

தாங்கள் சொல்லிய ஒவ்வொரு வரிகளும்.நன்றாக உள்ளது..மன்னிப்பு கேட்கும் வரை.அவனின் படத்தையும் அவனையும் புறக்கணிக்க வேண்டும் உண்மைதான்.

நன்றி
அன்புடன்
ரூபன்

G.M Balasubramaniam said...

யாரையோ எதற்கோ சாடுகிறீர்கள் என்று மட்டும் புரிகிறது

VVR said...

சரியான சாட்டுரை

VVR said...

சரியான சாட்டுரை

Geetha said...

உண்மைதான் சார்..களையெடுக்க வேண்டும் நிறைய..

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

மிகச்சரி ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

மண்டியிட்ட போதும்
அவனை மனிதனென
எப்படி ஒப்புவது
தம =1

Yarlpavanan said...

"தவறுக்கு மண்டியிடாதவரை அவனை
மனிதனென்றே மதியாதீர்" என்பதே
எனது வேண்டுதலுமாகும்!

Post a Comment